பெற்ற குழந்தையே யாருன்னு எனக்கு தெரியல! 6 வருட ஞாபகம் மறந்து போச்சு.. சீரியல் நடிகை உருக்கம்
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் உட்பட பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை கேரோலின் சில மாதங்களுக்கு திடீரென உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு கோமாவிற்கு சென்று இருக்கிறார். அப்போது பல மாதங்களாக சிகிச்சையில் இருந்து இப்போது மீண்டு வந்திருக்கிறார். ஆனாலும் கடந்த ஆறு வருடங்களாக தனக்கு நடந்த எதுவும் ஞாபகம் இல்லை என்று அவர் கண்ணீரோடு பேசிய பேட்டி பலரையும் வருத்தமடைய செய்ய வைத்திருக்கிறது.
பொதுவாக சீரியல்கள், சினிமாவில் நடிக்கும் நடிகர்களில் வாழ்க்கை அவர்கள் நடிக்கும் கேரக்டரை போலவே சந்தோஷமாக இருப்பதில்லை. அவர்கள் நடிக்கிறார்களே தவிர அவர்களுடைய வாழ்க்கையில் பல சோகங்களும், துயரங்களும் கலந்திருக்கிறது என்று இப்போது சீரியல் நடிகை கேரோலின் பேசியது பலரையும் வருத்தமடைய செய்ய வைத்திருக்கிறது.

சீரியல் நடிகை
ஆரம்பத்தில் ஐடி வேலை பார்த்து வந்த கேரோலின் பிறகு விஜேவாக தொடங்கி அதற்கு பிறகு சீரியல் மற்றும் சினிமாவில் நடிக்க தொடங்கி இருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் சீரியலிலும் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அதுபோல ஜீ தமிழ், சன் டிவி போன்ற சீரியல்களிலும் இவர் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாள சீரியல்களிலும் நடித்திருந்தார். ஆனால் இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது.
காதல் திருமணம்
கேரோலின் காதலித்து தான் திருமணம் செய்து இருக்கிறார். அவருடைய கணவரும் மேக்கப் ஆர்டிஸ்ட் ஆக இருக்கிறார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டு இருந்த நிலையில் கர்ப்பமாக இருந்திருக்கிறார். அப்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான ஜமீலா சீரியலில் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஆறு மாதம் வரைக்கும் சீரியலில் நடித்துக்விட்டு பிறகு சீரியலை விட்டு விலகி வீட்டில் ரெஸ்ட் எடுத்திருக்கிறார்.
உடல்நிலை பிரச்சனை
ஆனாலும் அவர் நார்மலாக தான் இருந்திருக்கிறார். பிறகு பிரசவத்திலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்து இருக்கிறது. பெண் குழந்தை பெற்றெடுத்திருக்கிறார். குழந்தை பிறந்து ஐந்தாவது மாதத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு திடீரென்று கட்டிலில் இருந்து திரும்பும் போது இவருக்கு தலை சுற்றல் வந்து விழுந்து விட்டாராம். பிறகு அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்த போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டிருக்கிறது. அதற்கு பிறகு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து இருக்கிறார்கள்.
மருத்துவ செலவு
அப்போது அவர் கோமாவிற்கு சென்று விட்டாராம். ஒரு நாளைக்கு 90 ஆயிரம் வரைக்கும் இவருக்கு மருத்துவ செலவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஆறு மாதங்களுக்கு மேலாக கோமாவில் இருந்திருக்கிறார். பிறகு கணவர் மற்றும் குடும்பத்தினர் பணத்திற்காக பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள். சினிமா துறையில் ஒரு சிலர் இவருக்கு உதவி செய்திருக்கிறார்கள். ஆனாலும் இவரை குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்கள் போராடி மீட்டுக் கொண்டு வந்திருக்கின்றனர்.
எதுவும் நினைவு இல்லை
கேரோலின் கோமாவில் இருந்து திரும்பியதும் அவருக்கு கடந்த ஆறு வருடங்களாக நடந்த எல்லா விஷயங்களும் மறந்து போய்விட்டதாம். அவருடைய கணவர் மட்டுமல்லாமல் சொந்த குழந்தையே யார் என்று கேட்டிருக்கிறார். பிறகு அவருடைய திருமண புகைப்படங்கள் கர்ப்பமாக இருக்கும் போது எடுத்த வீடியோக்கள் என எல்லாவற்றையும் காட்டி இருக்கிறார்கள். அதற்கு பிறகும் இவருக்கு நினைவு வரவில்லை. இப்ப வரைக்கும் அவருக்கு கடந்த ஆறு வருடத்தில் என்ன நடந்தது என்று நினைவுக்கு வரவே இல்லை என்று பேட்டியில் கரோலின் பேசியிருக்கிறார்க்கிறார்.

மருத்துவர்கள் விளக்கம்
எல்லா செக்கப்பும் பார்த்து விட்டார்கள் ஆனாலும் எனக்கு எதனால் இப்படி ஆனது என்று மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உங்களுக்கு எல்லாமே நார்மலாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஆனால் எனக்கு எதனால் இவ்வளவு பிரச்சனைகள் வந்தது என்று யாருக்கும் தெரியவில்லை என்று இப்போது கேரோலின் பேசியிருக்கிறார். இவர் பழைய படி உடல் ஆரோக்கியத்துடன் மீண்டும் தன்னுடைய குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications