Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

90ஸ் ஃபேவரைட் நடிகை தீபா வெங்கட் நினைவு இருக்கிறதா? இந்த பிரபலம்தான் இவருடைய கணவரா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 90ஸ் ரசிகர்களின் ஃபேவரட் நடிகை தீபா வெங்கட் தன்னுடைய குடும்ப புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை தீபா வெங்கட் பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக இருந்து வருகிறார்.

நடிகை தீபா வெங்கட்டை அதிகமான ரசிகர்கள் தேடி வரும் நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

Serial Actress Deepa Venkat Current Status Who is Her Husband

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த பல நடிகைகள் ஒரு சில வருடங்கள் கழித்து எங்கே போனார்கள் என்று தெரியாமல் பொய்கி விடுகிறது. அந்த மாதிரி தான் 90ஸ் பேவரைட் சீரியல் நடிகை ஆக இருந்த தீபா வெங்கட் தற்போது எங்கே போனார் என்று ரசிகர்கள் தேடி வருகின்றனர். இவர் இப்போது சீரியல் களில் எதிலும் நடிக்காமல் இருந்து வருகிறார்.

அதனால் அவருடைய ரசிகர்கள் அவரை தேடி வருகிறார்கள். தீபா வெங்கட் ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் இருக்கிறார். ஹலோ எஃப்எம்மில் சென்னையில் ரேடியோ டிஸ்க் ஜாக்கியாகவும் இருக்கிறார். இவர் 80க்கும் மேற்பட்ட சீரியல்களிலும், ஒரு சில திரைப்படங்களில் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அதோடு இவர் சிம்ரன், சினேகா, ஜோதிகா, நயன்தாரா, அனுஷ்கா செட்டி ,காஜல் அகர்வால் ஐஸ்வர்யாராய் பச்சன் போன்றவர்களுக்கு டப்பிங் செய்து இருக்கிறார். இதனால் இவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருதும் வழங்கி இருக்கிறது.

நடிகை தீபா அரவிந்தசாமி, ரேவதி, ஸ்ரீவித்யா போன்றோர் நடித்த பாசமலர்கள் திரைப்படத்தின் மூலமாகத்தான் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார். அதே நேரத்தில் இவர் அப்பு என்ற திரைப்படத்தில் தேவயானிக்காக டப்பிங் பேசிதான் தன்னுடைய டப்பிங் வாழ்க்கையையும் தொடங்கி இருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் மயக்கம் என்ன திரைப்படத்தில் ரிச்சா காங்கோபத்துக்காக டப்பிங் பேசியதற்காக நார்வே தமிழ் திரைப்பட விருதையும், 2019ல் இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நயன்தாராவிற்காக சிறந்த டப்பிங் கலைஞராகவும், 2020ல் கேம் ஓவருக்காக சிறந்த டப்பிங் கலைஞருக்கான ஜே எஃப் டபிள்யூ விருதையும், 2023 ஆம் ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கான ஜே எஃப் டபிள்யூ விருதையும் பெற்று இருக்கிறார்.

Serial Actress Deepa Venkat Current Status Who is Her Husband

இந்த நிலையில் இவர் ஐடி துறையில் பணிபுரியும் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தன்னுடைய கணவரோடு தீபா வெங்கட் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தொகுப்பாளர் விஜய் தீபா வெங்கட்டை கலாய்த்த நேரத்தில், என்னுடைய கணவர் இங்கே தான் இருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது அந்த வீடியோஸ் வைரலாகி வருகிறது.

அது மட்டுமல்லாமல் தீபா வெங்கட் ரசிகர்கள் அவர் எங்கே போனார் என்று சமூக வலைத்தளத்தில் தேடி வருகின்றனர். அதனால் அவருடைய குடும்ப புகைப்படத்தையோ ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தீபா வெங்கட் தன்னுடைய திருமண நாளில் தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு கணவர் குறித்து உருக்கமாக பதிவிட்ட பதிவை தற்போது சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+