திருமதி செல்வம் வில்லி ஞாபகம் இருக்கா? 50 வயதிலும் அசத்தல்! ஆனால் சொந்த மகனே கேட்ட கேள்வி
சென்னை: சீரியல் நடிகை கௌதமி வேம்பு நாதனை பல சன் டிவி சீரியல்களில் பார்த்திருப்போம். வில்லியாகவே நடித்து பிரபலமடைந்த கவுதமி வேம்புநாதன் இப்போது 50 வயதிலும் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தபடி கொடுத்த பேட்டி தான் இணையத்தில் பரவி வருகிறது.
வில்லியாகவே பார்த்து பழகிய கவுதமி வேம்புநாதனின் பேச்சைக் கேட்ட ரசிகர்கள் இவர் இவ்வளவு பெரிய விளையாட்டு வீராங்கனையா என்று வியந்து போயிருக்கிறார்கள். அதே நேரத்தில் அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த சோகங்கள் குறித்தும் அந்த பேட்டியில் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

கிட்டத்தட்ட 20 வருடங்களாக சீரியல் சினிமா என வில்லி காமெடி கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் கவுதமி வேம்புநாதன் சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில் நான் நடிப்புக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. சன் டிவியில் நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியில் நிம்மதியா உள்ளே வந்தேன். அதற்குப் பிறகு மாயாவி, மாரிசன், சூலம், திருமதி செல்வம் போன்ற பல சீரியல்களில் நடித்துக் கொண்டே இருக்கிறேன்.
கிட்டத்தட்ட 20 வருடங்களில் 18 வருஷங்கள் சன் டிவியில் தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை நடிகையாக தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் 800 மீட்டர் ரிலே ரன்னர் மாவட்ட அளவில் போனேன். அதற்கு மேலே போக முடியாமல் ஆகிவிட்டது. காரணம் அப்போ எனக்கு திருமணம் ஆகிவிட்டது. அதனால் போக முடியவில்லை. பள்ளி காலத்தில் நான் விளையாட்டுத்துறையில் அதிகமான கவனத்தை செலுத்தி வந்தேன்.

அதனால் அந்த நேரத்தில் எல்லாம் எனக்கு நடிப்பதற்கு ஆர்வம் கிடையாது. என்னுடைய அப்பா ஒரு சின்னத்திரை நடிகராக இருந்ததால் அவருக்கு ஒரு வாய்ப்பு வந்தது. அவர்தான் என்னிடம் கேட்டார் நீ நடிக்க வரியா என்று நானும் சரி என்று சொல்லி இருந்தேன். கல்யாணத்திற்கு பிறகு தான் நடிக்க வந்தேன். ஆனாலும் நான் நடிக்க வரும்போது என்ன கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்று நினைத்து வந்தேன்.
ஆனால் எனக்கு வந்ததெல்லாம் வில்லி தான். வில்லியாக நடித்தாலும் மக்கள் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்துதான் நான் நடிக்க ஆரம்பித்தேன். நான் நடிப்பதை பார்த்து பலர் என்னிடம் பேசுவதற்கு கூட பயப்படுவார்கள். என்னுடைய மகன் என்னுடைய சீரியல்களை பார்க்கும்போது அம்மா நீ இப்படி நடிப்பதால் பிறகு எனக்கு பொண்ணு கிடைக்காமல் போயிரும்னு தோணுது என்று சொல்லுவான். அதுபோலவே ஒருமுறை அவளுக்கு நடக்கவும் செய்தது.

ஒரு பொண்ணு வீட்டில் எங்களுடைய ஃபேமிலி போட்டோவை காட்டியிருக்கிறார்கள். அப்போது என்னை பார்த்ததும் அந்த பொண்ணு வீட்டில் இவங்க பெரிய வில்லியாச்சே என்று பயப்பட்டு இருக்கிறார்கள். ஆனால் என்னிடம் பேசியவர்கள் நான் இவ்வளவு ஜாலி டைப்பா என்று கேட்பார்கள் என்று பேசி இருக்கும் கவுதமி வேம்புநாதன் தனக்கு 50 வயது ஆனாலும் நான் இப்பவும் சிக்கென்று இருப்பதற்கு காரணம் உடற்பயிற்சி தான்.
உடற்பயிற்சி செய்வதற்கு எனக்கு எப்போதும் அழுப்பு ஏற்படாது. 30 வயது வரைக்கும் உடம்பில் ஒரு மினுமினுப்பு இருக்கும். அதற்குப் பிறகு பெண்கள் தங்களுடைய உடம்பை கவனித்துக் கொள்வது அவசியம். அதை நான் செய்து வருகிறேன். தொடர்ந்து என்னால் ஒர்க்அவுட் செய்வதற்கு முடியாது. நான் குறைந்தது 15 நாட்களாவது செய்வேன் என்று அந்த பேட்டியில் ஜாலியாக பேசி இருக்கும் கவுதமி வேம்புநாதனை பார்த்து இவர் திருமதி செல்வம் நாடகத்தில் பார்க்கும்போது எப்படி இருந்தார்? இப்போ இத்தனை வருஷம் கழித்தும் அப்படியே இருக்கிறாரே என்று பலர் வியந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications