நெனச்சா ரூமுக்கு வருவேன்! அவுட்டிங்கில் அட்ஜஸ்ட்மென்ட்.. கூசாமல் கேட்ட இயக்குநர்.. நடிகை பகீர்

15 நாள் அட்ஜஸ்மெண்ட் செய்தால் பட வாய்ப்பு தருவதாக இயக்குநர் கூறியதாக சீரியல் நடிகை ஜீவிதா பகீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 15 நாட்கள் அட்ஜஸ்மெண்ட் செய்ததால் பட வாய்ப்பு தருவதாக இயக்குநர் கூறியதாக சீரியல் நடிகை ஜீவிதா பகீர் தகவலை தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபிஸ் சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜீவிதா. இவர் கடைக்குடி சிங்கம் உள்ளிட்ட படங்களிலும் முக்கிய ரோல்களில் நடித்திருக்கிறார்.

சினிமாவில் ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்கிற ஆசையுடன் வந்த இவருக்கு ஆரம்ப காலகட்டத்தில் அட்ஜெஸ்மெண்ட் செய்தால் ஹீரோயினாக நடிக்க வைத்து அதிக சம்பளம் வாங்கி தருவதாக இயக்குநர் ஒருவர் தெரிவித்ததை ஜீவிதா பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

 நடிகை ஷகீலா

நடிகை ஷகீலா

நடிகை ஷகீலாவுடனான நேர்காணல் நிகழ்ச்சயின் போது இந்த சம்பவம் குறித்து ஜீவிதா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் சினிமாவில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் தருவதாக சிலர் போனில் என்னை அழைத்தார். பாலுமகேந்திராவின் ஆபிஸுக்கு பக்கத்தில் தங்களுடைய ஆபிஸ் இருப்பதாக தெரிவித்தனர். அப்போது நான் சினிமாவுக்கு புதுசு என்பதால் எனக்கு யாரையும் தெரியாது.

ஆட்டோ

ஆட்டோ

இந்த வாய்ப்பு வந்ததால் நான் உடனே ஆட்டோவில் கிளம்பிவிட்டேன். அங்கு எல்லாரும் என்னிடம் நல்லா பேசினாங்க. மேலும் அவர்கள் எடுக்க போகும் படத்தில் நான்தான் இரண்டாவது ஹீரோயின். முதல் ஹீரோயின் ஒரு பிரபலம் என சொன்னாங்க. எங்களுக்கு ஓகே. இனி நீங்கள்தான் ஓகே சொல்ல வேண்டும். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் உடனே ஓகே என சொன்னேன்.

 கொஞ்சம் அட்ஜஸ்ட்

கொஞ்சம் அட்ஜஸ்ட்

அதற்கு அவர்கள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணணும் என சொன்னார்கள். அட்ஜஸ்ட்மெண்ட்டா என்ன பண்ணனும் என கேட்டேன். அதற்கு அங்கிருந்த இயக்குநர் என்னை நீ அட்ஜஸ்ட் பண்ணனும்மா. கேமராமேன், தயாரிப்பாளர், மேனேஜர் ஆகியோருடனும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டும் என சொன்னார். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் உங்க ரூமுக்கு வருவோம்.

15 நாட்கள்

15 நாட்கள்


தஞ்சாவூர் பக்கத்துல 15 நாட்கள் இப்படி அட்ஜெஸ்ட்மென்ட் நடக்கும். இதுக்கெல்லாம் நீங்கள் ரெடி என்றால் நீங்கள் கனவிலும் நினைத்து பார்க்காத அளவுக்கு ஊதியத்தை நாங்கள் கொடுக்கிறோம். அந்த ஊதியத்துடன் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தந்து உங்களை சினிமாவில் பெரிய ஹீரோயினாக உயர்த்துவோம் என்றெல்லாம் சொன்னதை கேட்டதும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.

கண்ணீர்

கண்ணீர்

உடனே கண்களில் தண்ணீரும் வந்தது. அவர்கள் முன் அழக் கூடாது என்று அங்கிருந்து கிளம்பிவிட்டேன் என்றார். இது போல் மற்றொரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது: பாசிட்டிவ், நெகட்டிவ் ரோல், போலீஸ் கெட்டப் என பல்வேறு விதமாக எனது திறமைகளை காட்டியிருக்கிறேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் நான் நடிக்கவில்லை.

மேனேஜருடன் அட்ஜஸ்ட்மென்ட்

மேனேஜருடன் அட்ஜஸ்ட்மென்ட்

மேனேஜருடன் என்னை அட்ஜெஸ்ட் செய்ய சொன்னார்கள். அவர்கள் சொல்லும் ஆட்களை எல்லாம் அனுசரித்து போனால் பெரிய சம்பளம், பட வாய்ப்பு என எல்லாமே கிடைக்கும் என சொன்னார்கள். இது போன்று எல்லா ஆர்டிஸ்ட்களுக்கும் நடக்கும் என சொல்ல முடியாது. ஆனால் என்னிடம் இப்படி கேட்டார்கள். நான் முகத்திற்கு நேராக முடியாது என சொல்லிவிடுவேன். பட வாய்ப்புகளும் எனக்கு கிடைக்காது என ஜீவிதா பேசியிருந்தார்.

வரலட்சுமி

வரலட்சுமி

அண்மைக்காலமாக சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து நடிகை வரலட்சுமி உள்ளிட்டோர் பேசியிருந்தனர். பெரிய நடிகரின் மகளான என்னிடமே அட்ஜெஸ்ட்மென்ட் குறித்தெல்லாம் பேசினார்கள் என்றால் சினிமாவில் சாதிக்க வரும் சாதாரண பெண்களின் நிலை என்ன என கேட்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+