சூப்பர் சிங்கரில் இனி பிரியங்கா இல்லை! தொகுப்பாளினியாக வந்த சீரியல் கதாநாயகி.. செம சம்பவம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக இதுவரைக்கும் பிரியங்கா இருந்து வந்த நிலையில் இந்த வாரத்தில் பிரியங்காவிற்கு பதிலாக விஜய் டிவி சீரியல் நடிகை தொகுப்பாளினியாக வந்திருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரியாலிட்டி நிகழ்ச்சிக்கு பெயர் வாங்கிய விஜய் டிவியில் புதியது புதியதாக பல நிகழ்ச்சிகள் தொகுத்து ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ஒரு நிகழ்ச்சி வெற்றி பெற்று விட்டால் அடுத்தடுத்த சீசன்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் விஜய் டிவியில் பலருடைய ஃபேவரைட் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் சீனியர் மற்றும் ஜூனியர் என்று இரண்டு பிரிவாக நடைபெறும்.

எதிர்மறை கருத்துக்கள்
இந்த நிகழ்ச்சியை பல சீசன்களாகவே மாகாபா மற்றும் பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகிறார். இவர்கள் இருவருடைய காம்பினேஷன் நிகழ்ச்சிக்கு சுவாரசியத்தை கூட்டும். சமீப காலமாக பிரியங்காவிற்கு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக வாய்ப்பு கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் அவர் பற்றிய எதிர்மறையான கருத்துக்களும் அதிகரித்து கொண்டே இருக்கிறது.
பிரியங்காவின் திருமணம்
கடந்த வாரத்தில் தான் பிரியங்கா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இது சமூக வலைதளத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. பிரியங்கா ஏற்கனவே விஜய் டிவி பிரபலமான பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு அவரை விவாகரத்து செய்துவிட்டு சில வருடங்கள் தனியாக இருந்து வந்த அடுத்ததாக காதலித்து வசி என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். இது குறித்து பலர் நெகட்டிவாக பேசி வந்தாலும் பிரியங்காவின் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் கொடுத்து வருகிறார்கள்.
ப்ரோமோ
பிரியங்கா தன்னுடைய திருமணம் முடிந்த இரண்டு நாளில் பாவனி மற்றும் அமீர் திருமணத்தை முன் நின்று நடத்தி வைத்திருக்கிறார். ஹனிமூனுக்கு கூட போகாமல் இவர்களுடைய திருமணத்தில் கலந்து கொண்டது தனக்கு மகிழ்ச்சி தான் என்று பிரியங்கா பேசியிருந்தார். இந்த நிலையில் இந்த வாரத்திற்கான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
புது தொகுப்பாளினி
அதில் பிரியங்கா இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகை லட்சுமி பிரியா தான் களம் இறங்கி இருக்கிறார். அவரை பார்த்ததும் மாகாபா அதிர்ச்சியாகி என்ன நீ வந்திருக்க என்று கேட்க, அதற்கு லட்சுமி பிரியா அந்த Pk( பிரியங்கா) அனுப்பி வைத்த V k(மகாநதி சீரியலில் விஜய் காவேரி) தான் நான் என்று பதில் கொடுத்து இருக்கிறார்.
சிறப்பு விருந்தினர்
அதுபோல இந்த வாரத்தில் பல சுவாரசியமான சம்பவங்களும் நடைபெறுகிறது. புது தொகுப்பாளர் வந்திருக்கும் அதே நேரத்தில் இந்த வாரத்தில் ஒன் அன்ட் ஒன் பாட்டில் டாஸ்க், டிக்கெட் 2 பினாலே ரவுண்டு நடைபெறுகிறது. அதில் போட்டியாளர்கள் சிறப்பாக பாடல் பாடி அசத்துகிறார்கள். அதுபோல இந்த வாரத்தில் சிறப்பு விருந்தினராக சக்திஸ்ரீ கோபாலன் கலந்து கொள்கிறார்.
மீண்டும் பிரியங்கா
ஏற்கனவே பிரியங்கா விஜய் டிவியை விட்டு விலகப் போகிறார் என்ற செய்திகள் வலம் வரும் நிலையில் இந்த வாரத்தில் அவர் இல்லை என்ற ப்ரோமோ வெளியானதும் பிரியங்கா இனி நிரந்தரமாக விஜய் டிவியை விட்டு போய்விடுவாரா என்று கூட கமெண்ட் வந்து இருக்கிறது. ஆனால் கடந்த வாரத்தில் அவருடைய திருமணம் என்பதால் அவர் சூட்டிங் கலந்து கொண்டிருக்க மாட்டார் என்று தெரிகிறது. ஆனால் அடுத்த வாரத்தில் பிரியங்கா மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளினியாக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications