வாழ்க்கையில் பணம் மட்டுமே முக்கியமில்ல.. உறவுகள் அவசியம்! தனிமை கொடியது! சீரியல் நடிகை உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில நாட்களுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் சானிட்டரி நாப்கின் இல்லாமல் மாதவிடாய் நேரத்தில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசி லதா ராவ் வீடியோ வெளியிட்டதும் அது சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து அவர் இப்போது பணம் இருந்தாலும் உறவுகள் இல்லை என்றால் எவ்வளவு கஷ்டம் என்று உருக்கமாக பேசி இருக்கிறார்.

சீரியல் நடிகை லதா ராவ் வீடியோ

சில நேரங்களில் நாம் அனுபவிக்கும் சில விஷயங்கள் நமக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திவிடும். அதைப் பற்றி வெளியே சொல்லவா? வேண்டாமா? என்ற ஒரு குழப்பம் ஏற்படும். ஆனாலும் அதை நாம் வெளிப்படையாக சொன்னால் தானே நம்மை போல இன்னொருவர் கஷ்டப்பட மாட்டார்கள் என்று நினைப்பு ஒரு சிலருக்கு மட்டும்தான் வரும். அப்படி தான் நடிகை லதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு தோன்றியது.

Latha Rao Viral Video serial actress

மாதவிடாய் பிரச்சனை

அவர் ஹைதராபாத் போவதற்காக சென்னை விமான நிலையத்தில் வந்த போது திடீரென பீரியட்ஸ் வந்திருக்கிறது. அந்த சமயத்தில் அவருக்கு பீரியட்ஸ் வருவதற்கான நாள் கூட இல்லையாம். ஆனாலும் எதிர்பாராத நேரத்தில் வந்ததால் அதற்கு முன்னேற்பாடுடன் எந்த பேட்டும் அவர் கையில் கொண்டு வரவில்லையாம். இதனால் விமான நிலையத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார். அங்கு சானிட்டரி பேட் விலைக்கு கிடைக்காததால் அந்த இடத்தில் இருந்து ஓடி சென்று இன்னொரு இடத்திற்கு போய் மிகவும் சிரமப்பட்டு வாங்கிக் கொண்டு மீண்டும் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.

சீரியல் நடிகை வாழ்க்கையில் நடந்த கொடுமை.. கல்யாணமான 1 மாதத்தில் இத்தனை பிரச்சனையா? போலீசில் புகார்
இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. அதோடு பெண்கள் தனக்கு தேவைப்படுகிறதோ இல்லையோ எப்போதும் பேக்கில் ஒரு பேட் எஸ்ட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வைத்திருந்தார். அதுவும் உண்மைதான் என்று பலரும் அவருக்கு சப்போர்ட் செய்தனர். இப்படியான நிலையில் இப்போது மீண்டும் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பணம் இருந்தும் பயன் இல்லை

அந்த வீடியோவில் தான் ஹைதராபாத் வந்த இடத்தில் தனியாகத்தான் ஒரு ரூமில் இருந்து கொண்டிருக்கிறேன். அங்கு உறவினர்களோ, நண்பர்களோ யாரும் இல்லை. ஆனால் எனக்கு இப்போ ரொம்ப காய்ச்சலாக இருக்கிறது. இந்த சமயத்தில்தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது. பொதுவாக பணம் இருந்தால் எல்லாமே நடக்கும், பணம் தான் முக்கியம் என்று எல்லாரும் சொல்லுவாங்க. ஆனால் இப்போதைக்கு என்னுடைய பேக்கில் பணம் இருக்கிறது, கிரெடிட் கார்டு இருக்கிறது. ஆனாலும் எனக்கு காய்ச்சல் என்றால் உதவுவதற்கு யாரும் பக்கத்தில் இல்லை.

Latha Rao Viral Video serial actress

உறவுகளின் முக்கியம்

இதுவே நம்ம வீட்டில் இருந்து இருந்தால் என்னுடைய அம்மாவோ அல்லது கணவரோ, குழந்தையோ யாராவது ஒரு காபி போட்டு தந்து இருப்பார்கள். அல்லது மாத்திரை வாங்கிக் கொண்டு வந்து எப்படி இருக்கிறது என்று கேட்டிருப்பார்கள். ஆனால் பணம் இருந்தாலும் இதுபோல உறவுகள் இல்லாத நேரத்தில் யாரும் நீ எப்படி இருக்க என்று கூட கேட்க மாட்டாங்க. அதனால வாழ்க்கைக்கு பணம் மட்டுமே முக்கியம் என்று யாரும் நினைத்து விடவேண்டாம். நம்முடைய உறவுகளும் நமக்கு ரொம்ப முக்கியம். நாம நல்லபடியாக இருக்கும் வரைக்கும் எதுவும் தெரியாது. ஆனால் ஒரு நாள் முடியவில்லை என்று இருக்கும் போது பணத்தைவிட உறவினர்கள் தான் முக்கியம் அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+