ஏர்போர்ட்டில் திடீரென பீரியட்ஸ்.. அங்கிருந்தவர்கள் சொன்ன வார்த்தை.. பட்ட கஷ்டம்! சீரியல் நடிகை உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பயணத்துக்கு கிளம்பும்போது வீட்டிலிருந்து எத்தனை விஷயங்கள் எடுத்துக் கொண்டு போகிறோம். ஆனால் சில நேரங்களில் மிக முக்கியமான ஒரு பொருள் கண்ணுக்கு தெரியாமல் போய் விடும். அப்படித்தான் சென்னை விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட ஒரு எதிர்பாராத சூழ்நிலையை நடிகை லதா ராவ் வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார். அவர் சொன்ன ஒரு விஷயம் பெண்களின் கவனத்தை உடனடியாக ஈர்த்து இருக்கிறது.

சின்னத்திரை ரசிகர்களுக்கு லதா ராவை அறிமுகப்படுத்த வேண்டியதில்லை. மெட்டி ஒலி, திருமதி செல்வம், வேலன், விலாசம் என் பல சீரியல்களில் நடித்து தனக்கான ஒரு இடத்தை பிடித்திருந்தார். சீரியலில் மட்டுமல்லாமல் சினிமாவிலும் அடியெடுத்து வைத்திருந்தார். அதிலும் தில்லாலங்கடி படத்தில் வடிவேலுக்கு மனைவியாக நடித்தது ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்தார் இப்போது மீண்டும் சீரியல்களிலேயே கவனத்தில் செலுத்தி வருகிறார். இந்த நிலையில்தான் அவர் வெளியிட்ட வீடியோ இப்போ பலருடைய கவனத்தை எடுத்து இருக்கிறது. அதாவது ஹைதராபாத் போவதற்காக சென்னை விமான நிலையத்திற்கு லதா ராவ் சென்று இருந்தாராம். அப்போது எதிர்பார்த்த விதமாக அவருக்கு மாதவிடாய் வந்திருக்கிறது.

நடிகை லதா ராவ் வீடியோ

பொதுவாக அந்த தேதியில் தனக்கு மாதவிடாய் வராது என்பதால் அதற்கான சானிட்டரி பேட் அவருடைய பேக்கில் வைத்துக்கொண்டு வரவில்லையாம். எப்போதும் அவர் பேக்கில் பேட் வைத்திருப்பாராம். தனக்கு உதவவில்லை என்றாலும் மற்ற பெண்களுக்கு அவர் கொடுத்து உதவி இருக்கிறார். ஆனால் வழக்கம் போல இந்த முறை பேக்கை கிளீன் பண்ணும் போது இதை எடுத்து வைக்க மறந்து விட்டாராம். அதுதான் இப்ப அவருக்கு பிரச்சனையாக மாறி இருக்கிறது.

அதாவது அவர் வெளியிட்ட வீடியோவில் எனக்கு விமான நிலையத்தில் நிற்கும் போது தான் பீரியட்ஸ் வந்துவிட்டது. உடனே நான் என்னுடைய பேக்கை பார்த்தேன் அங்கே பேட் இல்லை. உடனே எனக்கு என்ன பண்றதுன்னு சில நிமிடம் பதட்டம் ஆகிவிட்டது. பிறகு வழக்கம் போல விமான நிலையத்தில் பணம் கொடுத்தால் சானிட்டரி பேட் கொடுப்பாங்களே அவங்க கிட்ட வாங்கலாம் என்று யோசித்து அவங்க கிட்ட கேட்டா அந்த ஸ்கீம் எல்லாம் முன்னாடியே தூக்கிட்டாங்க இப்போ அது கிடையாதுன்னு சொல்லிட்டாங்க.

Latha Rao serial actress

விமான நிலையத்தில் பட்ட கஷ்டம்

என்ன பண்றதுன்னு தெரியாது சமயத்தில் நான் ஐந்தாவது கேட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போதுதான் ஏழாவது கேட்டில் பார்மசி இருக்கிறது என்று சொன்னார்கள். அங்கு ஓடிப்போய் நானும் பார்த்தால் அங்கே யாருமே இல்லை. இன்னொரு பக்கம் போர்டிங் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. கடைசியாக ஒருவர் வந்தார் அதற்கு பிறகு உடனே வாங்கிக் கொண்டு நான் எப்படியோ ஓடியே வந்து போர்டிங்குள் வந்து விட்டேன். ஆனால் எனக்கு இந்த மன அழுத்தமும், பதட்டமும் பெரிதாக இருந்தது.

நடிகை வைத்த வேண்டுகோள்

இதை எதற்காக இப்ப சோசியல் மீடியால சொல்லுறீங்க என்று நீங்கள் எல்லாரும் கேட்கலாம். நாம எளிதாக கடந்து போற விஷயம் தான் பீரியட்ஸ். இது ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. எல்லா பெண்களுக்கும் வருகிற பிரச்சனை தான். ஆனால் நாம் கண்டிப்பாக வெளியே செல்லும்போது நம்முடைய பேக்கில் ஒரு பேட் எடுத்து வைக்க வேண்டும். இதுபோல நமக்கு தேவையில்லை என்றாலும் அடுத்தவர்களுக்காக உதவும் என்று அவர் அந்த வீடியோவில் பேசி இருக்கிறார்.

இது அவசியமான பொருள்

வீட்டில் இருக்கும்போது எப்படியோ சமாளித்து விடலாம். ஆனால் விமான நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலையம் என்று வெளியிடத்திற்கு இருக்கும்போது இப்படி ஒரு எதிர்பாராத சூழ்நிலை வந்தால் உண்மையிலேயே பெண்களுக்கு பதற்றம் ஏற்படும். அதனால் தான் ஒரு பேட் கூடுதலாக பையில் வைத்திருப்பது நமக்கு பெரிய விஷயமாக கிடையாது, ஆனால் அது இன்னொரு பெண்ணுக்கு அந்த நேரத்தில் மிகப்பெரிய உதவியாக இருக்கலாம் என்பது லதா ராவ் சொன்னது உண்மைதான். அதனால் இனியாவது வெளியே போகும்போது பெண்கள் இதுபோன்ற அத்தியாவசியமான பொருட்களை முடிந்த வரைக்கும் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+