உடல் உறுப்பு தானம்.. பிறந்த நாளில் அசத்திய நடிகை மகாலட்சுமி.. கணவர் கொடுத்த பரிசு.. உருக்கமான பதிவு
சென்னை: சீரியல் நடிகை மகாலட்சுமி இன்று தன்னுடைய பிறந்தநாளில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய பிறந்தநாளில் உடல் உறுப்பு தானம் செய்திருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்.
அதுபோல தன்னுடைய பிறந்த நாளில் தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தாரோடு தான் உடல் ஊனமுற்றவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்ததாகவும் மகாலட்சுமி கூறியிருக்கும் நிலையில் அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் 90 கிட்ஸ்களின் ஃபேவரிட் தொகுப்பாளர்களில் ஒருவரான விஜே மகாலட்சுமி சமீபத்தில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்பே வா சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருக்கும் மகாலட்சுமி சமீபத்தில் கலைஞர் டிவியில் தொடங்கப்பட்ட தாயம்மா என்ற சீரியலில் ராதிகா சரத்குமாரின் மகளாகவும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
என்னதான் நடிகையாக இருந்தாலும் விஜே மகாலட்சுமி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. தன்னுடைய முதல் கணவரோடு விவாகரத்து நேரத்தில் அதிகமாக மகாலட்சுமி பற்றி பேசப்பட்டது. அதற்குப் பிறகு சீரியல் நடிகர் ஒருவரோடு இவருக்கு காதல் இருப்பதாக சீரியல் நடிகரின் மனைவி போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுத்ததும் பெரிய அளவில் பேசப்பட்டது.

அந்த பிரச்சனை கொஞ்சம் ஓய்ந்த நேரத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவருடைய திருமண புகைப்படங்கள் வெளியானதும் 90ஸ் கிட்ஸ்கள் பலர் அதிர்ச்சி ஆகிவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து கொண்டிருக்கும் ரவீந்தரை மகாலட்சுமி நகைக்காகவும் பணத்திற்காகவும் தான் கல்யாணம் செய்து கொண்டார் என்று அந்த நேரத்தில் அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்தது.
ஆனால் அதை எல்லாம் கண்டுகொள்ளாத மகாலட்சுமி உண்மை என்ன என்பது எனக்கும் என்னுடைய கணவருக்கும் தெரியும். அதை நான் வெளிச்சப்படுத்தி எல்லோருக்கும் புரிய வைக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. அவர்கள் கையில் இருக்கும் போனில் நெட் முடியுற வரைக்கும் தங்களுடைய நேரத்தை வேஸ்ட் ஆக பயன்படுத்தி அடுத்தவர்களை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அதற்காக நான் எதற்காக பீல் பண்ண வேண்டும் என்று அதிரடியான பதிலையும் கொடுத்திருந்தார். இப்படியான நிலையில் இன்று மகாலட்சுமியின் பிறந்தநாள் அதற்காக அவருடைய கணவர் அவருக்கு இரவு கேக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார். மகாலட்சுமியின் திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டிருக்கிற நிலையில் அவருக்கு அவருடைய குடும்பத்தினரும் சர்ப்ரைஸ் கொடுத்திருக்கின்றனர்.
அது பற்றி மகாலட்சுமி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்ட் போட்டு இருக்கிறார். அதில், என்னுடைய இந்த பிறந்தநாள் எனக்கு பல கலவையான உணர்வுகளால் நிரப்பப்பட்டு இருக்கிறது. முதலில் என்னுடைய கணவர் நள்ளிரவில் ஒரு சுவையான கேக்கை கொடுத்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அவரை என்னுடைய வாழ்க்கை துணையாக நான் பெற்றதை அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.

ஐ லவ் யூ அம்மு இரண்டாவதாக என் அம்மாவும் சகோதரனும் என்னை மனவளர்ச்சி குன்றிய நபர்கள் இருக்கும் இடத்திற்கு கூட்டிட்டு போன போய் உணவு தானம் செய்தாங்க. அது என்னுடைய மனதை தொடும் சம்பவமாக இருந்தது. அதுபோல என்னுடைய அம்மாவிற்கும் என்னுடைய தம்பிக்கும் நன்றி... அவர்களுடைய தொடர்ந்து என்னுடைய அப்பா எனக்கு வங்காளதேசத்திலிருந்து சில ஆச்சரியங்களை வழங்கினார்.
இது மட்டும் இல்லாமல் என்னுடைய மகனும் எனக்கு ஒரு கேக் மூலம் என்னை ஆச்சரியப்படுத்தினான். என்னுடைய மகன்தான் என்னுடைய உலகம்... இந்த அழகான ஆன்மாக்கள் அனைத்தும் என்னை சுற்றி இருப்பதில் நான் மகிழ்ச்சியாகவும் ஆசீர்வதிக்கப்பட்டவளாகவும் இருக்கிறேன். அதுபோல இந்த நாளில் என்னை ஆசீர்வதித்த அனைவருக்கும் நன்றி என்று கூறி இருக்கும் மகாலட்சுமி அடுத்த பதிவில் தான் உடல் உறுப்பு தானம் செய்து இருப்பதை ஒரு போஸ்டாக வெளியிட்டு இருக்கிறார்.
அதோடு தான் பலருக்கும் முன்மாதிரியாக இருக்க விரும்புகிறேன். என்னால் முடிந்த விலைமதிப்பற்ற பரிசை வழங்க முடிவு செய்தேன். அது என்னுடைய வாழ்க்கை பரிசு... என் காலத்திலும் கூட என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மற்றவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த முடியும் என்ற என்னுடைய நம்பிக்கையால் நான் ஈர்க்கப்பட்டு இருக்கிறேன் என்று அந்த பதிவை வெளியிட இது இணையத்தில் அதிகமாக பாராட்டுகளை பெற்று வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications