Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தினேஷ் அப்படி பண்ண மாட்டார்.. விசித்ரா கூட இப்படின்னு எதிர்பார்க்கல.. பிரேமி வெங்கட் ஓப்பன் அப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை பிரேமி வெங்கட் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் தினேஷ் மற்றும் விசித்திரா குறித்து சில தகவல்களை பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார்.

அதில் தினேஷ் மற்றும் ரச்சிதாவின் உறவு முறை குறித்தும் தற்போது தினேஷ் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடிக் கொண்டிருக்கும் முறை குறித்தும் பிரேமி பேசியிருக்கிறார்.

Serial actress Premi Venkat about Bigg Boss Tamil season 7 contestant Dinesh and Vishitra

அதோடு விசித்திராவை பற்றி தான் நினைத்தது தவறு என்று மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டு விசித்திராவிற்கு வாழ்த்துக்களையும் கூறி இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் குறித்து அவருடைய உறவினர்களும் நண்பர்களும் பேட்டி கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் தினேஷ் மற்றும் அவருடைய மனைவி ரச்சிதா இருவருக்கும் நெருக்கமான நபராக இருக்கும் பிரேமி வெங்கட் பிக்பாஸ் குறித்து பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார்.

நடிகை ப்ரேமி வெங்கட் பல சீரியல்களில் முக்கிய கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கிறார். குறிப்பாக ரச்சிதாவோடு நாச்சியார் புறம், நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற சீரியல்களிலும் நடித்திருந்தார். இந்த நிலையில் பேட்டியில் பிரேமி வெங்கட் பேசுகையில், ஜீ தமிழில் ஒளிபரப்பான நாச்சியார் புறம் என்ற சீரியலுக்காக தினேஷ் என்கிட்ட பேசியதிலிருந்தே எங்களிடையே நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது.

அந்த சீரியலில் நான் நடிக்கணும்னு தினேஷ் ரெண்டு மாசம் காத்திருந்தார். இப்ப வரைக்கும் நானும் ரச்சிதாவும் நல்ல நட்போடு தான் இருக்கிறோம். ரச்சிதாவும் தினேஷும் பிரிந்து இருந்தாலும் இவர்கள் இருவரும் மீண்டும் சேர வேண்டும் என்று மனதார நானும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கடந்த ஆண்டு ரச்சிதா பிக்பாஸ் போயிருந்தப்பவே அவங்க விளையாடிய விளையாட்டை பார்த்து நான் வியந்து போய் பல சேனல்களில் பேசி இருந்தேன்

அதனால் கடந்த சீசனில் ரட்சிதாவிற்கு என்னுடைய சப்போர்ட்டை நான் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது மட்டுமல்லாமல் இப்போதும் தினேஷ் பிக் பாஸ் போறது உறுதியானதுமே என்கிட்ட சொன்னார். அதற்கு நான் ஆல் த பெஸ்ட் சொன்னேன். பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் நாளிலிருந்து நான் பார்த்துட்டு வருகிறேன். தினேஷ் மிகச் சரியாக விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் நிகழ்ச்சியில் கண்டண்டுக்காக எதையும் மெனக்கெட்டு செய்ய மாட்டார்.

Serial actress Premi Venkat about Bigg Boss Tamil season 7 contestant Dinesh and Vishitra

அந்த மாதிரி செயற்கையா நடந்துக்கிறது அவருடைய இயல்பு கிடையாது. வைல்டு கார்டு மொத்தமாக உள்ளே போனதும் மாயா கேங் பயந்தது அப்பட்டமாக தெரிந்தது. அதிலையும் எல்லோரும் தினேஷை பார்த்து தான் ரொம்பவே பயப்படுறாங்க. அதனாலதான் அவரை ரவுண்டு கட்டணும்னு துடிக்கிறாங்க. ஆனா தினேஷ் இவங்க எல்லாரையும் சமாளிச்சு தன்னுடைய விளையாட்டை சிறப்பாக விளையாடி டைட்டில் வாங்கிட்டு தான் திரும்புவார் என்று எனக்கு தோணுது.

அதோடு விசித்திராவும் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு சீரியலில் வில்லியா நடிச்சதுக்கு விருது ஒன்று கிடைத்தது. முதல் முதலாக கிடைத்த விருது அதை எனக்கு விசித்திரா தான் வழங்கினார். அப்போ எனக்கு ஒரு நெருடல் இருந்தது. குத்து பாட்டுக்கு ஆடினவங்க கையால தருகிறார்கள் என்று நான் நினைத்திருந்தேன்.

ஆனா அந்த விருதை வாங்கிட்டு அப்படி சங்கடப்பட்டதை நினைத்து இப்ப வருத்தப்படுறேன். ஏன்னா பிக் பாஸ் வீடு விசித்ராவின் இன்னொரு பக்கத்தை காட்டி இருக்கிறது. முதல் நாள்ல இருந்து கலந்துகிட்ட போட்டியாளர்கள்ல நான் வலுவான போட்டியாளர்களாக நினைக்கிறவங்கள விசித்திராவும் இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று அந்த பேட்டியில் பிரேமி பேசி இருக்கிறார். தற்போது இதை விசித்ரா மற்றும் தினேஷ் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+