சந்திரலேகா சீரியல் இயக்குனர் சொன்ன வார்த்தை! அழுதுட்டு வீட்டுக்கு வந்துட்டேன்! பிரேமி வெங்கட் ஓப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சீரியல் நடிகை பிரேமி வெங்கட் தற்போது சுந்தரி சீரியலில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது தன்னுடைய சின்னத்திரை வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

சீரியல் நடிகை ப்ரேமி வெங்கட்டை பல சீரியல்களில் பார்த்திருப்போம். அதிலும் சன் டிவியில் சுந்தரி சீரியலில் அனுவின் அம்மாவாக நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல நடிகையாக மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் டீச்சராக வேலை பார்த்து அதற்குப் பிறகு ஆர்ஜேவாக வானொலியில் சில வருடங்கள் வேலை பார்த்து, பிறகு சன் டிவியில் 8 வருடங்களாக நியூஸ் ரீடராக இருந்து தான் விளம்பரங்கள், ஷார்ட் பிலிம், சீரியல்களில் நடிக்க வந்திருக்கிறார்.

Serial Actress Premi Venkat about Chandralekha Serial director

பிரேமிக்கு முதல் முதலில் சன் டிவியில் வாணி ராணி சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதற்குப் பிறகு சந்திரலேகா சீரியலில் கதாநாயகனின் அம்மாவாக சந்திராவுக்கு மாமியாராக நடித்திருப்பார். அதை தொடர்ந்து கண்மணி சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். இந்த சீரியலில் நடிகை ஹரிப்பிரியா அதாவது சன் டிவி எதிர்நீச்சலில் நந்தினியாக நடிக்கும் ஹரிப்பிரியாவிற்கு இவர் தான் அம்மாவாக நடித்திருந்தார்.

இந்த சீரியலில் அவருடைய நடிப்பை பாராட்டி இவருக்கு சன் டிவி குடும்ப விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறந்த வில்லிக்கான விருதும் கிடைத்தது. அதை தொடர்ந்து ஜீ தமிழில் நாச்சியார் புறம், விஜய் டிவியில் அவளும் நானும், காற்றின் மொழி, நாம் இருவர் நமக்கு இருவர் 2 போன்ற பல சீரியல்களில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் இவர் பேட்டி ஒன்றில் பேசும்போது சந்திரலேகா சீரியலில் நடிக்கும் போது கிடைத்த அனுபவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

அதில் சந்திரலேகா சீரியலில் முதலில் இவரை ஆடிஷனுக்கு கூப்பிட்டிருக்கிறார்கள். ஆடிஷன் முடிந்ததும் முதல் நாள் சூட்டிங் வர சொல்லிவிட்டார்களாம். முதல் நாள் சூட்டிங்கு பிரேமி வெங்கட் போயிருக்கிறார். ஆனால் அவரைப் பார்த்த இயக்குனர் நீங்க இந்த கேரக்டருக்கு செட்டாக மாட்டீங்க நீங்க பாக்குறதுக்கு ரிச்சா இருக்கீங்க உங்களுக்கு தகுந்த கேரக்டர் இது கிடையாது என்று சொல்லி இருக்கிறார்.

உடனே சரி என்று பிரேமி அங்கிருந்து கிளம்பி ரெஸ்ட் ரூம் போறேன் என்று சொல்லிவிட்டு பாத்ரூமில் இருந்து கொஞ்ச நேரம் அழுதாராம். பிறகு சரிகம நிறுவனம் தான் சந்திரலேகா சீரியலை இயக்கி இருக்கிறது. அதனால் அந்த நிறுவனத்தின் தலைவர் பிரேமிக்கு ஏற்கனவே தெரியுமா அதனால் அவருக்கு போன் போட்டு என்னை சந்திரலேகா சீரியலில் ரிஜெக்ட் பண்ணிட்டாங்க என்று சொல்ல அதற்கு அவர் நான் என்னவென்று விசாரிக்கிறேன்.

நீங்கள் டென்ஷன் ஆகாதீங்க என்று சொல்லி இருக்கிறார். ஆனாலும் தன்னை ரிஜெக்ட் பண்ண இடத்தில் தான் இருக்கக் கூடாது என்று வீட்டிற்கு போய் விடுகிறேன் என்று சொன்னேன். ஆனால் அவர் உங்களை விட பலர் பல ரிஜெக்ஷனை தாண்டி தான் நல்ல நிலைக்கு வந்திருக்கிறாங்க. நீங்க அதனால இந்த கேரக்டர் ரிஜெக்ட் ஆகிட்டு ஆகிட்டுன்னு கவலைப்படாதீங்க என்று சொல்லி என்னை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

அதற்கு பிறகு சில நாட்களிலேயே அந்த சீரியலில் சஞ்சய் அம்மா அதாவது கதாநாயகனின் அம்மாவாக நடிக்க கூப்பிட்டார்கள். நான் பிறகு ஆடிஷனில் கலந்து கொண்டு செலக்ட் ஆனேன். அந்த சீரியல் 2000 எபிசோடுகள் ஒளிபரப்பானது. அதில் அதிகமான எபிசோடுகளில் நான் வந்து இருக்கிறேன். அதனால் நான் எப்போதும் எல்லோருக்கும் சொல்வது ஒன்றே ஒன்றுதான். ஒரு இடத்தில் நாம் ரிஜெக்ட் ஆகிறோம் என்று யாருமே கவலைப்படாதீர்கள்.

ஒன்று நம்மை விட்டு போகிறது என்றால் அதை விட இன்னொன்று பெரியதாக நம்மை வந்து சேரப்போகிறது என்றுதான் அர்த்தம். நான் முதலில் போயிருந்த கேரக்டர் பெரிய அளவில் ரீச் ஆனது கிடையாது. ஆனால் பிறகு எனக்கு கிடைத்த கேரக்டர் கடைசி வரைக்கும் இந்த சீரியலில் இருந்தது. அதனால் எதுவும் நமக்கு கிடைக்கவில்லையே நாம ஒரு இடத்தில் ரிஜெக்ட் ஆகி விட்டோமா என்று யாரும் கவலையே படாதீங்க என்று ரசிகர்களுக்கு நடிகை பிரேமி வெங்கட் மோட்டிவேஷன் கொடுத்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+