யாரும் கூட இல்ல! தனிமை சோகம்.. விரத்தியோடு பேசிய சீரியல் நடிகை ரேஷ்மா முரளிதரன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் இப்போது சன் டிவியில் செல்லமே செல்லமே சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான், யாரும் இல்லாமல் தனியாக இருப்பதாக உருக்கமாக அவருடைய youtube லைவ்வில் சேனலில் பேசியது வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கும், அவருடைய தோழிகளுக்கும் அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.

ரேஷ்மா முரளிதரனுக்கு டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகம் கிடைத்திருந்தாலும் ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியல்தான் பெரிய அளவில் ஹீரோயினி அந்தஸ்த் கொடுத்தது. அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அதே சிரியலில் நடித்த நடிகர் மதன் பாண்டியனை காதலித்தார். பிறகு இருவரும் திருமணமும் செய்து கொண்டார். அதற்கு பிறகு இந்த தம்பதியும் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான அபி டெய்லர் என்ற சீரியலிலும் நடித்திருந்தனர்.

Reshma Muraleedharan Reshma Murali Dharan Reshma zee tamil

சீரியல் நட்பு

இந்த சீரியல் சில மாதங்களிலேயே முடிவுக்கு வந்தது. கொரோனா காலகட்டத்தில் ரேஷ்மா அவருடைய தோழிகளான கயல் சைத்ரா, யாரடி நீ மோகினி சீரியல் நக்ஷத்ரா, செம்பருத்தி சீரியல் ஷபானா என எல்லோரும் எடுத்த போட்டோஸ்களும் வீடியோக்களும் பெரியளவில் டண்டானது. அந்த சமயத்தில் சில நடிகைகள் மொட்டை மாடியில் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி பிரபலமானார்கள். ஆனால் இவங்க எல்லாம் அந்த நேரத்தில் பிரண்ட்ஷிப் கேர்ள்ஸ் என்று வீடியோக்கள் வெளியிட்டு ட்ரெண்டானார்கள்.

அதற்கு பிறகு அந்த கூட்டணியில் ஒவ்வொருவரும் திருமணம் செய்து கொண்டு அவரவர்கள் வழியை பார்த்து கிளம்பி விட்டார்கள். அதற்கு பிறகு எப்பவாவது எல்லோரும் சேர்ந்து கொள்வார்கள்‌, அப்போது எடுத்த புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் நட்புக்குள் சில மனக்கசப்பு ஏற்படட்டதால் ஷபானா, கயல் சைத்ரா, ரேஷ்மாவும் பிரிந்து விட்டார்கள்.

விவாகரத்து சர்ச்சை

ஆனால் சில மாதங்களுக்கு முன்பு ரேஷ்மா அவருடைய காதல் கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் பரவி வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் ரேஷ்மா மதன் பாண்டியனுடன் எடுத்த புகைப்படங்கள் வீடியோக்கள் என எல்லாவற்றையும் டெலிட் செய்திருந்தார். ஆனால் மதன் இன்னும் எந்த புகைப்படங்களையும் டெலிட் செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கும்போது சமீபத்தில் ரேஷ்மா தன்னுடைய youtube சேனலில் ரசிகர்களிடம் லைவில் பேசி இருந்தார். அதில் தான் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறேன், அந்த வீட்டில் என்னுடன் அம்மாவும் தங்கச்சியும் மட்டும் இருந்தாங்க. இப்போ அம்மாவும் ஊருக்கு போயிருக்குறாங்க, தங்கச்சியும் படிக்க போயிட்டா. அதனால நான் மட்டும் அந்த வீட்டில் தனியா இருந்தேன். அது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்ததால பாண்டிச்சேரிக்கு வந்திருக்கிறேன் என்று பேசி இருந்தார்.

Reshma Muraleedharan Reshma Murali Dharan Reshma zee tamil

சோகத்தில் ரேஷ்மா முரளிதரன்

பிறகு ரசிகர்கள் கேள்விகளுக்கு சிலவற்றுக்கு மட்டும் பதில் சொல்லி இருந்தார். ஆனால அவருடைய முகம் சோர்ந்து போய் டல்லாக இருந்தது. இதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு என்னதான் ஆட்சி? ஏற்கனவே மன அழுத்தத்தில் இருக்கும் இவர் தனியாக இருக்கிறார் இவருடைய தோழிகள் மீண்டும் இவருடன் சேர்ந்து பழைய மாதிரி நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் கூறி வருகிறார்கள்.

கயல் சைத்ரா பற்றிய தகவல்

ஏற்கனவே ரேஷ்மாவின் தோழியான சைத்ராவும் அவருடைய கணவரை பிரிய போவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. சைத்ராவும் அவருடைய கணவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் டெலிட் செய்திருக்கிறார். சில வருடங்களாக அவருடைய கணவருடன் எந்த புகைப்படங்களையும் வெளியிடவில்லை. இதனால் சந்தோஷமாக இருந்த இவங்க தோழிகளுக்குள் என்ன பிரச்சனை அடுத்தடுத்து எல்லாருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் வந்து கொண்டிருக்கிறது என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நட்பின் மாற்றம்

ஆரம்பத்தில் எல்லாம் இவர்கள் எல்லோரும் சேர்ந்து லைவில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்வார்கள். அப்படி ஒரு லைவில் தான் ஷபானாவின் காதல் விஷயம் கூட சோசியல் மீடியாவில் தெரிய வந்தது. ஜீ தமிழில் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் ரேஷ்மா முரளிதரன், சைத்ரா, நக்ஷத்ரா, ஷபானா என நான்கு பேரும் நல்ல தோழிகளாக மாறினார். இப்போது ஆளுக்கு ஒரு சேனலில் நடிக்கிறார்கள் பிஸியான லைப்பில் இவர்களுடைய நட்புக்கு பழைய மாதிரி இல்லையா? என்ற கேள்விகளும் எழுந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+