என்னுடைய அந்த வீடியோவை வைத்து மிரட்டுறாரு..விஷ்ணுகாந்த் மீது புது குற்றச்சாட்டு வைக்கும் சம்யுக்தா
சென்னை: சின்னத்திரை நடிகை சம்யுக்தா தன்னுடைய கணவர் விஷ்ணுகாந்த் தன்னுடைய ஃபாஸ்ட் லைப் பற்றியும் தன்னைப் பற்றிய வீடியோ ஒன்று இருப்பதாகவும் தன்னுடைய உறவினர்களிடம் மிரட்டுவதாக லைவில் தெரிவித்து இருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு சம்யுக்தா லைவில் விஷ்ணுகாந்த் பற்றி பல குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில் விஷ்ணுகாந்த் மீது மீண்டும் சம்யுக்தா பரபரப்பான குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

சின்னத்திரையில் காதலித்து திருமணம் ஆகி இரண்டு மாதங்களுக்குள் குடும்ப பிரச்சனைகளை சமூக வலைத்தளத்தில் கொட்டும் பிரபல தம்பதிகளாக விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா இருவரும் இருந்து வருகின்றனர். நடிகை சம்யுக்தாவிற்கு அதிகமான ரசிகர்கள் ஃபேன்ஸ் பேஜ் வைத்து சமூக வலைத்தளத்தில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஜோடியின் திருமணம் கடந்த மார்ச் மாதம் தான் நடைபெற்றது. ஆனால் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக இப்போது இருவரும் பிரிந்து இருக்கின்றனர். தங்களுடைய காதலையும் இதே சமூக வலைதளத்தில் தெரிவித்த ஜோடி இப்போது தங்களுக்குள் இருக்கும் பிரச்சனைகளையும் இதே சமூக வலைதளத்தில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் பற்றியும் சில மீம்ஸ்களும் வலம் வருகிறது.
ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு சம்யுக்தாவோடு என்ன பிரச்சனை என்பது பற்றி விஷ்ணுகாந்த் சில youtube செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் பொருட்டு விஷ்ணுகாந்த் கூறிய பதில்களுக்கு எல்லாம் நோட்டு போட்டு நோட்ஸ் எடுத்த சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் லைவில் அனைத்தையும் உடைத்து எறிந்தார். ரசிகர்களின் கேள்விகளுக்கும் விஷ்ணுகாந்த் கூறிய வார்த்தைகளுக்கும் பல பதில்களை கொடுத்துக் கொண்டிருந்தார்.
சில தினங்களாக இந்த ஜோடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று விஷ்ணுகாந்த் ஆறு மணிக்கு தான் லைவ் வர போவதாக instagramல் ஸ்டோரி வைத்திருக்கிறார். அதைத்தொடர்ந்து தற்போது 2.50 லைவ் வந்த சம்யுக்தா விஷ்ணுகாந்த் என்ன செய்யப் போகிறார் என்று நான் காத்திருந்தேன். இப்போது அவர் அவருடைய ரியாக்ஷனை தொடங்கி விட்டார். நானும் என்னுடைய ரியாக்ஷனை தொடங்க போகிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஏனென்றால் நான் லைவ் வந்து அடுத்த நாளே என்னை பற்றி தவறுதலாக சம்யுக்தா கூறிவிட்டார் என்று என்னுடைய உறவினர் ஒருவருக்கு விஷ்ணுகாந்த் ஃபோன் செய்து என்னிடம் சம்யுக்தாவின் ஃபாஸ்ட் லைஃப் பற்றி பல விஷயங்கள் இருக்கிறது. அதுபோல சம்யுக்தா வீடியோ 4 மணி நேரமாக ஓடும் வீடியோ ஒன்றும் என்னிடம் இருக்கிறது இனி சம்யுக்தா என்ன பத்தி ஏதாவது பேசுனா அதை நான் வெளியிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.
அதனால் நான் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்தேன். போலீஸ் விசாரிக்கும் போது கூட விஷ்ணுகாந்த் அங்கே வரவில்லை. அதனால் உங்களுக்கு சம்மன் அனுப்பி இருக்காங்க. நீங்க சம்மனையும் பெறவில்லை. இந்த நிலையில் நீங்க லைவில் என்னை பற்றி என்ன பேச போறீங்க? லைவில் என்னை பற்றி ஏதாவது தப்பா பேசினா நான் இன்னும் பெரிய பதிலடி கொடுப்பேன் என்று கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
என்னை காப்பாத்துங்க.. கதறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையின் கணவர்.. வாத்தியாருக்கே இந்த நிலைமையா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications