நடந்தது இதுதான்.."அந்த”ஆடியோவை வெளியிட்ட விஷ்ணுகாந்த்..சம்யுக்தா குற்றச்சாட்டுகளுக்கு கொடுத்த பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சம்யுக்தா அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் மீது கூறிய குற்றச்சாட்டுகளுக்கு விஷ்ணுகாந்த் லைவில் பதில் கொடுத்திருக்கிறார்.

எங்களுடைய வாழ்க்கையில் நடந்தது இதுதான் என்று விஷ்ணுகாந்த் பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

சம்யுக்தா அவருடைய வீடியோவை வைத்து மிரட்டுகிறேன் என்று கூறிய நிலையில் அது குறித்த ஆடியோ ஒன்றையும் விஷ்ணுகாந்த பகிர்ந்து இருக்கிறார்.

Serial actress Samyukthas husband Vishnukanth responds to the allegations

சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் கடந்த மார்ச் மாதம் தான் காதலித்து திருமணம் செய்திருந்தனர். இதற்குள் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் தங்களுடைய குடும்ப பிரச்சனைகள் குறித்து இருவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை மாற்றி மாற்றி தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணம் சம்யுக்தா தான் என்றும் விஷ்ணுகாந்த் சில தினங்களுக்கு முன்பு செய்தி சேனல்களுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதைத் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் லைவில் சம்யுக்தா பல தகவல்களையும் குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தார். இப்போது சம்யுக்தா லைவில் கூறிய கேள்விகளுக்கு இன்று விஷ்ணுகாந்த் தான் இன்ஸ்டாகிராம் லைவில் வருவதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

அதற்கு முன்பாக இன்று சம்யுக்தா மீண்டும் லைவில் வந்து விஷ்ணுகாந்த் தன்னுடைய உறவினர் ஒருவருக்கு போன் செய்து தன்னுடைய வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகவும் 4 மணி நேர வீடியோ இருப்பதாகவும் அதை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். ஏற்கனவே என்னுடைய ஃபாஸ்ட் லைஃப் பற்றியும் நான் அவரிடம் தெரிவித்து இருந்தேன். அது பற்றியும் வெளியே விட்டு விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் என்று கூறி அப்படி வெளியிட்டால் நான் என்ன செய்வேன் என்று பொறுத்திருந்து பாருங்கள் என்று அந்த லைவில் கூறியிருந்தார்.

இந்த நிலையில் விஷ்ணுகாந்த் தான் சொன்னது போலவே 6 மணிக்கு இன்ஸ்டாகிராம் லைவில் வந்து நான் யாரையும் மிரட்டவில்லை நான் சம்யுக்தாவின் சித்திக்கு தான் போன் பண்ணி சம்யுக்தா இப்படி என்னை பற்றி தவறாக பேசிக் கொண்டிருக்கிறார் என்று பேசினேன். அது போல சம்யுக்தா அவளுடைய ஃபாஸ்ட் லைஃப் பற்றி என்னிடம் சொல்லி இருக்கா, நானும் அவளிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால் நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போது கூட அவள் பேசிய வீடியோ என்னிடம் இருக்கிறது. ஆனால் நான் அதையெல்லாம் வைத்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று பல விஷயங்களையும் அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.

Serial actress Samyukthas husband Vishnukanth responds to the allegations

விஷ்ணுகாந்த் சம்யுக்தாவின் சித்தியிடம் பேசிய ஆடியோவில் சிறிது நேரம் மட்டுமே லைவில் ப்ளே செய்திருந்தார். இதனால் லைவில் அதிகமான ரசிகர்கள் முழு ஆடியோவையும் வெளியிட வேண்டியதுதானே என்று கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் சம்யுக்தா லைவில் எனக்கும் உங்களுக்கும் வயது வித்தியாசம் தெரிஞ்சு தானே நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. ஆனா லைவில் நான் உங்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டது போல பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

அதுபோல 24 மணி நேரமும் நான் "அந்த" நினைப்பாக இருப்பதாக கூறியிருக்கிறீர்கள். அப்படி ஒரு மனுஷனால் யாராலும் இருக்க முடியாது. இந்த மாதிரி எல்லாம் லைவில் பேசினால் பெற்றோர்கள் அறிவுரை சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் பெற்றோர்கள் என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள். இதைத்தான் நான் சொன்னேன் தப்பான கைடில் சம்யுக்தா மாட்டியிருக்கிறார் என்று, அதை அவரே அன்னைக்கு லைவில் நிரூபித்து விட்டார். நான் இன்று லைவில் வருகிறேன் என்று சொன்னதும் அவசர அவசரமாக லைவில் வந்து எனக்கு சவால் விடுகிறார்.

போலீஸ் ஸ்டேஷனில் எனக்கு சம்மன் அனுப்பி இருந்ததற்கு நான் வரவில்லை என்று அந்த லைவில் பேசியிருக்கிறார். ஆனால் நான் இப்போதும் சொல்கிறேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நான் வருவேன். அப்போது நீங்களும் வாங்க, எல்லா உண்மையும் அங்கே வெளி வரும் என்னிடம் நீங்கள் பேசிய ஆடியோ இருக்கிறது. அதில் யார் மீது தப்பு இருக்கிறது யார் பக்கம் உண்மை இருக்கிறது என்பது பற்றி எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+