மெட்டிஒலி சாந்திக்கு மருமகள் ஆகிய சீரியல் நடிகை சந்தியா..ரிசப்ஷனில் நண்பர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் கதாநாயகனின் அண்ணி கேரக்டரில் சீரியல் நடிகை சந்தியா நடித்து வருகிறார். இவருக்கு நேற்று மெட்டி ஒலி சீரியல் மூலம் பிரபலம் அடைந்த சாந்தி மாஸ்டரின் மகனோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. தன்னுடைய மகனின் ரிசப்ஷனில் சாந்தி மாஸ்டர் டான்ஸ் ஆடியோ வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் சீரியல்களில் ஒன்றான மெட்டி ஒலி சீரியலில் வரும் "அம்மி அம்மி அம்மி மிதித்து "என்ற பாடலை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்த பாடலில் டான்ஸ் மாஸ்டர் சாந்தி அவ்வளவு அழகாக ஆடி இருப்பார். இப்போதும் அந்த பாடல் youtube சேனல்களில் அதிகமாக பார்க்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அதே நேரத்தில் சாந்தி டான்ஸ் மாஸ்டராக மட்டுமல்லாமல் பல சீரியல்களிலும், திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபத்தில் கூட விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சக்திவேல் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதுபோல விஜய் டிவியில் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகவும் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அந்த சீசனில் ஒரு சில வாரங்களிலேயே இவர் வெளியேற்றப்பட்டார்.
இது அவருக்கு மட்டும் அல்லாமல் அவருடைய ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வயதில் மூத்த போட்டியாளராக ஆறாவது சீசனில் கலந்து கொண்ட சாந்தியை ஆரம்பத்திலேயே வெளியேற்றி விட்டார்கள். ஆனால் பிறகு ரீஎன்ட்ரி கொடுத்த சாந்தி மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டார். இந்த நிலையில் இப்போது சக்திவேல் சீரியலில் பூமர் மாமியாராக இவர் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இதனால் பலர் இவரை திட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தன்னுடைய சொந்த வாழ்க்கையில் தன்னுடைய தந்தை சிறுவயதிலேய தங்களை விட்டு விலகி போய்விட்ட பிறகு தான் தான் குடும்ப பாரத்தை தலையில் சுமந்து தன்னுடைய குடும்பத்தை கவனித்துக் கொண்டேன் என்று ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாந்தி மாஸ்டர் கூறியிருக்கிறார்.
அதுபோல தன்னுடைய திருமணத்திற்கு பிறகு தன்னுடைய கணவரும் தன்னை விட்டு விலகிப் போன பிறகு தன்னுடைய மகனை கஷ்டப்பட்டு வளர்த்து வந்தேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் சாந்தி மாஸ்டரின் மகனான முரளிக்கு சக்திவேல் சீரியலில் சாந்தியின் மருமகளாக நடித்த நடிகை சந்தியாவோடு நேற்று திருமணம் நடைபெற்றது. இதற்கு சில தினங்களுக்கு முன்புதான் இவர்கள் இருவருக்கும் எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருந்தது.
இந்த திருமணம் பக்கா அரேஞ்ச் மேரேஜ் என்று கூறப்படுகிறது. அதுபோல சீரியல் நடிகை சந்தியா மற்றும் முரளியின் ரிசப்ஷனில் கலந்து கொண்ட அவருடைய நண்பர்கள் மேடையில் கொடுத்த கிப்ட் இப்போது பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. அதாவது ரிசப்ஷனில் நண்பர்கள் ஒரு பேனர் போல ஒன்றை ரெடி செய்து இருக்கிறார்கள்.
அதில் ஒரு பக்கத்தில் சந்தியா மற்றும் இன்னொரு பக்கத்தில் முரளி இருவரும் இருப்பது போன்றும் நடுவில் கிரிக்கெட் கப் இருப்பது போன்றும் இருக்கிறது. அதில் மணமக்கள் இருவருக்கும் ஆர்சிபி ஜெர்சிஐ போட்டு இருப்பது போன்று எடிட் செய்திருக்கிறார்கள். அதோடு அந்த பேனரில் "வாழ்க்கை எவ்வளவு பின்னுக்கு தள்ளினாலும் ஆர்சிபி போல் அணியாக செயல்பட்டு முன்னேற வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications