சன் டிவி டாப் சீரியலில் இருந்து விலகிய கதாநாயகி.. காரணம் இதுதான்! அவரே வெளியிட்ட விளக்கம்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து அந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ஷபானா விலகப் போவதாக திடீரென்று பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதோடு அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் விளக்கி இருக்கிறார்.
ஷபானா முதல் முதலாக தமிழில் செம்பருத்தி என்ற சீரியலில் மூலமாக அறிமுகமாகி இருந்தார். ஜீ தமிழில் ஒளிபரப்பான அந்த சீரியலில் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்து விட்டார். ஆரம்பத்தில் சன் டிவி சீரியலுக்கு டப் கொடுத்து டிஆர்பி முன்னணி இடத்தை பிடித்த சீரியலாக செம்பருத்தி சீரியல் இருந்து வந்தது. இந்த சீரியலில் கிடைத்த வெற்றியின் காரணமாகவே அந்த சீரியல் முடிவடைந்ததும் ஷபானாவிற்கு சன் டிவியில் மிஸ்டர் மனைவி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இந்த சீரியலும் ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் அஞ்சலியாக நடித்துக் கொண்டிருக்கும் தான் விலகிவிட்டதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். மிஸ்டர் மனைவி சீரியல் 300 எபிசோடுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் கதாநாயகனாக பவன் ரவீந்தரா நடித்து வருகிறார்.
அதுபோல அனுராதா, ரஞ்சிதம் போன்ற பலரும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் இயக்குனர் ஜெ வெங்கடேஷ் வேதநாயகம் என்ற கேரக்டரில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் எதற்காக சீரியலில் இருந்து விலகுகிறேன் என்பது குறித்து ஷபானா வெளியிட்ட பதிவில், மிஸ்டர் மனைவி சீரியலில் இருந்து விலகுவது என்ற முடிவை எடுப்பது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது என்றாலும் இந்த சீரியலில் இருந்து இரண்டு முக்கிய காரணத்தால் நான் விலகுறேன்.
இந்த சீரியலில் அஞ்சலி கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்தது. அந்த கேரக்டர் மற்றவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான கேரக்டராக எனக்கு அமைந்தது. ஆனால் அதே நேரத்தில் எனது புதிய ப்ராஜெக்ட் காரணமாகவும், புதிய கேரக்டர் காரணமாகவும் நான் இந்த சீரியலில் இருந்து விலகுகிறேன். உங்களிடம் இருந்து ஷபானா என்ற அஞ்சலி விடைபெறுகிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இந்த பதிவுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது பொதுவாக சீரியலில் எத்தனையோ கேரக்டர்கள் இவருக்கு பதில் இவர் என்று மாறிக்கொண்டிருந்தாலும் கதாநாயகன் அல்லது கதாநாயகி மாறுவது என்பது யாரும் எதிர்பார்க்காதது. இதுவரைக்கும் ஷபானாவை அஞ்சலியாக பார்த்து ரசித்து வந்த ரசிகர்கள் இவருடைய இந்த முடிவை கேட்டு வருத்தப்பட்டு கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் இனி ஷபானாவிற்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் இருக்கிறது. இனி என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications