போதும்டா சாமி! விஜய் டிவிக்கு கும்பிடு போட்ட சரண்யா துருடி.. இன்ஸ்டாவில் வேதனை பதிவு!
சென்னை: தனது கடினமான உழைப்பை உதாசீனப்படுத்தும் போது கவலையாகவே இருப்பதாக நடிகை சரண்யா துருடி தனது இன்ஸ்டா பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகை சரண்யா துருடி ஆரம்பத்தில் கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானார். இதையடுத்து அவர் ராஜ் டிவிக்கு சென்றார். ஆனால் அந்த சேனலில் இரு மாதங்களே இருந்தார்.
பின்னர் ஜீ தமிழ், புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் செய்தியாளராக பணியாற்றினார். இவர் ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சின்னத்திரை
இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்னே ஒரு சில படங்களில் நடித்துள்ளார். பின்னர் சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காததால் சின்னத்திரையில் நடிக்கும் முயற்சியை மேற்கொண்டார். இந்த நிலையில் அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடித்திருந்தார்.

சன் டிவி
இதையடுத்து சன் டிவியில் ரன் என்ற தொலைகாட்சி தொடரிலும் நடித்து வந்தார். ஆனால் சில நாட்களில் சரண்யா இந்த சீரியலில் இருந்து விலகி விட்டார். இதையடுத்து ஆயுத எழுத்து எனும் சீரியலில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த சீரியல் பாதியில் நிறுத்தப்பட்டது.

எந்த சீரியல்
பின்னர் சில காலமாக எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தார். பின்னர் அண்மையில் வைதேகி காத்திருந்தாள் தொடரில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்து வந்த பிரஜனுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்துவிட்டது. இதனால் 50 எபிசோடுகளை கடந்த இந்த சீரியல் அண்மையில் நிறுத்தப்பட்டது.

சரண்யா
இந்த நிலையில் சரண்யா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் இந்த கஷ்டமான நேரத்தில் நான் அமைதியாக இருக்கவே விரும்புகிறேன். இந்த நேரத்தில் எனக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கு எனது நன்றிகள். இப்போது மிகவும் கஷ்டமான காலத்தை சந்தித்து வருகிறேன்.

விஜய் டிவிக்கு முழுக்கு!
உழைப்பை உதாசீனப்படுத்தும் போது மிகவும் மனம் வலிக்கிறது. கூடுதல் பலத்துடன் விரைவில் மீண்டு வருவேன். எதுவும் என்னை சிதைக்க முடியாது என பதிவிட்டிருந்தார். இவரது போஸ்ட்டிற்கு நெட்டிசன்கள் பலர் ஆறுதல் கூறியுள்ளனர். இந்த நிலையில் சரண்யா விஜய் டிவிக்கு முழுக்கு போட்டுவிட்டு ஜீ தமிழுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications