கணவரைப்பற்றி மைனா நந்தினி வெளியிட்ட உண்மை...காதலர் தினத்தில் இப்படி ஒரு ஆசையா??

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடெங்கும் கொண்டாடப்பட்டு வரும் காதலர் தினத்தை தற்போது சின்னத்திரை நடிகர்களான நந்தினி மற்றும் அவரது கணவர் சிறப்பாக கொண்டாடி இருக்கின்றனர்.

காதல் தம்பதிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் மைனா நந்தினி தன்னுடைய கணவரான யோகேஸ்வரன் பற்றிய உண்மையை கூறியிருக்கிறார்.

தொகுப்பாளராக அறிமுகம்

தொகுப்பாளராக அறிமுகம்

தொகுப்பாளராக அறிமுகமாகி சின்னத்திரையில் காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் மைனா நந்தினி, சரவணன் மீனாட்சி சீரியலின் மூலமாக ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து விட்டார். ஆரம்பத்தில் நந்தினி தன்னுடைய படபட பேச்சால் ரசிகர்களின் மத்தியில் பிரபலமடைந்து இருந்தாலும், இவருடைய காமெடி மற்றும் கலக்கலான தமிழ் உச்சரிப்பு மூலமாக மைனா கேரக்டரில் ரசிகர்களின் மனதில் தற்போது வரை இவருக்கு தனி இடம் இருந்து வருகிறது.

கடந்து போன முதல் வாழ்க்கை

கடந்து போன முதல் வாழ்க்கை

சின்னத்திரையில் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் கால் தடம் பதித்திருக்கும் நந்தினி தன்னுடைய சொந்த வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்து இருக்கிறார். இவர் காதலித்து திருமணம் செய்த முதல் திருமண வாழ்க்கை இவர் எதிர்பார்த்த அளவில் அவருக்கு மகிழ்ச்சியை கொடுக்காமல் ஒரு சில நாட்களிலேயே அந்த வாழ்க்கை முடிந்துவிட்டது. அந்த துயரமான நினைவுகளை மறப்பதற்காக இவர் மீண்டும் தன்னுடைய வேலையில் கவனத்தைச் செலுத்தி சின்னத்திரையில் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் மீண்டும் இவருடைய வாழ்க்கையில் வசந்தம் வீசத் தொடங்கியிருக்கிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்

சன் டிவியில் ஒளிபரப்பான நாயகி சீரியலின் நடிகரான யோகேஸ்வரன் இவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவருக்கும் தற்போது ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் சமூக வலைத்தளத்திலும் தங்களுடைய காதலையும், பாசத்தையும் வெளிக்காட்டி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இவர்கள் இருவருமே ஆக்டிவாக இருப்பதால் தினமும் இவர்கள் தாங்கள் செய்யும் சின்ன சின்ன குறும்புகளையும், புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியிட்டு வருகின்றனர்.

மைனாவின் ஸ்பெஷல் வாழ்த்து

மைனாவின் ஸ்பெஷல் வாழ்த்து

இன்று காதலர் தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பினரும் தங்களுடைய அன்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் போது மைனா நந்தினி தன்னுடைய காதல் கணவர் மீது வைத்திருக்கும் பாசத்தை இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு வெளிப்படுத்தியிருக்கிறார். அதில் லவ் யூ பாப்பா...லவ் யூ... நமக்கு பொண்ணு இருந்தா இந்த மாதிரி ஒரு பையன் தான் வேணும்னு வேண்டி இருப்பேன், நீ கிடைச்சதுக்கு ஐ அம் சோ ஹாப்பி.. லக்கி, ஹேப்பி வேலன்டைன்ஸ் டே... என்று கூறியிருக்கிறார். இதற்கு அவருடைய ரசிகர்கள் பலர் இவர்கள் இருவருக்கும் காதலர் தின நல்வாழ்த்துக்களை கூறி ஆசீர்வாதங்களை வழங்கி வருகின்றனர். இன்று போல என்றும் மகிழ்ச்சியும் காதலும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பது பலருடைய ஆசீர்வாதமாக இருந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+