சூரியை சந்தித்த சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்.. விஷயம் இது தானா? குடும்பத்தோடு கொண்டாட்டம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, பாரதி கண்ணம்மா போன்ற வெற்றி சீரியல்களை இயக்கிய பிரவீன் பென்னெட் நடிகர் சூரியை குடும்பத்தோடு சென்று சந்தித்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சூரி குறித்து நிகழ்ச்சியான பதிவு வெளியிட்டிருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
காமெடி நடிகராக சீரியலிலும், திரைப்படங்களிலும் சின்ன சின்ன கேரக்டரில் நடித்து வந்த சூரி இப்போது புகழில் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் வெளியாகும் பல டாப் ஹீரோக்களின் திரைப்படங்களுடன் ஒரு வாரம் தியேட்டரில் ரசிகர்களை வர வைப்பதற்கு அல்லல்பட்டு கொண்டிருக்கும் நிலையில் சூரியின் படங்கள் மக்கள் கூட்டங்களை தியேட்டர் நோக்கி படையெடுக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

தன்னுடைய எதார்த்தமான நடிப்பு மற்றும் கடின உழைப்பு காரணமாக புகழின் உச்சிக்கு வளர்ந்து கொண்டிருக்கும் சூரியை சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் குடும்பத்தோடு சந்தித்திருக்கிறார். பிரவீன் பென்னட் விஜய் டிவியில் முடிவடைந்த பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியல் போன்றவற்றை இயக்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலையும் இயக்கிக் கொண்டிருக்கிறார்.
அப்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்த பிரவீன் பட் சூரியின் சொந்த ஊரான மதுரை பக்கத்தில் உள்ள ராஜாகூர் கிராமத்தில் நடந்த திருவிழாவில் தான் குடும்பத்தோடு கலந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூரியின் சொந்த ஊரான ராஜாகூர் கிராமத்தில் நடந்த திருவிழாவில் விழா ஏற்பாட்டை தானே ஏற்று நடத்தி இருந்தபோது அங்கு கலந்து கொண்ட பல பிரபலங்களை வாழ்த்தி வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
தான் சினிமாவில் புகழ் உச்சத்தில் இருந்தாலும் தன்னுடைய சொந்த ஊரில் தான் எப்போதும் ஒரு ஊர்காரன் தான் என்பதை சூரி அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பது போல இப்போது ஊர் திருவிழாவில் இறங்கி வேலை பார்த்து ஊருக்கு திருவிழாவிற்கு வந்த திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரையும் வரவேற்று அந்த வீடியோவில் பேசி இருந்தார்.

அதே திருவிழாவில் சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் குடும்பமும் கலந்து கொண்டிருக்கின்றனர். தன்னை இந்த திருவிழாவிற்கு அழைத்ததற்காக பிரவீன் பென்னட் சூரிக்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் தான் இப்போது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications