Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நான் அர்ணவ்வின் முன்னாள் மனைவியா? உங்களை மறக்கவே மாட்டேன்! "செவ்வந்தி" நடிகை திவ்யா ஸ்ரீதர் உருக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை எல்லோரும் அர்ணவின் முன்னாள் மனைவி என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு இன்னும் முறைபடி விவாகரத்து நடைபெறவே இல்லை என சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான கேளடி கண்மணி சீரியலில் நடிகை திவ்யாவும் அர்ணவும் காதலித்து வந்தனர். இதையடுத்து இவர்கள் லிவிங் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தனர்.

arnav divya sridhar

பிறகு இருவரும் இந்து முறைப்படியும் இஸ்லாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திவ்யா கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டாகிராமில் தகவல் தெரிவித்திருந்தார். மேலும் அவருடைய திருமண புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார்.

அதை பார்த்த அர்ணவ் அந்த புகைப்படங்களை டெலிட் செய்யுமாறு திவ்யாவிடம் கூறியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் செல்லம்மா சீரியலில் நடித்த அன்ஷிதாவும் அர்ணவ்வும் நெருங்கி பழகுவதாக தகவல்கள் கிடைத்ததை அடுத்து திவ்யா, அர்ணவிடம் நியாயம் கேட்டுள்ளார்.

அப்போது 3 மாத கர்ப்பிணி என்றும் பாராமல் அவரை அர்ணவ் எட்டி உதைத்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து திவ்யா, திருவேற்காடு காவல் துறையில் புகார் அளித்திருந்தார். பிறகு இருவரும் பிரிந்தனர். திவ்யாவுக்கு வளைகாப்பை கூட அவருடன் நடித்தவர்கள்தான் எடுத்து நடத்தினர். இந்த நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்த பெண் குழந்தையை கூட பார்க்க வராமல் இன்ஸ்டா போஸ்டிலேயே தனது குழந்தைக்காக அர்ணவ் உருகினார். இதனால் குழந்தையை பார்க்க செல்லும் போது இருவரும் சேர்ந்துவிடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் விவாகரத்து கேட்டு வேண்டும் என கோர்ட்டில் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில் அர்ணவ்வும் அன்ஷிதாவும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது அன்ஷிதா, அர்ணவ், திவ்யா ஆகியோர் இந்த காதல் பிரச்சினை குறித்து பேசிய விவகாரங்கள் அடங்கிய ஆடியோ வெளியானது. அதில் அன்ஷிதாவும் திவ்யாவும் காது கொடுத்து கேட்க முடியாத அளவுக்கு பேசியிருந்தனர்.

ஆனால் போன இரண்டாவது வாரமே அர்ணவ், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். இந்த நிலையில் திவ்யா தனது இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் அவர் கூறுகையில், "என்னை அர்ணவ்வின் முன்னாள் மனைவி என கூறுகிறார்கள்.

எங்களது விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இன்னும் நாங்கள் சட்டப்படி பிரியவில்லை. வேண்டுமானால் அர்ணவ், என்னுடன் விவாகரத்து ஆகிவிட்டதாக சொல்லலாம். ஆனால் அதில் உண்மையில்லை. நான் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளேன். என் கர்ப்ப காலத்தில் தனியாக இருந்த பல பிரச்சனைகள் வந்தது.

டெலிவரி ஆனதும் ஒரு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு சூட்டிங் போனேன். அப்போது எனக்கு ரொம்ப வேதனையாக இருக்கும். அந்த நேரத்தில் என் அம்மாவும் இறந்துவிட்டார். இதனால் எனது இரு குழந்தைகளையும் எனது அப்பாதான் பார்த்துக் கொள்கிறார். எனவே வாழ்க்கையில் பெற்றோரை தவிர வேறு யாரையும் நம்பிவிடாதீர்கள்.

என் குடும்பம் இப்போதுதான் சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு காரணம் நீங்கள்தான். தமிழக மக்களை நான் மறக்கவே மாட்டேன். ஒவ்வொரு முறை சோர்ந்து போகும் போதும் எனக்கு தைரியத்தை கொடுப்பது நீங்கள்தான். பல பேர் எனக்கு ஆதரவு கொடுத்து இருக்கிறீர்கள், மிகவும் நன்றி. உங்களின் ஆதரவு எனக்கு தேவை என மிகவும் எமோஷனலாக பேசியுள்ளார். இந்த நிலையில் அவருடைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+