பல வருட கனவு நிறைவேறியது.. சந்தோஷத்தோடு ஜோயா போட்ட போஸ்ட்.. குவியும் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ஷாலின் ஜோயா இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய பல வருட கனவு நிறைவேறிவிட்டது என்று சந்தோஷத்தோடு பதிவு ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

சாதாரண மக்கள் முதல் எவ்வளவு பெரிய பிரபலங்களாக இருந்தாலும் சரி அவர்களுடைய வாழ்க்கையில் சில விஷயங்கள் மட்டும் எட்டாத கனியாக இருக்கும். சில குறிப்பிட்ட ஆசை கனவுகளை அடைந்து விட மாட்டோமா என்று பலர் ஒவ்வொரு நாளும் அதற்காக கனவு கண்டு கொண்டு இருப்பார்கள். அதில் பலருடைய கனவுகளில் ஒன்றாக சொந்த வீடு இருக்கும்.

television vijay tv

சொந்த வீடு இல்லாதவர்களுக்கு தான் அதோட அருமை தெரியும். வாடகை வீடுகளுக்காக அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு எப்படியாவது சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற வெறி இருக்கும். ஆனால் சொந்த வீடு எல்லாராலும் கட்டிவிட முடியாது. நாம் கஷ்டப்பட்டு நான் ஆசைப்பட்ட வீட்டை கட்டி முடிக்கும் போது அது பெரிய சாதனையாக தெரியும். அதுபோன்ற ஒரு சந்தோஷத்தை தான் இப்போது ஷாலின் ஜோயா பகிர்ந்து இருக்கிறார்.

ஜோயா சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் ஒரு சில ஷார்ட் பிலிம்களை இயக்கியும் இருக்கிறார். ஆனால் இவருக்கு பிரபலம் கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவர் குக்காக கலந்து கொண்டாலும் கோமாளிகள் போல இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை கவர்ந்தது. இதனாலேயே இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

television vijay tv

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு தான் புது வீடு கட்டி இருப்பதாக சந்தோஷமான செய்தியை ரசிகர்களிடம் இன்று பகிர்ந்து இருக்கிறார். அது குறித்து அவர் வெளியிட்ட பதிவு பிளாஷ்பேக் முதல் 20 களில் ஆரம்பம். நான் கனவு கண்டதிலிருந்து எனக்கு தெரிந்ததெல்லாம் நான் வளர்ந்த பிறகு ஒரு சொந்தமான ஒரு வீட்டை கட்ட வேண்டும் என்பதுதான்.

television vijay tv

நான் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது என் வாழ்நாள் லட்சியமாக இருந்தது. பால்கனியோடு ஒரு சின்ன பிளாட் தான் என்னுடைய வீட்டைப் பற்றிய யோசனையாக இருந்தது. ஆனால் திருமணத்தை பற்றியோ அல்லது அடுத்தவர்களை சார்ந்து வாழ்வது என்றெல்லாம் நான் கனவு கண்டது கிடையாது. இவற்றையெல்லாம் நான் நம்பியதும் இல்லை.

ஆனால் எப்போதும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்று கனவு இருந்தது. நான் பயணம் செய்ய விரும்பினால் பல அந்நிய இடங்களில் வாழ்க்கையை கழித்தாலும் ஒரு வீட்டை கட்டிக்கொண்டு அதில் ஓய்வு பெற வேண்டும் என்ற திட்டம் என்னுடைய மனதில் பல வருடங்களாக இருக்கிறது.

television vijay tv

நான் நினைத்த ஆசைப்பட்ட கனவு இப்போது நிறைவேறியது. இந்த பயணத்தில் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி. எனக்காக உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருந்ததற்கு நன்றி என்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புது வீட்டில் தான் எடுத்த புகைப்படங்களை ஜோயா பகிர்ந்து இருக்கிறார். இதற்கு சின்னத்திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+