வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஷபானா... மகிழ்ச்சியில் ரசிகர்கள்
சென்னை: பிரபலங்கள் என்றாலே வதந்திகளுக்கு பஞ்சமில்லாமல் தான் வந்து கொண்டிருக்கும் அதற்கு தற்போது ஷபானா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக மாறி இருக்கும் ஷபானாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
ஷபானாவின் இந்த ஒரு பதிலுக்குத்தான் ரசிகர்கள் காத்திருந்தோம் என கூறி வருகின்றனர்.

ரசிகர்களின் தேவதை
செம்பருத்தி சீரியலின் மருமகளாக மட்டுமல்லாமல் சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஷபானா தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் வீடியோதான் ரசிகர்களின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல நாட்களாக இவரைப் பற்றி பல வதந்திகள் கிளம்பிக் கொண்டிருந்த நேரத்தில் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இவருடைய அமைதியான ஒரு வீடியோ அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

திடீர் திருமணம்
ஒரு சில மாதங்களுக்கு முன்புதான் தன்னுடைய காதலை சமூக வலைத்தளத்தில் ஓப்பனாக சொல்லிய ஷபானா அதற்குப் பிறகு தன் காதலனோடு அடிக்கடி ஊர் சுற்றி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை வெறுப்பேற்றுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் நான் அப்படி எல்லாம் இல்லை உங்கள் நினைப்புக்கு எதிர்மாறல் என்று காதலை சொல்லிய ஒரு சில மாதங்களில் திடீர் திருமண செய்தியை சொல்லி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்து விட்டார். இவருடைய திருமண செய்தியை கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்தாலும் வாழ்த்துக்களை கூறுவதற்கு மறக்கவில்லை.

தொடரும் வதந்திகள்
ஷபானா முஸ்லிம் மதத்தை சார்ந்தவராக இருந்தாலும், அவர் ஹிந்து மதத்தை சார்ந்த ஆரியனை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் பிடிக்காமல் தான் இருந்துள்ளது. அதனாலேயே இவரை பற்றி பல நேரங்களில் வதந்தி செய்திகளை பரப்பி வந்தனர். திருமணத்தின்போது ஷபானாவின் பெற்றோர் வரவில்லை என ஒரு தரப்பு கூறிக் கொண்டிருந்த நேரத்தில் ஷபானாவின் ரசிகர்கள் ஷபானா அம்மா திருமணத்தில் இருக்கும் போட்டோக்களை சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வந்தனர். ஒரு சில மாதங்களில் ஷபானா ஆரியன் இடையே கருத்து வேறுபாடு என்ற செய்தி பரவிக்கொண்டிருக்கிறது.

வாயடைக்க வைத்த போஸ்ட்
தன்னைப்பற்றி பரவிக் கொண்டிருக்கும் வதந்திகளுக்கு ஷபானா எந்த ஒரு பதிலும் சொல்லவில்லையே என்று ரசிகர்கள் பலர் பீல் பண்ணி கொண்டிருந்தனர். தற்போது தன்னுடைய எங்கேஜ்மெண்ட் நாள் 29.08.2021 என்பதை சந்தோசமாக நினைவுகூர்ந்து எங்கேஜ்மென்ட் போட்டோக்களை வீடியோவாக எடிட் செய்து தன்னுடைய இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டுள்ளார். இதை பார்த்ததும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் அவருக்கு வாழ்த்துக்களை கூறிக்கொண்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தன்னை பற்றிய வதந்திகளுக்கு ஒற்றை போஸ்டில் பதில் கொடுத்து விட்டார் என்று கூறிவருகின்றனர்.
-
சரிகமபா திவினேஷுக்கு நெப்போலியன் கொடுத்த சர்ப்ரைஸ்.. அமெரிக்காவில் நெகிழ்ந்த குடும்பம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications