தத்துவத்தோடு, நல்ல செய்தியை சொன்ன ஷபானா... வாழ்த்தும் ரசிகர்கள்
சென்னை: பல நாட்களுக்குப் பிறகு புன்னகையோடு நல்ல செய்தியை கூறியிருக்கும் ஷபானாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
நாணத்தோடு சிரித்த ஷபானாவை பார்த்து பல ரசிகர்கள் மெய் சிலிர்த்துப் போய் உள்ளார்களாம்.
பல நாட்களாக இதைத்தான் தேடிக் கொண்டிருந்தோம் என ரசிகர்கள் ஷபானாவுக்கு ஆறுதல் கொடுத்து வருகிறார்கள்.

ஷபானா கொஞ்சம் வித்தியாசம்தான்
செம்பருத்தி சீரியல் மூலமாக பட்டிதொட்டியெல்லாம் பிரபலமடைந்த ஷபானா என்ற பெயரைக் கேட்டதுமே பலருக்கும் பார்வதி தான் ஞாபகத்திற்கு வருவார். பார்வதியாக அனைவரின் மனதிலும் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துவிட்ட ஷபானாவிற்கு சமூக வலைத்தளத்திலும் ரசிகர்களின் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. பொதுவாக சீரியல்களில் நடிக்கும் நடிகைகள் பலர் வெள்ளித்திரையில் நடித்து அங்கு தனக்கு அங்கீகாரம் இல்லாத வகையில் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து வருவதால் ஷபானா அவர்களுக்கு எல்லாம் வித்தியாசமானவர்.

மிரளவைத்த திடீர் திருமணம்
சின்னத்திரையில் ஜீ தமிழ் மூலமாக அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரை கதாநாயகிகளை மிஞ்சும் அளவிற்கு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவருக்கு சமூக வலைத்தளத்தில் அதிகமான ஃபேன்ஸ் பேஜ்க்கள் இருந்துவருகிறது. ரசிகர்கள் இவருடைய ஒவ்வொரு க்யூட்டான போட்டோக்களையும் பேன்ஸ் பேஜ்களில் வைரலாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இவர் திடீரென்று காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருடைய திருமணம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், மகிழ்ச்சியையும் கொடுத்திருந்தது.

மகிழ்ச்சியான செய்தி
ஆனால் சமீப காலமாக இவருடைய திருமண வாழ்க்கையை பற்றி பல்வேறு வதந்திகள் கிளம்பி வருகிறது. இந்த நிலையில் எது உண்மை எது பொய் என்று தெரியாத ரசிகர்கள் பலர் ஷபானாவை டேக் செய்து தங்களது சந்தேகங்களை கேட்டு வருகின்றனர். ஆனால் தன்னுடைய திருமண வாழ்க்கையை பற்றி எந்த ஒரு பதிலும் கூறாமல் தற்போது சமூக வலைத்தளத்தில் ஷபானா ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதை பார்த்ததும் ரசிகர்கள் என்னவாக இருக்கும் என்று ஆர்வத்துடன் ஓபன் செய்து பார்த்த போது அது தற்போது அவர் இன்ஸ்டாகிராமில் அடைந்திருக்கும் வெற்றியை பற்றியதாக உள்ளது.

வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சீரியல்களை போலவே சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ்வாகவும் அதிகமான ரசிகர்களோடு இருக்கும் ஷபானா தற்போது 800 கே ஃபாலோவர்ஸ் பெற்றுள்ளார். அதனைக் கொண்டாடும் வகையில் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அதில் ஒரு சிறிய புன்னகை, ஒரு சிறிய மகிழ்ச்சி, வெறும் நிலவு ஒரு சிறிய துண்டு, கனவுகளில் வைக்கோல்களுடன், ஒரு வீட்டில் நாம் இப்போது 800 கே வாக வலுவாக இருக்கிறோம், என்று தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். பல நாட்களுக்குப் பிறகு சிரித்த முகமாக சமூகவலைத்தளத்தில் ஷபானாவை பார்த்ததும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications