மஞ்சள் தாலி கழுத்தில் தொங்க... கண்கலங்கிய ஷபானா.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
சென்னை: ஷபானா மற்றும் ஆரியன் திருமணத்திற்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
பட்டுச்சேலை சரசரக்க மஞ்சதாலி யில் முகம் சிவந்த ஷபானாவுக்கு அவருடைய ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை கூறிவருகின்றனர்.
பலநாள் கனவு இன்னால் நிறைவேறி இருக்கிறது என்று கண்ணீர் ததும்ப தாலி கட்டும்போது தலைகுனிந்த ஷபானாவின் வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.

திருமணம் கைகூடியாச்சு
காதல் பறவைகளாக வலம் வந்து கொண்டிருந்த ஜீ தமிழின் செல்லம் மகள் ஷபானாவும் விஜய் டிவியின் இளம் கதாநாயகன் ஆரியனும் இன்று திருமணத்தை சிறப்பாக முடித்து இருக்கின்றனர். இவர்களின் திருமணத்திற்கு சினிமா நடிகர்கள் மட்டுமல்லாமல் ரசிகர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இதுவரைக்கும் காதலை ரகசியமாக வைத்துக் கொண்டிருந்த இந்த ஜோடி இன்று எளிமையான முறையில் திருமணத்தை முடித்து இருக்கிறது.

ஷபானாவின் திருமண வீடியோ
தன்னுடைய திருமண நாள் எப்போது என்று ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஷபானா நன்றி கூறி உருக்கமாக வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில் தற்போது இவருடைய திருமண வீடியோக்கள் சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது. இவருக்கு திருமணம் எப்போது என்று கேட்டுக் கொண்டிருந்த ரசிகர்கள் இன்று இவருடைய இந்த திருமணத்தை பார்த்ததும் தங்களுடைய அன்பை பொழிந்து வருகின்றனர்.

ரசிகர்களின் குழப்பம்
பட்டு சேலையில் பளபளக்கும் தேவதையாக ஷபானாவை பார்த்ததும் அவருடைய ரசிகர்கள் குஷியாகி இருக்கின்றனர். புடவைக்கு மேட்சாக அணிந்திருக்கும் நகைகளை பார்த்ததும் திருமணம் இன்று தானா அல்லது இனி சீக்கிரத்தில் இருக்குமா?? என்று காலையில் குழம்பி வந்த ரசிகர்கள் தற்போது இவருடைய திருமண வீடியோவை பார்த்ததும் சிறு அதிர்ச்சியில் தான இருக்கின்றார்களாம். ஆனாலும் தங்களுடைய வாழ்த்துக்களை மட்டும் கூற மறக்கவில்லை.

கண்கலங்கிய ஷபானா
தனது காதல் கைகூடிய மகிழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்ட ஷபானா ஆரியன் தாலி கட்டும் போது கண் கலங்கிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதை தொடர்ந்து ஷபானாவும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் இந்த வீடியோவை பதிவிட்டிருக்கிறார். அதில் அவருடைய கல்யாண புடவைக்கு மேட்சாக அணிந்திருக்கும் பிளவுஸில் மிஸஸ் ஆரியன் என்ற வார்த்தை தெளிவாக தெரியும்படி இவர் போஸ் கொடுத்திருக்கிறார். இதைப் பார்த்ததும் இவருடைய தீவிரமான ரசிகர்கள் ஒரு சிலர் மனதிற்குள் வேதனை அடைந்து கொண்டு இருந்தாலும் வாழ்த்துக்களை மழைபோல பொழிகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications