சூட்டிங்கில் விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்.. வலியில் துடிதுடிப்பு! அமெரிக்காவில் சிகிச்சை
சென்னை: மும்பையில் நடைபெற்ற கிங் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. அவருக்கான சிகிச்சை நடந்து வருகிறதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் என்ன நடந்தது என்று தகவல்கள் இப்போது வெளியாகி இருக்கிறது.
பாலிவுட் நடிகரான ஷாருக்கான் மும்பையில் நடைபெற்ற கிங் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இருந்தபோது அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு சண்டைக்காட்சியின் போது இந்த விபத்து நடந்ததாக தெரிகிறது. ஷாருக்கான் டூப் இல்லாமல் நடித்ததாகவும், ரிஸ்க்கான ஸ்டண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருக்கிறது. சிகிச்சைக்காக ஷாருக்கான் அமெரிக்கா அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஷாருக்கானின் தற்போதைய நிலை
ஷாருக்கானுக்கு தசை சிதைவு ஏற்பட்டதாகவும் ஒரு மாதத்திற்கு அவர் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஷாருக்கான் பட குழுவினர் இந்த விபத்து பற்றி எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. அதே நேரத்தில் ஷாருக்கானுக்கு பெரிய காயம் இல்லை சின்ன காயம் தான் என்று அவருடைய நெருங்கிய நண்பர்கள் சிலர் தெரிவிக்கிறார்கள். ஆனாலும் ஷாருக்கான் குணமடைவதற்கு ஒரு மாதத்திற்கு மேலே ஆகும் என்பதால் கிங் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டதாகவும் செப்டம்பர் மாதத்தில் இந்த திரைப்படம் தொடங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
கிங் திரைப்பட நடிகர்கள்
கிங் திரைப்படம் பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனா நடிக்கிறார். அதுபோல இந்த திரைப்படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி வருகிறார். ஷாருக்கானுடன் அவருடைய மகள் சுகானா கானும் இந்த படத்தில் நடிக்கிறார். மேலும் பாலிவுட் நடிகை முகர்ஜி சுபா தாயாராக நடிக்கிறார். இப்படி பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்கும் நிலையில் படப்பிடிப்பு வேகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் படப்பிடிப்பை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிக வசூல் திரைப்படங்கள்
ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அதற்கு முன்பு 2023 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக மூன்று திரைப்படங்களில் நடித்திருந்தார். இதனால் கிங் திரைப்படம் ரசிகர்களால் பெரிதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அந்த திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டது ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான 2 படங்கள் ஷாருக்கானுக்கு ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் கொடுத்த படம் வரிசையில் இணைந்திருக்கிறது. அதாவது பதாம், ஜவான் என்ற படங்கள்தான் ஷாருக்கானுக்கு பெரிய அளவில் வெற்றி கொடுத்த திரைப்பட வரிசையில் சமீபத்தில் இடம்பிடித்த திரைப்படங்கள். ஜவான் திரைப்படத்தை இயக்குநர் அட்லி இயக்கி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications