ஷகா லக பூம்பூம் சீரியல் நடிகரின் தற்போதைய நிலை.. வாய்ப்புக்காக காத்து இருக்காமல் வாழ்க்கையில் சாதனை
ஷகா லக பூம்பூம் சீரியல் மற்றும் ஃபிரண்ட்ஸ் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகர் பரத் ஜெயந்த் ஐஸ்கிரீம் ட்ரக் வைத்து பிசினஸ் செய்து வருகிறார்.
சென்னை: ஷகா லக பூம்பூம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பரத் ஜெயந்த் தற்போது ஐஸ்கிரீம் ட்ரக் வைத்து பிசினஸ் செய்து வருகிறார்.
சீரியலில் மட்டுமல்லாமல் வானத்தைப்போல, ஃப்ரெண்ட்ஸ் போன்ற திரைப்படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக பரத் ஜெயந்த் நடித்திருக்கிறார்.
திரைப்படங்களை தொடர்ந்து வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்காமல் தன்னுடைய மனதிற்கு பிடித்த பிசினஸில் இவர் தடம் பதித்திருப்பதற்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

புதுமையான எண்ணம்
நடிகர் விஜய் நடித்த பிரண்ட்ஸ் திரைப்படத்தில் சிறு வயது விஜய்யாக நடித்த நடிகர் பரத் ஜெயந்த் தற்போது சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு தனியாக ஐஸ்கிரீம் டிரக் ஒன்று வைத்து வியாபாரம் செய்து வருகிறார். தற்போது அவர் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், நான் குழந்தை நட்சத்திரமாக பல சீரியல்களிலும் படங்களிலும் நடித்திருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு காலேஜ் செல்ல ஆரம்பித்த பிறகு சினிமா மட்டுமே ஒரு தொழிலாக இருக்கக் கூடாது என்று யோசித்து ஆரம்பித்தது தான் இந்த தொழில். இந்த தொழிலை வைத்துக்கொண்டு சினிமாவில் வாய்ப்பு தேடலாம் என்று நினைத்தேன். அதற்கு பிறகு நான் எம்பிஏ படிப்பையும் முடித்திருக்கிறேன். தற்போது நான்கு வருடங்களாக ஐஸ் கிரீம் ட்ரக் மூலமாக வியாபாரம் செய்து வருகிறேன் நன்றி கூறியிருக்கிறார்.

சின்ன வயது கனவு
அதோடு தனக்கு இமைக்கா நொடிகள் படத்தில் இயக்குனர் அஜய் உடன் பார்டைமாக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அப்படி செய்து கொண்டிருக்கும் போது தான் நான் நினைத்து வைத்திருந்த ஐஸ்கிரீம் தொழிலை தொடங்குவதற்காக வாய்ப்பும் கிடைத்தது. எனக்கு இந்த எண்ணம் சின்ன வயசுல இருந்து தொடங்கியது. கார்ட்டூன் தொடர்களில் நான் பார்த்திருக்கிறேன் ஆனால் நிஜத்தில் அதிகமாக பார்க்கவில்லையே என்று யோசித்து தான் இந்த மாதிரி ஒரு தொழிலை தொடங்கலாம் என யோசித்தேன். இதில் என்னுடைய நண்பர்களோடு நான் பார்ட்னர்ஷிப் வைத்து ஐஸ்கிரீம் டிரக் மூலமாக வியாபாரம் செய்து வருகிறேன்.

பின்புலம் வேண்டும்
சென்னையில் நான் இந்த மாதிரி வியாபாரம் தொடங்குவது மற்றவர்களை ஈர்க்கும் என்று நம்பினேன். குழந்தை நட்சத்திரமாக இருந்ததால் சினிமாவில் அதிகமாக வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் இல்லை. யாராக இருந்தாலும் அவர்களுக்கு பெரியதாக ஒரு பின்புலம் இருக்க வேண்டும். அவர்கள் மூலமாகத்தான் வாய்ப்பு கிடைக்கும். எனக்கு அந்த மாதிரி ஒரு பெரிய பெண் புலம் எதுவும் கிடையாது. இந்த நிலையில் தான் நான் ஐஸ்கிரீம் ட்ரக் தொழிலை தொடங்கலாம் என்று ஆரம்பித்தேன். ஒருவேளை நான் முயற்சி செய்திருந்தால் ஒரு நடிகராக மாறி இருக்கலாம். ஆனால் நான் அப்போது இந்த தொழிலுக்கு வந்திருக்க மாட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

ஷக லக பூம்பூம்
அதோடு நான் மறக்க முடியாத நபர்கள் என்னுடைய சினிமா வாழ்க்கையில் பார்த்திருக்கிறேன். ஷக லக பூம்பூம் சீரியலின் மூலம் தான் நான் அதிக விஷயம் கற்றுக்கொண்டேன். அதிலிருந்து தான் எனக்கு இந்த ஒரு வித்தியாசமாக ஏதாவது செய்யலாம் என்கிற எண்ணம் தோன்றியது. அந்த சீரியலின் மூலம் தான் எனக்கு ஐஸ்கிரீம் ட்ரக் ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. அந்த சீரியலில் என்னுடைய நடிப்பை பார்த்து இப்போதும் கூட பலரும் நீங்க அந்த சீரியலில் நடித்தவர்கள் தானே!? பள்ளி நாட்களில் நாங்கள் பள்ளி முடிந்து வந்து உட்கார்ந்து அந்த சீரியலை பார்ப்போம் என்று சொல்வதைக் கேட்கும் போது மனதிற்கு பிடித்திருக்கிறது என்று கூறி இருக்கிறார். வாய்ப்புக்காக பலர் அலைந்து கொண்டே இருக்கும் போது கிடைத்த வாய்ப்பை மன சந்தோஷத்தோடு, பயன்படுத்தி வெற்றி கண்டு கொண்டிருக்கும் இவருக்கு அதிகமான வாழ்த்துக்கள் தற்போது குவிந்து வருகிறது.
-
ரகுவரனின் I Know I Know மேனரிசத்துக்கு பின்னால் உள்ள நிஜ மனிதர் யார்? வெளிவரும் அதிர்ச்சி பின்னணி -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications