பார்க்கிறவங்க கண்ணுதான் தப்பாக இருக்கிறது..அஸ்வினுக்கு ஆதரவாக நெட்டிசன்களை விளாசி எடுத்த ஷகிலா
சென்னை: அஸ்வின் திரைப்படத்தைப் பற்றி பலர் தவறாகப் பேசுவதைத் பொறுத்துக் கொள்ள முடியாமல் ஷகிலா நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அஸ்வின் பேசிய ஒரு சில வார்த்தைகள் நெட்டிசன்களுக்கு கிடைத்த அவல்லாக இருந்ததால் தான் இப்படி வன்மத்தை மனதில் வைத்துக்கொண்டு கலாய்க்கிறார்கள் என்று கோபத்தை கொட்டி இருக்கிறார்.

குக் வித் கோமாளியில் அறிமுகம்
மலையாளம், தமிழ் என பல மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று அதிகளவில் ரசிகர்களையும் வைத்திருந்த ஷகிலா இதுவரைக்கும் அவர் வைத்திருந்த பெயரையும் ரசிகர்களின் மத்தியில் இவருக்கு இருந்த இமேஜையும் மாற்றிக் காட்டியது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான். விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறார் என்றதும் இவருடைய ரசிகர்கள் இவருக்கு அதிகமாக ஆதரவு கொடுத்து வந்தனர். தன்னுடைய சமையல் திறமையை நிரூபித்து இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழுடன் சேர்ந்து அதிகமாக புகழ் அடைந்துள்ளார்.

திரைப்படத்தை பற்றி ரசிகர்களின் கருத்து
அவரைப்போலவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருக்கும் அஸ்வின் தற்போது திரைப்படங்களில் அறிமுகம் ஆகியிருக்கிறார். ஆனால் இவர் நடித்த என்ன சொல்ல போகிறாய் திரைப்படத்தை பற்றி சமூக வலைத்தளத்தில் பரவலான கருத்துக்களை நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர். இவருடைய தீவிரமான ரசிகர்கள் அவருடைய படத்திற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் நெட்டிசன்கள் படம் நன்றாக இல்லை என்றும் ஒருமுறை மட்டும்தான் பார்க்க முடியும் என்றும் பலவிதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

நெட்டிசன்களுக்கு பதிலடி
அஸ்வினுக்கு ஆதரவாக தற்போது ஷகிலா தன்னுடைய வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் படம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நன்றாக இல்லை என்று நினைத்தால் பார்ப்பவர்களின் கண்களில் தான் தப்பு இருக்கிறது. படத்தில் அஸ்வின் அழகாக ஓவர் ஆக்டிங் இல்லாமல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுபோல இரண்டு நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் அஸ்வின் 40 படங்களை நான் புறக்கணித்து இருக்கிறேன் என்று கூறி உங்கள் வாயில் அவல் தந்துவிட்டான். அதனால் நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு கண்டமேனிக்கு அவர் மீது கோபத்தில் பேசுகிறீர்கள். எதற்காக இப்படி எல்லாம் செய்கிறீர்கள் ஒரு படத்தை எடுப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது, அதை இப்படி குறை சொல்ல உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது என்று கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
Recommended Video

கோபமான கருத்து
அதுமட்டுமல்லாமல் படத்திற்கு ரிவ்யூ சொல்கிறேன் என்று இஷ்டத்திற்கு பேசக்கூடாது, படத்தை ஒருமுறை மட்டும் தான் பார்க்க முடியும் என்று கூறிய ரசிகர்களுக்கு எல்லோரும் படத்தை ஒரு முறைதானே பார்ப்பார்கள்..!!?? அடிக்கடி பார்த்துக் கொண்டு இருப்பதற்கு நீங்கள் என்ன வேலை இல்லாதவர்களா..!!?? நாட்டில் எவ்வளவோ முக்கியமான வேலைகள் இருக்கிறது அதைப் பற்றி எல்லாம் பேசாமல் இப்படி அடுத்தவர்களை குறை கூறி கொண்டிருப்பது எவ்வளவு மோசமான செயல் தெரியுமா?? பரவி வரும் தொற்றுக்கிருமிகளை பற்றி ஏதாவது பேசி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் அதைப்பற்றி எல்லாம் பேசாமல் இப்படி செய்கிறார்கள் என்று கோபத்தோடு தன்னுடைய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
-
"ஃபாலோவர்ஸ் போயிடுவாங்கனு பயமா?" சேவாக் vs அஸ்வின்.. ஐபிஎல் கமண்டரியில் மோதி கொண்ட வீரர்கள்.. -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications