விஜய் பற்றி சண்முக பாண்டியன் வெளியிட்ட பதிவு.. விஜயகாந்த் மகன்னா சும்மாவா? அதிரடி காட்டிட்டாரே!
சென்னை: தமிழ் சினிமாவின் முக்கியமான திருப்புமுனை காலகட்டத்தில் நிற்கும் நடிகர் விஜய், 'ஜனநாயகன்' படத்திற்குப் பிறகு இனி திரைப்படங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் உணர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்புக்கு பிறகு, பல திரைப் பிரபலங்கள் விஜய்க்கு வாழ்த்துகளை தெரிவித்த நிலையில், கேப்டன் விஜயகாந்தின் மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் வெளியிட்ட பதிவு ரசிகர்களை உருக வைத்துள்ளது.
"ஜனநாயகன்" படத்தோடு சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று விஜய் சொன்ன அந்த ஒரு வரி, எத்தனை ரசிகர்களின் மனசை கனமாக்கிச்சுன்னு சொல்லவே வேண்டாம். இந்த நேரத்தில்தான், விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன் போட்ட அந்த பதிவு...பலருடைய மனதை கவர்ந்திருக்கிறது.

சண்முக பாண்டியன் வெளியிட்ட பதிவில், "அண்ணா"ன்னு அவர் ஆரம்பிச்ச அந்த வார்த்தைகள்லேயே ஒரு உணர்வு இருந்தது. தமிழ் சினிமாவுக்கு நீங்க செய்த பங்களிப்பு சாதாரணமில்லை. ஒழுக்கம், அர்ப்பணிப்பு, மதிப்பீடுகள்... இவையெல்லாம் கோடிக்கணக்கான பேருக்கு ஒரு வழிகாட்டி" என்று விஜய் பற்றி பெருமையாக பேசி இருக்கிறார்.
மேலும் அந்த பதிவில், "செந்தூர பாண்டியன் முதல் நீங்க எடுத்த ஒவ்வொரு பயணத்திலும் என் அப்பா கேப்டன் விஜயகாந்த் உங்களோட நின்னார்". நீங்க சினிமாவை விட்டு விலகினாலும், உங்கள் நடிப்பும் சாதனைகளும் எப்போதும் நினைவில் இருக்கும்.. என்று சண்முக பாண்டியன் சொன்ன வார்த்தைகள், விஜய்க்கு அவர் காட்டிய மரியாதை. அதிலும், "அடுத்த பயணத்தில் உங்களுக்கு சக்தியும் வெற்றியும் கிடைக்கட்டும்"ன்னு அவர் சொன்னது... அரசியல் பாதைக்கு போகும் விஜய்க்கு கொடுத்த ஒரு ஆசீர்வாதம் மாதிரி தான் இருந்தது.

ஒரு விஷயம் இங்க ரொம்ப முக்கியம். "ஜனநாயகன்"க்கு பிறகு நான் இனி நடிக்கப் போவதில்லைன்னு விஜய் சொன்னதும், அதை முதல் ஆளாக வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, பாராட்டி பதிவு போட்டவர் சண்முக பாண்டியன். அதுவே, அவருக்கு விஜய் மேல இருக்கும் மதிப்பை சொல்லுது.
சமீபத்தில் கேப்டன் விஜயகாந்தின் இரண்டாவது நினைவு நாள் வந்தது. பல அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எல்லாம் நேரில் சமாதிக்கு போய் அஞ்சலி செலுத்தினார்கள். அந்த நாள்ல விஜய் நேரில் வரலன்னு சிலர் பேசினாங்க. ஆனா உண்மை என்னன்னா, அந்த நேரத்திலே அவர் மலேசியாவில் இருந்தார்.
நேரில் வர முடியலன்னாலும், கேப்டன் மீது உள்ள மரியாதையை அவர் மறக்கல. சோசியல் மீடியாவுல விஜயகாந்துக்கு புகழ் அஞ்சலி பதிவு போட்டு, தன்னோட நன்றியையும் நினைவையும் வெளிப்படுத்தினார். அது போதுமே... உண்மையான மரியாதை அப்படித்தான் இருக்கும் என்று பிரேமலதா விஜயகாந்த் ஏற்கனவே பேசியிருந்தார்.

"கேப்டன் விஜயகாந்த் ஆசீர்வாதங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்"ன்னு சண்முக பாண்டியன் சொன்ன அந்த வரி, இந்த உறவு சினிமாவை தாண்டி குடும்ப பந்தம்னு உணர வைக்குது. இப்ப விஜய் ஒரு புதிய பாதைக்கு கிளம்புற நேரத்தில, இப்படியொரு உணர்ச்சிப்பூர்வமான வார்த்தைகள் வருவது சும்மா இல்ல. அது கடந்த காலத்துக்கான மரியாதையும், வருங்காலத்துக்கான ஆசீர்வாதமும் சேர்த்த ஒரு உண்மையான வாழ்த்து என்று பலரும் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.
-
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
TVK Vs AVK.. விஜய்க்கு எதிராக புதிய கட்சி தொடங்கிய பவர் ஸ்டார்.. ஆரம்பத்திலேயே தடாலடி சவால் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
பால்வாடி இயக்கம்.. லீடர்னு சுற்றியவன்.. வில்லிவாக்கத்தில் சம்பவம் இருக்கு! உறுதியாக சொன்ன சேகர் பாபு -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
கருப்பு ஆடு யார்? விஜய் - சங்கீதா விவாகரத்து மனு கசிந்தது எப்படி? உண்மையை உடைத்த செங்கல்பட்டு ஆர்டிஐ -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
ஜனநாயகன் பிரச்சனை.. அடிச்சவன் சொல்ல மாட்டான்.. அடிவாங்குபவன் சொல்லனும் சார்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications