யார் மேல கோபம் என்றாலும் என்னைதான் தூக்கிப்போட்டு மிதிப்பார்! கணவர் பற்றி சாந்தி வில்லியம்ஸ் கண்ணீர்
சென்னை: தனது கணவர் வில்லியம்ஸ் தான் பிரசவ நேரத்தில் கூட தன்னை அடித்ததாக சீரியல் நடிகை சாந்தி வில்லியம்ஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் வந்து பெண்களிடம் அன்றாடம் திட்டு வாங்கும் சாந்தி வில்லியம்ஸ், டூரிங் டாக்கீஸ் எனும் யூடியூப் சேனலில் சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் தனக்கு வாழ்க்கையில் நடந்த இன்பத் துன்பங்களை பகிர்ந்துள்ளார்.

அழகான பெண்ணிற்கு இத்தனை சோதனைகளா என கேட்க வைக்கும் அளவுக்கு அவருடைய திருமண வாழ்க்கை மிகவும் மோசமானதாக இருந்தது. கிளியை வளர்த்து புலியிடம் கொடுத்தது போல் சாந்தியின் தந்தை, விருப்பமில்லாத தனது மகளை வில்லியம்ஸுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்த பேட்டியில் அவர் என்னவெல்லாம் கூறியிருந்தார் என்பதை பார்க்கலாம். "நான் முதன்முதலில் வில்லியம்ஸை பார்த்தது ஒரு ஷூட்டிங்கில்தான். முதலில் அவர் யாரென்றே எனக்கு தெரியாது, அழுக்கு சட்டை, கரடு முரடான தோற்றத்துடன் இருந்தார். நான் யாரோ என நினைத்தேன்.
சிறந்த ஒளிப்பதிவாளர்: பின்னர்தான் அவர் ஒளிப்பதிவாளர் என தெரியவந்தது. ஒளிப்பதிவில் அசுரனாக இருந்தார் வில்லியம்ஸ். நல்ல டெக்னிக்கல் அனுபவம் கொண்டவர். அந்த படத்தின் மூலம் என் வீட்டிற்கு அவர் அடிக்கடி வந்தார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி அவரைவிட்டு பிரிந்து விட்டார் என்பது எங்களுக்கு தெரியும்.
இருந்தாலும் என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எனது அப்பாவிடம் கேட்டார். அவரும் ஒப்புக் கொண்டார். ஆனால் எனக்குதான் அவரை பிடிக்கவில்லை. பிறகு நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டியே திருமணம் செய்து கொண்டார்.
இதையடுத்து எனக்கு 4 குழந்தைகள் பிறந்தன. இரு பெண், இரு ஆண் குழந்தைகள். முதல் குழந்தை பிறந்ததும் என் கணவரின் வளர்ச்சியை பார்த்து அவருடைய முதல் மனைவி திரும்ப வந்தார். அதற்கு முன்பே வில்லியம்ஸ் எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவருக்கு நான் உண்மையாக இருந்தேன்.
துரோகம்: ஆனால் அவர் துரோகம் செய்ததை நான் கண்டுபிடித்துவிட்டதால் என்னை கொடுமைப்படுத்திக் கொண்டே இருந்தார். நானும் வில்லியம்ஸிடம் "எனக்கு உங்களுடன் வாழ பிடிக்கலை. நீங்கள் முதல் மனைவியுடனே சென்றுவிடுங்கள் என்றேன்". அவரும் அவ்வாறு செல்ல முற்பட்ட போது அந்த பெண் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார்.
இதனால் திட்டம் பாதியிலேயே நின்றுவிட்டது. யார் மேல் கோபம் என்றாலும் வில்லியம்ஸ் என்னைதான் அடிப்பார், தூக்கிப்போட்டு மிதிப்பார். அவரிடம் அடி வாங்காத நாளே இல்லை, வாங்காத அடியே இல்லை என சொல்லலாம். நான் பிரசவ நேரத்தில் கூட அவரிடம் அடி வாங்கினேன். அனைத்து கொடுமைகளையும் என் குழந்தைகளுக்காக தாங்கிக் கொண்டேன் இவ்வாறு சாந்தி வில்லியம்ஸ் தெரிவித்திருந்தார்.
கார் பிரியர்: இவர் மற்றொரு பேட்டியில் கூறியிருந்ததாவது: எங்கள் வீட்டை சுற்றி அத்தனை கார்கள் இருக்கும். என் கணவருக்கு கார்கள் வாங்குவது என்றால் மிகவும் பிடிக்கும். அதை அவர் குழந்தைகளாகவே பாவித்தார். அந்த கார்கள் ஒவ்வொரு திசையில் நிற்கும். இவர் எங்கு போக வேண்டும் என சொல்கிறாரோ அந்த திசையில் இருக்கும் காரை எடுத்து டிரைவர் காத்திருப்பார். ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு காருடன் சென்றால் அப்போது நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் இவருடைய காரை வாங்கி கொண்டு சுற்றி பார்க்க கிளம்புவார்கள். அந்த அளவுக்கு காரை நன்றாக வைத்திருப்பார் என்றார்.
பின்னணி என்ன: சாந்தி குழந்தை நட்சத்திரமாக தனது 12 வயதில் வியத்நாம் வீடு படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 1999 ஆம் ஆண்டு டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் அவர் நடித்த சீரியல் மெட்டி ஒலி. இதில் சேத்தனின் தாயாக நடித்திருந்தார். அந்த காலங்களில் மகனிடம், மருமகளிடம், சம்பந்தியிடம் ஒரு தாய் எப்படி நடந்து கொள்வாரோ அதை கண் முன் காட்டினார்.
தென்றல் சீரியலில் வில்லி: இவர் அடுத்தபடியாக தென்றல் சீரியலில் நடித்திருந்தார். இந்த சீரியலிலும் மாமியார் கேரக்டரில் வில்லி. அதாவது மகள் செய்தால் சரி, மருமகள் செய்தால் தவறு என இருக்கும் ஒரு கேரக்டர். ஹீரோயின் ஸ்ருதி ராஜை கொடுமைப்படுத்துவார். இந்த சீரியலுக்காக இயக்குநர் கே பாலசந்தரிடம் இருந்து சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.
இவர் சித்தி, அண்ணாமலை, அன்னியன், பூவே உனக்காக, பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்து வருகிறார். தமிழ், மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார். சாந்தி வில்லியம்ஸ் கோவையை சேர்ந்தவர். இவர் மலையாளிக்கு பிறந்தவர். 1979 ஆம் ஆண்டு மலையாள கேமராமேன் ஜெ வில்லியம்ஸை மணந்தார். இருவருக்கும் 26 வயது வித்தியாசம். வில்லியம்ஸுக்கு 40 வயது, சாந்திக்கு 26 வயது.
500 பவுன் நகை போச்சு: இவருக்கு சொந்தமான கே.கே. நகர் வீட்டை படம் எடுப்பதாக கூறி ஜப்தி செய்யும் நிலைக்கு தள்ளிவிட்டார் வில்லியம்ஸ். இதன் மதிப்பு ரூ 100 கோடியாகும். அது போல் சாந்தியின் 500 பவுன் நகைகளையும் விற்று ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டாராம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications