என்னோட சந்தோஷத்துக்கு "அவர்"தான் காரணம்.. உருகி நெகிழ்ந்த ஷிவாங்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னுடைய சந்தோஷத்திற்கு காரணம் எல்லாமே அவர்தான். இந்த நாள் இவ்வளவு சிறப்பாக அமைந்தது ரொம்ப நன்றி அஸ்வினே என மகிழ்ச்சி வெள்ளத்தில் கூறியுள்ளார் ஷிவாங்கி.

ஷிவாங்கி என்று சொன்னதுமே அனைவருக்கும் ஞாபகத்திற்கு வந்துவிடுவது துரு துரு சேட்டைக்கார குழந்தைத்தனமான செல்ல குறும்புதான் .

விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் அறிமுகமாகிக் குக் வித் கோமாளியின் மூலமாக புகழின் உச்சியில் வலம் வந்து கொண்டிருப்பவர்.

பிரபலங்களும் வாழ்த்து மழை

பிரபலங்களும் வாழ்த்து மழை

இவருக்கு பிறந்தநாள் வாழ்த்தை ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் அனைவருக்கும் நன்றி கூறியதோடு ஸ்பெஷல் தேங்க்ஸ் அவருடைய அஸ்வினுக்கு மட்டுமே கூறியிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியை அவ்வளவு சீக்கிரத்தில் யாராலயும் மறந்துவிட முடியாது .

ரசிகர்கள்

ரசிகர்கள்

சீரியலை பார்க்காதவர்கள் கூட இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக மாறிவிட்டனர். இந்த நிகழ்ச்சியில் பார்க்கும் போது மனதில் இருக்கும் கவலைகள் மறந்து தங்களை அறியாமலேயே சிரித்து விடுகின்றனர். அந்த அளவிற்கு கோமாளி குக்குகளும் கலக்கியிருக்கிறார்கள் .அதனாலேயே பலரும் இந்த நிகழ்ச்சியை தற்போது மிஸ் பண்ணி வருகிறார்கள் .

நிகழ்ச்சி முடிஞ்சு போச்சு

நிகழ்ச்சி முடிஞ்சு போச்சு

இந்நேரத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் எல்லாமே ஓரளவு முடிக்கப்பட்டு பழைய எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில் பலரும் அதிகமாகப் பார்க்கப்படும் எபிசோடு களாகவும் நிகழ்ச்சியாகவும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக கன்டஸ்டன்ட் கள் பலருடைய வாழ்க்கை மாறிவிட்டது .அதில் குறிப்பாக அஸ்வின் ஷிவாங்கி ஜோடி வைரலாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

க்யூட்டான ஜோடி

க்யூட்டான ஜோடி

இவர்களுடைய க்யூட்டான ஜோடி பொருத்தத்தையும் ஷிவாங்கியின் ஜாலியான குழந்தைத்தனமான கேரக்டரையும் ரசிகர்கள் நன்றாகவே ரசித்து வருகின்றனர். அதனால் தான் ஷிவாங்கியின் பிறந்தநாளுக்கு அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராம் டுவிட்டரில் ஹாஸ்டேட் கிரியேட் பண்ணி ,ஷிவாங்கியின் பிறந்தநாளை ட்ரெண்டிங் ஆக்கி விட்டனர்.

சிறப்பான நாள்

சிறப்பான நாள்

நேற்று இவருடைய பிறந்த நாள் வெகு சிறப்பாக இந்த நேரத்திலும் கொண்டாடப்பட்டாலும் இன்று ஷிவாங்கி அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார். அதில் என்னுடைய பிறந்தநாளை இந்த லாக்டோன் நேரத்திலும் சிறப்பாக கொண்டாடி எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்த ரசிகர்களுக்கும் தொடர்ந்து கேக்குகளை அனுப்பிவைத்த ரசிகர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள்.

அஸ்விவினுக்கு நன்றி

அஸ்விவினுக்கு நன்றி

எனது இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அதுவுமில்லாமல் என்னுடைய சந்தோஷத்திற்கும் இந்த பிறந்தநாள் மறக்க முடியாத நினைவாக மாற்றிய அஸ்வினுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் என்றும் கூறியிருக்கிறார். இவருடைய இந்த போஸ்ட் பார்த்து ரசிகர்களும் நெட்டிசன்களும் கலாய்த்த வண்ணம் இருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+