அம்மா முன்னாடி.. சம்மணம் போட்டு உட்கார்ந்து.. சமத்துப் பிள்ளை ஷிவாங்கி!
சென்னை : அம்மாவும் நீயே...குருவும் நீயே...என்று ஷிவாங்கி தன்னுடைய அம்மாவின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் பாட்டுப் பாடி அசத்தியிருக்கிறார்.
இந்தப் புள்ள இவ்வளவு சமத்துப் புள்ளையா?? என்று ரசிகர்களே கொஞ்சம் ஷாக்காகி விட்டார்களே!!நம்ம ஷிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோவை பார்த்து.
அடடா..திறமையில் அம்மாவுக்கு சளைத்தவரல்ல என்று எதிர் பாட்டுப்பாடி காதுகளை குளுமையாக்கி இருக்கும் ஷிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோவை தான் அவருடைய ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு வருகிறார்களாம்.

பாடலாலே மெய்மறக்க வைத்துவிடுவார்
சூப்பர் சிங்கரில் ஷிவாங்கியின் பாடலை கேட்டு அசந்து போன ரசிகர்களுக்கு இந்த திறமை எங்கிருந்து வந்தது என்று இப்போ புரிகிறது என கமெண்ட் போட்டு வருகின்றனர். அந்த அளவிற்கு அவருடைய அம்மாவே அவருக்குக் குருவாகவும் நல்ல தோழியாகவும் இருந்து ஷிவாங்கியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். 'தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்' என்ற பழமொழியை சும்மாவா சொல்லி வைத்தார்கள். என்னதான் ஷிவாங்கி வளர்ந்த குழந்தையாக இருந்தாலும் அவருக்குள் இருக்கும் திறமை வேற லெவல் தான்.

கலகலப்புக்கு குறைவில்லை
ஷிவாங்கியின் அம்மா சந்திரமுகியின் திரைப்படத்தில் ரா. .ரா...பாடலை பாடி இருக்கிறார். இதற்காக பல விருதுகளையும் வாங்கி இருந்தாலும், தற்போது தன்னுடைய குழந்தைக்கு பாட்டு சொல்லி கொடுக்கும் அழகை பார்த்து பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சிவாங்கியின் துறுதுறுப்பான சேட்டையை ரசிக்கும் ரசிகர்களால் இவருடைய பாடலை ரசிக்காமல் இருக்கவே முடியாது. இவருடைய குரலுக்கும் இவர் பாடும் அழகுக்கும் சம்பந்தமே இல்லை என்று பலர் கூறி வந்தாலும் அது தான் இவருடைய தனி திறமை. சும்மா பேசும்போது கீச்சுக் குரலில் பேசும் இவர் பாடல் பாடும் போது மட்டும் அந்த பாட்டோடு கலந்து விடுகிறார். கண்மூடி நாம் ரசிக்க மெய்மறந்து போய்விடலாம் அந்த அளவிற்கு தன்னுடைய பாட்டால் அனைவரையும் மயங்க வைத்து விடுவார்.

குறும்புக்கு சொந்தக்காரி
சூப்பர் சிங்கரில் இவருடைய திறமையை பார்த்து ரசித்த ரசிகர்கள் அதே விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் செய்யும் ரகளைகளையும் ரசிக்கத் தவறவில்லை. அதனால்தான் இவருக்கு ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்துகொண்டிருக்கின்றனர். எத்தனை பேர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தாலும் அவர்களுக்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர். ஆனால் அதில் எல்லாம் ஸ்பெஷலாக ஷிவாங்கி தான் இருந்து வருகிறார். இவருடைய குழந்தைத்தனமான சேட்டைகளை பார்த்து இவரை வளர்ந்த குழந்தை என்றுதான் ரசிகர்கள் கூறுகின்றனர்.

அது இவருடைய கேரக்டரே இல்லையே
தற்போது ஷிவாங்கி சில திரைப்படங்களிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். ஆனாலும் இப்பவும் அதே போன்று ஜாலியான கேரக்டராக தான் வந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இவர் இன்று வைத்த ஸ்டோரிதான் அவருடைய ரசிகர்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. அதுவும் இவரா இப்படி எல்லாம் இருக்கிறார் என்றுதான் பலர் யோசித்து வருகின்றனர். அந்த அளவிற்கு இவர் அமைதியும் சொரூபமாக அப்படியே பாடலில் மெய்மறந்து மாறிவிட்டார். இவர் கேரக்டர் இது இல்லையே இப்படி எல்லாம் ஓரிடத்தில் அமைதியாக இருப்பது ஷிவாங்கிக்கு தெரியவே தெரியாதே என்று அவருடைய ரசிகர்கள் கலாய்க்கவும் தவறவில்லை.

எப்பவாது தான் இப்படி
அட போங்கப்பா... ஒருத்தர் எப்பவுமே விளையாட்டுத்தனமாகவா இருப்பாங்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ஆக ஷிவாங்கி மாறிவிட்டார். அம்மாவின் முன்னாடி இவர் சேட்டை பண்ணாம இருக்காவிட்டால் முதுகில் நாலு விழுந்து விடுமே, அதனாலே ஷிவாங்கி நல்ல புள்ளையா உட்கார்ந்திருக்கிறார். வேற ஒன்னும் இல்ல,என்று நக்கல் செய்யும் ரசிகர்களும், என்ன அழகான குரல் வளம் அம்மாவுக்கு போட்டியாக மகளும் இனி வலம் வரப்போகிறார் என்று இப்போதே இவருடைய ரசிகர்கள் கணித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications
