சிரிப்பு சிவாங்கிக்குள் இத்தனை சொல்லாத சோகங்களா? மகளுக்கே பிரச்சனையான அம்மா..!?
சென்னை: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டு இருக்கும் சிவாங்கிக்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டிருக்கிறது.
சிவாங்கிக்கு அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சிவாங்கியை திரைத்துறையை விட்டு விலகி விடுமாறு அவருடைய அம்மா வற்புறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
விஜய் டிவி நிகழ்ச்சியில் பிரபலமான சிவாங்கி சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரை ரசிகர்களுக்கும் பரீட்சையமானவர்தான். ஒரு பாடகியாக வேண்டும் என்று விஜய் டிவியில் காலடி எடுத்து வைத்து ஒரு கோமாளியாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலம் ஆகி தன்னுடைய துரு துருப்பான கேரக்டரால் பலருடைய மனதையும் கவர்ந்து விட்டார்.
கல்லூரி படிக்கும் போதே நடிப்பு பாடல் என்று பிசியாக இருந்து வரும் சிவாங்கிக்கு தற்போது அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில் அறிமுகம் ஆகி இருந்தாலும் அந்த நிகழ்ச்சி அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக மூன்று சீசன்களில் கலக்கி கொண்டு தன்னுடைய பாட்டு திறமையும் பலருக்கும் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்.

அதன் மூலமாகத்தான் சிவாங்கி தற்போது வெள்ளித்தறையிலும் பல வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறதாம். குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த படம் பெரிய அளவில் சிவாங்கிக்கு கை கொடுக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் குக்காக சிவாங்கி கலந்து கொண்டிருக்கிறார்.
அதனாலயே சிவாங்கிக்கு நெகட்டிவ் கருத்துக்கள் வருகிறது. காரணம் சிவாங்கிக்கு ஆதரவாகவே விஜய் டிவி செயல்படுகிறது என்று பலருடைய நம்பிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் சிவாங்கி அதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். தற்போது இது குறித்து சிவாங்கி உடைய அம்மா தரப்பில் இருந்தும் சிவாகிங்கைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலம் அடைந்து இருந்தாலும் அவர் பாடல் துறையில் ஜொலிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய அம்மாவின் ஆசையாம்.

சிவாங்கியின் அம்மாவும் ஒரு பின்னணி பாடகி என்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் தற்போது சிவாங்கி பாடல் துறையில் மின்ன வேண்டும் என்பது அவருடைய அம்மாவின் கனவாக இருப்பதாகவும் அதற்கு சிவாங்கி சம்மதிக்கவில்லை என்றும், சிவாங்கியின் சமூக வலைதள பக்கங்களில் வீடியோ உருவாக்கும் பணிகளை மீடியா மேஷன் நிறுவனம் செய்து வருவதாகவும், அந்த ஒப்பந்தத்தில் நிறுவனத்தின் அனுமதி இன்றி வேறு எந்த இசை கலைஞர்களோடும் சிவாங்கி வீடியோ போட கூடாதாம். அதனால் தான் சிவாங்கி சமீப காலமாக தன்னுடைய அம்மாவோடு எந்த வீடியோவும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய அம்மாவின் சொல்லை கேட்டு சிவாங்கி இசை பயணத்தை தேர்ந்தெடுக்கப் போகிறாரா? அல்லது இப்படியே தொடர்கிறாரா? என்பது பொறுத்திருந்து பார்த்தால் தான் தெரியும்.
-
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த சிறகடிக்க ஆசை ரோகிணி.. இனி ஆட்டம் ஆரம்பம்! என்ன கேரக்டர் தெரியுமா? -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் படிக்கட்டில் அந்த சத்தம்! யாருமே கவனிக்காத நடிகர் திலகத்தின் கை ரகசியம் -
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications