கிண்டலாக கருத்து வெளியிட்டு மாட்டிக்கொண்ட சிவாங்கி.. திட்டும் ரசிகர்கள்.. மணிமேகலை கொடுத்த பதிலடி
மணிமேகலை வெளியிட்ட புகைப்படத்திற்கு சிவாங்கி வெளியிட்ட பதிவு ரசிகர்களின் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை: குக் வித் கோமாளி சீசன்4 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மணிமேகலை புதியதாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
தன்னுடைய சொந்த கிராமத்தில் இருந்து மணிமேகலை எடுத்த புகைப்படத்திற்கு சிவாங்கி கருத்து ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சிவாங்கி வெளியிட்ட கருத்துக்கு ரசிகர்கள் பலரும் திட்டி வருகிறார்கள்.

கருத்து மோதல்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பட்டிதொட்டி எல்லாம் பிரபலமான சிவாங்கி மற்றும் மணிமேகலை இருவரும் வெளியிட்ட கருத்து மோதல்கள் தான் தற்போது ரசிகர்களின் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறப் போகிறேன் என்று திடீரென பதிவு வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த மணிமேகலை, அதற்குப் பிறகு எதற்காக வெளியேறினார் என்ற தகவலை மட்டும் இப்ப வரைக்கும் தெளிவாக கூறாமல் இருந்து வருகிறார்.

வெளியிட்ட புகைப்படம்
ஆனால் வழக்கம் போல தன்னுடைய youtube பக்கத்தில் தொடர்ந்து தன்னுடைய கிராமத்தில் அவர் செய்யும் அட்ரா சிட்டிகளை வீடியோக்களாக வெளியீட்டு வருகிறார். அதுபோல தன்னுடைய சமூக வலைதள பக்கங்களிலும் அடிக்கடி தான் செய்யும் சின்ன சின்ன செயல்களையும் புகைப்படங்களாக வெளியிட்டு வருகிறார். அந்த மாதிரி தான் மணிமேகலை தற்போது தன்னுடைய சொந்த கிராமத்தில் தான் பல வருடங்களாக உழைத்து கஷ்டப்பட்டு வாங்கிய இடத்தை பராமரித்து பக்குவப்படுத்தி வரும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

கிராமத்தில் செட்டில்
குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு மணிமேகலை தன்னுடைய சொந்த கிராமத்தில் செட்டில் ஆகி இருக்கும் நிலையில், தன்னுடைய நிலத்தில் விவசாயத்திற்காக மாற்றிக் கொண்டிருக்கும் புகைப்படத்தை மணிமேகலை வெளியிட்ட நிலையில் அதற்கு HM லேண்டில் ஏதோ ஒன்று தயாராகிறது என்று புகைப்படம் வெளியிட, அதற்கு சிவாங்கி தேங்காய் வியாபாரமா? என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இதை குறித்து நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள். நீங்க போய் தென்னை மரம் நடுங்க என்று சிவாங்கி டேக் செய்து ஒரு ரசிகர் கருத்து தெரிவிக்க, மாங்கா வணிகம் என்று இன்னொரு ரசிகர் கருத்து தெரிவிக்க, நக்கல் உனக்கு சிவாங்கி என்று இன்னொரு ரசிகர் தெரிவிக்க, பல ரசிகர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்த பதில் தேவையா
இந்த நிலையில் சிவாங்கியின் கருத்துக்கு மணிமேகலை புண்ணாக்கு வியாபாரம் என்று ஒரு இமோஜியையும் பகிர்ந்து இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் சிவாங்கி கேட்ட கேள்விக்கு மணிமேகலை சரியான பதிலடி கொடுத்து விட்டார் என்று பாராட்டிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் ஒரு சில ரசிகர்கள் சமூக வலைத்தளத்திலும் உங்களுடைய கிண்டலுக்கு ஓய்வில்லையா என்று கேட்க?, இவர்கள் இருவருக்கும் இது கிண்டல் இருந்த மாதிரி இல்லையே, இங்கே ஏதோ கருத்து மோதல்கள் இருக்கிறதே என்று இன்னும் ஒரு சில ரசிகர்கள் தீயை பற்ற வைக்கிறார்கள். இப்படியாக சமூக வலைத்தளத்தில் மணிமேகலை வெளியிட்ட புகைப்படமும் அதற்கு வரும் கருத்துக்களும் தற்போது பரபரப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: ரோகிணியால் ஜெயிலுக்கு போகும் விஜயா.. மாஸ் காட்டிய முத்து மீனா! மனோஜின் நல்ல மாற்றம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம்












Click it and Unblock the Notifications