பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் சிவாங்கி.. அவரே சொன்ன தகவல்.. "ஜூலி” கொடுத்த அட்வைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் குக்காக சிவாங்கி கலக்கிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் சிவாங்கி பேசிய வார்த்தை ரசிகர்கள் பலருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இருக்கும்.
காரணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டால் எப்படி இருக்கும் என்பது போன்று சிவாங்கி பேசியிருக்கிறார்.
விஜய் டிவியில் ரியாலிட்டி ஷோக்களில் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிகள் என்றால் பிக் பாஸ், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகள் தான். இந்த நிகழ்ச்சிகள் வருடத்திற்கு ஒவ்வொரு சீசன்களாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த சில நாட்களில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கி விடுவது வாடிக்கையாக இருக்கிறது.

அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் மூன்று சீசன்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி இந்த நான்காவது சீசனில் குக்காக மாறி இருக்கிறார். அதனால் நான் இனி அடுத்த சீசனில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறியும் இருக்கிறார். அதோடு இந்த சீசன் டைட்டில் வின்னர் சிவாங்கி தான் என்றும் விஜய் டிவி சிவாங்கியை ஜெயிக்க வைப்பதற்காக பல சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது என்பது பற்றி பல்வேறு வதந்திகளும் பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிக் பாஸ் பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டிருக்கின்றனர். அதில் ஜூலியும் ஒருவர். அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஜூலி சமையல் செய்து கொண்டிருக்கும் போது சிவாங்கி ஜூலியிடம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எல்லாருமே இப்படித்தான் கோபமா நடந்துக்குவாங்களா? என்று கேட்க அதற்கு ஜூலி நீயும் கலந்து கொண்டு பாரு அதுக்கு பிறகு தெரியும் என்று சொல்கிறார்.
அதைக் கேட்டு சிவாங்கி என்னது நானா? பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்று அதிர்ச்சி அடைய, அப்போது அங்கே வரும் குரோசி. நீ எல்லாம் கலந்துக்க வேண்டாம் பென்னி அம்மாவை கலந்துக்க சொல்லு என்று சொல்ல, எங்க அம்மா அங்க கலந்துக்கவே வேண்டாம். எங்க அம்மா அங்க போனா அழுதுடுவாங்க என்று சிவாங்கி கதற, அதுவெல்லாம் உங்க அம்மா அழ மாட்டாங்க. அங்க மட்டும் கேசரி செஞ்சு கொடுத்தா அங்கு இருக்கிறவங்க எல்லாரும் அழுதுருவாங்க என்று கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.
தற்போது இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆமாம் சிவாங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்ததும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் நன்றாகத் தான் இருக்கும். இல்லன்னா சிவாங்கியின் அம்மா பென்னி கலகலப்பான நபராக இருப்பதால் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தாராளமாக வரலாம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு எபிசோட்டில் சிவாங்கியின் அம்மா கலந்து கொண்டு கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். அதனால் அவர் வந்தால் கூட நன்றாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல.. விரக்தியில் விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.. குவியும் ஆறுதல் -
அஜித் மாதிரி யாராலும் இருக்க முடியாது.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம்.. ரகசியங்களை உடைத்த பிரபலம் -
உருவத்தை பார்த்து சிரித்தவர்கள் இன்று மகளை பார்த்து வியக்கிறார்கள்... டிஷ்யூம் பட நடிகர் கின்னஸ் பக்ரு நெகிழ்ச்சி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications