சித்ரா மரணம்.. இவங்கெல்லாம் இரங்கல் தெரிவிக்கலையே.. ஏன் அப்படி
சென்னை: விஜே சித்ரா மரணம் குறித்த சோகம்தான் இன்னும் மக்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது .அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தாலும் சிலர் மட்டும்கண்டுக்காமல் உள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உடன் நடித்த நடிகர் நடிககையர் எல்லாம் இன்னும் கண்ணீருடன்தான் உள்ளனர். முல்லை இல்லாமலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இயங்க ஆரம்பித்து விட்டது மனம் முழுக்க சோகத்துடன் .ரசிகர்களால் இன்னும் நம்பக் கூட முடியாத நிலைதான்.
இந்த நிலைியல் சிலர் சித்ரா மரணத்துக்கு எந்தவிதமான வருத்தத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தியதாக தெரியவில்லை. அது ஏன் என்று ரசிகர்களுக்கும் புரியவில்லை.

எதிரிகள் இல்லாத வாழ்க்கை
எதிரிகளே இல்லாமல்தான் வாழ்ந்து வந்தார் சித்ரா .அதாவது இவர் யாரையும் எதிரியாக நினைத்தது இல்லை .தனது வேலையை சிறப்பாக செய்து முடிப்பதில்தான் கவனமாக இருப்பாராம் சித்ரா .அடுத்தவர்களை கெடுத்து வாழ்ந்தது இல்லையாம். அதேசமயம், அடுத்தவர்களை மகிழ்விப்பதில் இவருக்கு நிகர் இணையில்லையாம்.

சில எதிர்ப்புகள்
இப்படிப்பட்டவருக்கு அவர் விரும்பாமலேயே சில எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்துள்ளன .அதில் ஒன்றுதான் திடீரென ஷிவானிக்கும், சித்ராவுக்கும் முட்டிக் கொண்ட மோதல். இந்த மோதல் யாரும் எதிர்பாராமல் வெடித்தது .இதை இருவருமே நீட்டிக் கொண்டு போகவில்லைஎன்பதால் சண்டையும் சீக்கிரமே முடிந்து போனது.

ஷிவானியுடன் மோதல்
சண்டை வெடித்த நிலையில்தான் ஷிவானி பிக் பாஸ் வீட்டுக்குள் போய் விட்டார் .அவர் விட்டுச் சென்ற கவர்ச்சி போஸ்களை இப்போது தர்ஷா குப்தா கையில் எடுத்துக் கொண்டு விட்டார் .சித்ரா உயிரையே விட்டு விட்டார். இந்த நிலையில்தான் சித்ராவின் மரணத்துக்கு ஷிவானி டீம்இரங்கல் தெரிவிக்கவில்லையே என்று பலரும் ஏக்கம் வெளியிட்டுள்ளனர்.

இரங்கல் தெரிவிக்கலையே
ஷிவானி பிக் பாஸ் வீட்டுக்குள் போனாலும் கூட அவரது டீம் போட்டோஸ் அப்டேட்ஸ் பண்ணிக்கொண்டுதான் வந்தது . ஒரு வாரத்திற்கு முன்பு வரை அப்டேட்ஸ் செய்துள்ளனர். ஆனால் சித்ரா வுக்கு சின்னதாக ஒரு இரங்கல் போஸ்ட் கூட அவர்கள் இன்ஸ்டாகிராமில் போடவில்லை. இதுதான் பலரையும்உறுத்தியுள்ளது. என்ன இருந்தாலும் ஒரு ரிப் போட்டாவது விட்டிருக்கலாம் என்று பலரும் அங்கலாய்க்கின்றனர்.

தர்ஷாவும் சொல்லலை
இதேமாதிரிதான் தர்ஷா குப்தாவும் எந்த இரங்கலும் தெரிவித்தது போல தெரியவில்லை. அவரது இன்ஸ்டா பக்கததிலும் போய்ப் பார்த்தால் தொப்புளில் ரிங் போட்ட படங்கள்தான் தொங்கிக் கொண்டுள்ளன. இரங்கல் போஸ்ட் எதையும் காணவில்லை. ஒரு வேளை தனிப்பட்ட முறையில் குடும்பத்தினருக்கு இவர்கள் இரங்கல் தெரிவித்தார்களோ என்னவோ அது தெரியவில்லை.

இரங்கல் தெரிவிச்சிருக்கலாமே
அதேசமயம், சித்ராவுடன் நெருக்கமாக பழகாத பலரும் கூட இரங்கல் தெரவித்திருந்தனர். ஏன் நடிகை குஷ்பு கூட இரங்கல் தெரிவித்திருந்தார். மனோ பாலா இரங்கல் தெரிவித்திருந்தார். இன்னும் பலரும் கூட இரங்கல் தெரிவித்திருந்தனர் என்பது முக்கியமானது. எதிரிகளாக இருந்தாலும் கூடமரணத்தில் இறங்கி வருவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இங்குதான் எல்லாமே நேர்எதிராக உள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications