19 வயசுப் புயலே.. இளசுகளை ஈர்க்கும் ஷிவானி நாராயணன்!
சென்னை: 19 வயதேயாகும் ஷிவானி நாராயணன்தான்.. டிவி உலகிலேயே ரொம்ப ஹாட்டான அதேசமயம் க்யூட்டான நடிகை என்று சொல்லலாம்.
இப்போ இருக்கிற சூழ்நிலையில் வீட்டில் இருப்பவர்களுக்கு பொழுதுபோக்கு தொலைக்காட்சி தொடர்கள் தான் என்றுதான் சொல்லவேண்டும். எல்லா தொலைக்காட்சியிலும் மறு ஒளிபரப்பு செய்யப்படுகிற சீரியல்களை பார்த்துதான் வீட்டில் இருப்பவர்கள் நேரத்தைக் கழிக்கின்றனர்.
மேலும் சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்கள் போலவே தற்போது சீரியல்களிலும் நடிக்கும் நடிகைகளுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி உள்ளது என்றுதான் சொல்லவேண்டும் .இந்த நிலையில் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணன்.

ஷிவானி நாராயணன்
ஷிவானி நாராயணன் 2001இல் மே 5ம் தேதி பிறந்துள்ளார். இவர் முதல் முறையாக சரவணன் மீனாட்சி மூன்றாம் பாகத்தில் அறிமுகமானார். தன்னுடைய 14வது வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்து விட்டார். உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே தனது மாடலிங் வாழ்க்கையை தொடங்கினார். பல வீடியோ விளம்பரங்களையும் பிராண்டட் விளம்பரங்களையும் செய்தார்.

செம அழகி
மாவட்ட அளவிலான அழகுப் போட்டிகள் மற்றும் பேஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். அதில் இருந்தும் அவர் பெரும் புகழ் பெற்றார். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்னும் சீரியலில் துணை கதாநாயகியாக நடித்துள்ளார். அந்த சீரியலில் அவர் சினேகமாக நடித்திருப்பார். இந்த சீரியல் மூலமாக இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து ரசிகர்கள் உருவானார்கள்.

அன்லிமிட்டெட் டான்ஸ்
சீரியலை தொடர்ந்து இவர் நடன போட்டியில் கலந்துகொண்டார் .அவர் தனது பகல் நிலவு தொடர் ஜோடி முகமது அசினுடன் ஜோடி ஃபன் அன்லிமிட்டட் ரியாலிட்டி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மாடலிங் மற்றும் ஃபிட்னஸ் மீதான ஆர்வம் காரணமாக இவர் சாப்பாடு விஷயத்தில் டயட்டைப் பின்பற்றுகிறார். இது அவரோட பெற்றோராலும் கண்காணிக்கப்படுகிறது. சைவ உணவுகளை மட்டும் தான் சாப்பிடுவாராம்.

கடைக்குட்டி
பகல் நிலவை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடிக்க ஆரம்பித்தார் .அவர் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும்போது அவருக்கும் அந்த சீரியலில் நடித்த நடிகரை பற்றியும் சேர்த்து வந்த கிசு கிசுவினால் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்பிறகு ஜீ தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இரட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியல் மூலமாக தமிழ் மக்களிடையே நிறைய ரசிகர்களை பெற்றுள்ள பெற்றுள்ளார்.

முழு வீச்சில் மாடலிங்
தற்போது தனது மாடலிங் வாழ்க்கையை முழ வீச்சில் தொடங்கி உள்ளார். சென்னையைச் சார்ந்த மகா பிராண்ட்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளார் .தற்போது 19 வயது ஆகும் ஷிவானி நாராயணன் அடிக்கடி தன்னுடைய சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் ஒரு புகைப்படமும் வெள்ளை நிற உடையில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் .இந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சரண்டர் ஆகி விட்டனர்.












Click it and Unblock the Notifications