ஷிவானி போட்டோ போட்டதுமே.. எப்படி வந்து மொய்க்கிறாங்க.. என்னா கூட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தற்போது இன்ஸ்டாகிராமில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் ஷிவானி ரசிகர்கள் போகிற போக்கை பார்த்தால் கோயிலைக் கட்டி விடுவார்கள் போல.

Recommended Video

    Shivani -ன் Charming Dance | Rettai Roja, Pagal Nilavu

    அந்த அளவிற்கு வெறித்தனமாக இவருடைய போஸ்களுக்கு கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். அதிலும் கவிதையாக கொட்டித் தள்ளுகிறார்கள். இதில் பெண்களும் விதி விலக்கல்ல.

    இவர் போடும் போட்டோஸ்கள் போதாது என்று, இன்னும் வேண்டும் என்று குழந்தைகள் போல கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு போட்டோதான் அவர் போடுகிறார்.. அது பத்த மாட்டேங்குதாம் இவர்களுக்கு.

     நச்சுன்னு கருத்து

    நச்சுன்னு கருத்து

    அவர் போட்டோ போட்டதுமே அதில் நச்சென்று கமெண்ட் போட்டுக் குவித்து விடுகிறார்கள். ஏற்கனவே இவர் 2கே கிட்ஸ் ஆக இருந்தாலும் 90ஸ் கிட்ஸ் அனைவரின் கனவுக் கன்னியாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். கொஞ்ச நாளைக்கு முன்னாடி இதே இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்த ரம்யா பாண்டியனையும் சாக்ஷி அகர்வால் ஐயும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இப்போது இவர் முன்னணி இடத்துக்கு வந்திருக்கிறார்.

     கூட ஒன்னு போடலாமே

    கூட ஒன்னு போடலாமே

    எல்லாமே அவர் போடும் ஒற்றை போட்டோவில் தான் என்றும் ரசிகர்களுக்கு தெரியும் இருந்தாலும், இன்னொன்று கிடைக்காதா என்று ஏங்குகிறார்கள் ஒன்றுக்கே இந்த நிலைமை என்றால் ஒன்னுக்கு மேல போட்டா ரசிகர்கள் நிலைமை என்ன ஆகும் .நடிகை நயன்தாரா ஐயா படத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும்போது அறிமுகமானது போல இவரும் 14 வயதில் மாடலாக பணியாற்றி 19 வயதில் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறார்.

     என்னாமா கூவறாண்டா கோவாலு

    என்னாமா கூவறாண்டா கோவாலு

    இவரை அடுத்த நயன்தாரா என்றும் வர்ணித்து வருகிறார்கள். இது உண்மையிலே அவரது ரசிகர்கள்தானா அல்லது இவர் காசு கொடுத்து செட் பண்ணி இருக்கிறார்களா என்றும் பலர் கிண்டல் பண்ணி வருகிறார்கள். 'என்னமா கூவுறாண்டா கோபாலு' என்று வடிவேலின் பாணியில் சிலர் கலாய்க்கிறார்கள் அந்த அளவிற்கு இவர் போஸ்ட் போட்டதும் உருகி உருகி கமெண்ட் போடுகிறார்கள். இதுக்காகவே குத்த வைத்து உட்கார்ந்திருப்பார்கள் போல.

     ஷிவானிக்கும் ஆர்மியா

    ஷிவானிக்கும் ஆர்மியா

    இவர் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் போகப் போகிறார் என்றும் ஒரு செய்தி கசிந்துள்ளது. இது இன்னும் கன்பார்ம் பண்ணவில்லை. அதற்குள் இவருக்கு ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிக்க போகிறார்களாம். ஓவியா ரேஞ்சுக்கு இவருக்கும் ஆர்மியை அமைத்து விடுவார்கள் போல. ஓவியாவுக்கு இருந்த சப்போர்ட்டை ரசிகர்கள் இவருக்கும் கொடுப்பார்களா அல்லது லாஸ்லியாவுக்கு இருந்த பெரும் பட்டாளம் இனி இவருக்கும் வரப் போகிறதா என்று தெரியவில்லை.

     கவர்ச்சி களை கட்டும்

    கவர்ச்சி களை கட்டும்

    ஆனால் இவர் அந்த வீட்டிற்குள் போனால் ஆட்டம் பாட்டம் பாட்டும் தூக்கும் பஞ்சமே இருக்காது ரசிகர்களின் கண்களுக்கு குழுமை ஆகத்தான் இருக்கும் என்று பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இன்னும் அதில் அவர் கலந்துகொள்ள போகிறாரா என்று அபிஷியல் ஆக எந்த நியூஸில் சொல்லவில்லை. அதற்குள் இவரது ரசிகர்கள் நீங்கதான் பிக் பாஸ் வின்னர் என்றெல்லாம் கொண்டாடி வருகின்றார்கள். இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா இந்த மாதிரி பண்ணினால் கூட இருப்பவர்கள் அவருடன் போட்டியோடு தானே பழகுவார்கள் என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.

     அதான் வீட்டுக்கே வருவாங்களே

    அதான் வீட்டுக்கே வருவாங்களே

    சிலர் ஷிவானியை பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று விட்டால் இன்ஸ்டாகிராமில் பார்க்க முடியாது என்றும் தங்களது கவலையைப் போட்டு வருகின்றனற். அதற்கு ஒருவர் இன்ஸ்டாகிராமில் பார்க்கவில்லை என்றால் என்ன டிவியில் தான் அடிக்கடி போட்டுக் காட்டுவார்களே இவரை என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார். ஆக மொத்தம் அத்தனை பேரும் ஷிவானி பைத்தியம் பிடித்து போட்டோ பின்னாடியே திரிகிறார்கள்.

     நான் கண்டுக்கவே மாட்டேன்

    நான் கண்டுக்கவே மாட்டேன்

    ஆனாலும் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசிட்டு போங்க ஆனால் நான் கொஞ்சம் கூட கண்டுக்க மாட்டேன் என்று ரசிகர்கள் தங்களுக்குள் இவ்வளவு சண்டை போட்டுக் கொண்டிருந்தாலும் ஆமாம் இல்லை என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஷிவானியும் ரசிகர்களின் கமெண்ட்டுகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க.. ஷிவானி ரசிகர்களின் பைத்தியம் கவிதை உருவிலும் வேகமாக முற்றி வருகிறது. எங்க போய் முடியப் போகுதோ.. ஷிவானிக்கே வெளிச்சம்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+