அதை விட்டுட்டு வரவே மாட்டேங்குறாரே ஷிவானி.. உத்துப் பார்த்து சிலிர்த்துப் போன ரசிகர்கள்!
சென்னை: சொகுசு கார் வாங்கினாலும் வாங்கினார் வாழ்க்கை முறையே மாறிப் போயிருச்சாம் ஷிவானிக்கு. காரை விட்டு நகர மாட்டேங்குறாராம்...சொகுசு வாழ்க்கை என்பது இதுதானா!! காருக்குள்ளே போனதும் தூக்கம் கண்ணை சொக்கு தாமே நம்ம ஷிவானிக்கு.
பார்த்து பார்த்து கால்மேல் கால் போட்டு கீழே விழுந்திட போறீங்க என பதறிப்போன ரசிகர்கள் கமெண்டுகளில் தங்கள் கரிசனத்தை காட்டுகின்றனர். காரை விட ஷிவானி மேலதானே நம்மாளுங்களுக்கு அதிகம் பாசம் எப்பவும் இருக்கும்.
புது கார் வந்ததிலிருந்து உள்ளேயே சாப்பாடு தூக்கம் எல்லாமேவா!! என்று கலாய்க்கும் ரசிகர்களால் இன்ஸ்டாகிராம் திணறி வருகிறது.

முதல் முதலா இவர்தான் வாங்கியிருக்கிறார்
சின்னத்திரை நடிகைகள் யாருமே வாங்காத காரை ஷிவானி வாங்கியதற்கு பிறகு அவருடைய ரசிகர்கள் போடும் அலப்பரைகள் தாங்க முடியவில்லை. ரசிகர்களே அப்படி என்றால் நான் எப்படி??என்று ஷிவானியும் தற்போது தான் ஒரு குழந்தை என்பதை நிரூபித்திருக்கிறார். எப்படி ஒரு குழந்தைதான் வாங்கியிருக்கும் பொம்மையோ அல்லது ஒரு பொருளையோ கீழே கூட வைக்காமல் அதனுடையே ஒரு சில நாட்கள் சுற்றிக் கொண்டிருப்பது போல ஷிவானியும் தற்போது தன்னுடைய காருடன் மிக நெருக்கமாக இருக்கிறார்.

வளர்ந்த குழந்தைதான் ஷிவானி
கால் மீது கால் போட்டு சீட்டில் அமர்ந்த படியே தூங்கும் ஷிவானியைப் பார்த்து அவருடைய ரசிகர்கள் எங்களையும் ஒரு ரவுண்டு கூட்டிகிட்டு போவீங்களா??என்று ஏக்கத்தோடு கேட்டு வருகின்றனர். நீங்க எல்லாம் பார்க்கறதுக்கு மட்டும்தான் என்பது தெரியாதா!?என்று நெட்டிசன்கள் ரசிகர்களின் கமெண்டுகளுக்கு பதில் அளித்திருக்கிறார்கள். ஷிவானி பதிலளிக்காமல் அவருடைய ரசிகர்களே அவர்களுக்குள் பதிலளித்துக் கொள்வது பார்ப்பதற்கு கொஞ்சம் வேடிக்கையாகத்தான் இருக்கிறது. எப்போது ஷிவானி இந்த மாதிரி மீண்டும் வருவார் என ஏங்கி கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது இவருடைய தரிசனம் வேற லெவல் தான் இன்பத்தை கொடுத்து இருக்கிறதாம்.

பாவாடை தாவணியில் பருவ மங்கை
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்த ஷிவானிக்கு முதல் சீரியலே பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது. இவருடைய நடிப்பை மட்டுமல்லாமல் அழகை ரசிக்கும் ரசிகர்களால் இவர் கதாநாயகியாக நடிக்கும் போது பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை என்பதை நம்ப முடியவில்லை. அந்த அளவிற்கு பாவாடை தாவணியில் பருவ மங்கையாக ரசிகர்களின் மனதில் பசைபோல ஒட்டிக் கொண்டார். அப்போது இருந்தே இவருக்கு ரசிகர்கள் அதிகமாக தொடங்கிவிட்டனர். சீரியலில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் இவர் சீரியலில் வேறு சமூகவலைதளத்தில் வேறு என மூகத்தையும் காட்டி ரசிகர்களை பரவசப் படுத்தி வந்தார்.

சீரியலுக்கு டாட்டா
முதல் சீரியலிலேயே இவருக்கு இருந்த ரசிகர்கள் பட்டாளத்தை பார்த்து தான் இவருக்கு தொடர்ந்து சீரியல் வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தது. ஆனால் சீரியலில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தால் நம்ம திறமைக்கு மதிப்பு இல்லை என்று இவர் சீரியலில் இருந்து திடீரென்று விலகிவிட்டார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியலில் இரண்டு கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் போது அவருடைய ரசிகர்களால் ரொம்பவே ஆர்வமாக அந்த சீரியல் பார்க்கப்பட்டு வந்தது. அதற்குப் பிறகு இவர் அந்த கேரக்டரில் இருந்து விலகியதும் இவருடைய ரசிகர்கள் இந்த சீரியலை பார்ப்பதையே விட்டு விட்டார்களாம். ஆனால் இவர் எப்போது வெள்ளித்திரையில் வருவார் என்றுதான் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மீண்டும் ஆக்டிவாக மாறியாச்சு
ரசிகர்களின் ஆதரவு இவருக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை பார்த்து கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு தான் போய் இருக்கிறார். அதனால் தான் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்தபடி இவர் அங்கு விளையாட வில்லை. ஆனாலும் மீண்டும் இவர் வெளியே வந்த பிறகு தங்களுக்கு பிடித்த மாதிரி இருப்பார் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்து வந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஷிவானி முன்பு இருந்தது போல சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இல்லை. இது ஒரு சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறதாம். ஆனாலும் பல நாட்களுக்குப் பிறகு தற்போது ஒரு சில நாட்களாக தொடர்ந்து போஸ்ட் போடும் ஷிவானிக்கு மீண்டும் ரசிகர்கள் ஆதரவு மழை பொழிகின்றனர்.
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications