புடவையில் புல்லரிக்க வைத்த ஷிவானி...புதுசாய் பார்த்து ரசிகர்கள் தவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பஞ்சு மிட்டாய் சேலை கட்டி பவ்வியமாக அமர்ந்த ஷிவானியை பார்த்து இன்ஸ்டாகிராமே கதிகலங்கி போய்விட்டது.

இதுவரைக்கும் இல்லாத அளவில் வெக்கத்தை சிந்தும் ஷிவானியை இப்படி பார்த்த ரசிகர்களால் ஹார்ட்டின்கள் பறக்கிறது.

அடடா அம்சமா வந்தாலும் இந்த நெட்டிசன்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இவருடைய திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன என்று கமெண்டுகளில் கலாய்த்து வருகின்றனர்.

கெட்டப்பு அள்ளுதே

கெட்டப்பு அள்ளுதே

பார்த்தவுடன் கையெடுத்து கும்பிடத் தோன்றும் வண்ணம், மகாலட்சுமி கெட்டப்பில் குங்குமச்சிமிழ் உடன், குத்தவச்சு, குபீர் சிரிப்புடன், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறி ஷிவானி போட்டுள்ள போஸ்ட் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களிடையே வியப்பையும் வரவேற்பையும் பெற்று வருகிறது.காரும் காப்பி கையுமாக, கலர் கலர் காஸ்ட்யூமில் வலம்வந்த ஷிவானியை இன்று மட்டும் இந்த அளவிற்கு அடக்கமான பொண்ணாக மாற்றிய பெருமை 'கிரேட் லாட் கணபதி' யையே சேரும்.

ரசிகர்கள் எல்லாம் குழப்பத்தில்

ரசிகர்கள் எல்லாம் குழப்பத்தில்

விநாயகர் சதுர்த்தி அதுவுமா நல்ல ஜம்முன்னு மங்களகரமான பட்டுப் புடவையில், கழுத்துவரை கவர் பண்ண பிளவுஸ போட்டுக்கிட்டு...,இது அந்த ஷிவானி!! தானா? என்று சின்ன குழப்பத்தோடு ரசிக்க வைத்திருக்கிறார் ஷிவானி. எல்லாம் ஓகே தான், ஆனா கடைசியில பிள்ளையாரை பிளர் பண்ணி போட்டோ போட்டிங்க பார்த்தீங்களே..! செம்ம தலைவி.. நீங்க என்று,இவரது ரசிகர்கள் குத்தலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

போட்டி கொஞ்சம் ஹெவியா தான்

போட்டி கொஞ்சம் ஹெவியா தான்

சீரியல், பிக்பாஸ்,மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் தனக்கென்று ஒரு புகழையும் ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார் ஷிவானி. இவரை நடிக்க வைத்தாலே படத்திற்கு நல்ல புரமோஷன் என்று எண்ணிய பல இயக்குனர்கள் இவரை கமிட் செய்ய கதை சொல்லி காத்திருந்தனர். பொதுவாக சின்னத்தை செலிபிரிட்டி களின் கனவான பெரியதிரை கனவிற்காக ஷிவானியும் காத்திருந்தார்."பிடித்தாலும் புளியங் கொம்பாக பிடிக்க வேண்டும்" என்று நினைத்திருந்த ஷிவானிக்கு விக்ரம் படம் வாய்ப்பு அமைந்தது. அதுவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஜோடியாக,சட்டென்று ஓகே சொல்லி கமிட்டாகி விட்டார்.காரைக்குடி வாழ் தம்பதிகளாக விஜய் சேதுபதியும்- ஷிவானியும் விக்ரம் படத்தில் நடிக்கிறார்களாம்.

 ரசிகர்கள் எதிர்பார்ப்பு வேற

ரசிகர்கள் எதிர்பார்ப்பு வேற

'விக்ரம்' படத்தில் லோகேஷ் கனகராஜ் இவரை மட்டுமின்றி நிறைய சின்னத்திரை நடிகர்களையும், யூடியூப் பிரபலங்களையும் நடிக்க வைத்துள்ளாராம்.
பொதுவாக ரொமான்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் தராத இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.ஆனால் ஷவானி போன்ற ஹாட் செலிபிரிட்டி களை வைத்துக்கொண்டு ரொமான்ஸ் காட்சிகள் இல்லாமல் இருந்தால் எப்படி? என்று, கொஞ்சம் காதல் காட்சிகளை படத்தில் சேர்த்துள்ளாராம். இயக்குனர் அவரிடம் எதிர்பார்க்கிறது என்னவோ.. தெரியவில்லை., ஆனால் ஷிவானியின் ரசிகர்கள் அவரிடம் எதிர்பார்ப்பது அதுவாகத்தான் இருக்கும்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

பொதுவாக திரைப்படங்களில் கமிட்டாகும் நடிகர்,நடிகைகள் படக்குழு சொல்வதையே பெரும்பாலும் பின்பற்றுவார்கள். வழக்கமாக அதீத கவர்ச்சியுடன் போட்டோ போடும் ஷிவானிக்கு, விக்ரம் படக்குழு ஏதேனும் கட்டுப்பாடுகள் விதித்ததா என்று தெரியவில்லை ! அல்லது இவரே கொஞ்சம் அடக்கி வாசிக்கிறாரோ என்னவோ? கொஞ்ச நாட்களாக தன் கவர்ச்சி எல்லைகளை சுருக்கி போட்டோ போஸ்ட் செய்து வருகிறார். காரைக்குடி இருக்கிற குடும்ப பெண்ணா படத்தில் நடிப்பதால் முழுத் தமிழ் குடும்ப பெண்ணாகவே மாறி,விநாயகர் சதுர்த்தி வாழ்த்து பதிவு செய்துள்ளார். ஆனால் இப்படி அடக்கம் ஒடுக்கம் ஷிவானி ரசிகர்கள் இடம் எடுபடுமா!!? என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+