Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு பக்கமாக சாய்ந்திருக்கு...நாங்க கையை சொன்னோம்.. ஷிவானியை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை : கையை தூக்கி கலக்கலாக போஸ்ட் போட்ட ஷிவானியை வகைவகையாக வம்பிழுக்கும் நெட்டிசன்கள் அவரைப் பாடாய்படுத்தி எடுத்து வருகின்றனர்.

ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லும் விதமே வேற மாதிரிலா இருக்கு என்று ரசிகர்களும் விழுந்து விழுந்து ரசிக்கிறார்கள்.

கையில் போட்டிருக்கும் டாட்டூவை பற்றி கதை கேட்க ஆரம்பித்த ரசிகர்களுக்கு பதில் சொல்ல வாயை திறக்கவே இல்லையே ஷிவானி... ஏதாவது பதில் சொல்லுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாம்.

பொங்கும் கவிதைகள்

பொங்கும் கவிதைகள்

ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி ஷிவானி போட்டிருக்கும் போஸ்ட்டை பார்த்து தான் நம்ம ஆட்களுக்கு இன்று ஓணம் என்பதே நினைவிற்கு வந்திருக்குமோ!!!????? என்று சொல்ல தோன்றும் அளவிற்கு அவரது போட்டோவிற்கு லைக்குகளும் கமெண்ட் களும் டக் டக்கென்று எகிரி வருகிறது..... சும்மாவே போட்டோஷுட்டில் பட்டையைக்கிளப்பும் ஷிவானி, கேரளாவின் ஓணம் பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லி போட்டிருக்கும் வாழ்த்து போஸ்டில் கிட்டத்தட்ட கேரளத்து பைங்கிளி போலவே தாராளம் காட்டியுள்ளார்...தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே கமெண்டுகளை கேட்டு போரடித்து விட்டதோ என்னவோ? கேரள பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி உள்ளதால் கேரள ரசிகர்கள் மலையாளத்தில் கமெண்டுகளை அடிபொலி செய்து வருகின்றனர்.... இருந்தாலும் கலாய்ப்பது வழக்கமாக கொண்டிருக்கும் சில கமாண்டர்கள் கார் வாங்கிய நீங்க.....உங்களுக்கு சால் வாங்க மறந்துட்டீங்களே....... என்று கலாய்கவும் தவறவில்லை.

அந்தப் பக்கம் தெரியலையே

அந்தப் பக்கம் தெரியலையே

ஒரு பக்கத்தை தான் காட்டி இருக்கீங்க இன்னொரு பக்கத்தை காட்டலியே என்று விஜயகாந்த் பாணியில் ஏக்கமாகவும் கேட்டு வருகின்றனர். இவர் வெள்ளித்திரையில் நல்லா நடித்துக் காட்டுகிறாரோ இல்லையோ.... நல்லா காட்டி....நடிக்க வந்துவிட்டார். கும்மென்று இவர் போட்டுருக்கும் போட்டோவை பார்த்து கம்முனு இருப்பார்களா இவரது ரசிகர்கள்.. எல்லோருக்கும் இன்னிக்கு ஓணம் இந்த போட்டோவை பார்த்ததிலிருந்து எங்க மனச காணோம் .....என்று கவிதை மழை பொழிந்து வருகின்றனர். சென்ற வருடம் ஒணத்திற்கு சாதாரண வீடியோ போட்டு வாழ்த்து சொன்ன ஷிவானியின் வாழ்த்து மலையாளக் கரையோரம் சரியாகச் சென்று சேரவில்லையோ என்னவோ!!???? இந்தமுறை நச்சென்று சென்று வாழ்த்துச் செய்தி ரீச் ஆக வேண்டும் என்ற முடிவில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வண்ணம் இந்த போட்டோவை போட்டு வாழ்த்துச் சொல்லியுள்ளார்.

கேப்ஷன் கலக்குது

கேப்ஷன் கலக்குது

பொதுவாக பண்டிகையின்போது அந்தந்த பண்டிகைக்கு ஏற்றார்போல் புத்தாடை உடுத்தி போட்டோ போட்டு வாழ்த்து சொல்லுவது பல நடிகர் நடிகைகளின் பழக்கம்தான் ஆனால் நம்ம ஷிவானி அந்த மலையாள கதாநாயகிகளை மிஞ்சும் வண்ணம் அனைவரது நினைவிலும் நிற்கும்படி ஓமணப் பெண்ணாகவே மாறி கொடுத்துள்ள போஸ் தான் இப்பொழுது இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளது. டிரஸ் போட்டு வாழ்த்துச்செய்தி சொல்றதெல்லாம் சரிதான் ...இந்த போட்டோவில் ட்ரஸ் எங்கப்பா!!??? என்று நம்ம ஆட்கள் கலாய்க்கும் தவறவில்லை எது எப்படியோ இந்த போட்டோவை பார்த்த பிறகுதான் ஷிவானி ரசிகர்களுக்கு ஓணம் பண்டிகையே முழுமை அடைந்தது போல தோன்றுகிறதாம். அதுவும் இவர் முழு முதுகையும் காட்டி முன் பக்கமாக திரும்பி கையைத் தூக்கியபடி கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார். இதில் பொன் ஓணம் என்று நம் என்று இவர் கேப்ஷன் கொடுத்து இருப்பதை பார்த்ததும் இங்கே பொண்ணையே காணவில்லையே என்று கலாய்க்கும் நெட்டிசன்கள் கலவரம் அடங்கவில்லை.

கண்ணுக்குள்ளே நிக்குதே

கண்ணுக்குள்ளே நிக்குதே

ஷிவானி ரொம்ப நாளைக்கு பிறகு போஸ்ட் போட்டாலும் சும்மா நச்சுன்னு நினைவில் நிற்கிற மாதிரி இப்போ போஸ்ட் போட்டுவிட்டார் என்று சிலாகிக்கும் ரசிகர்கள், இனிப்பை மொய்க்கும் எறும்பு போல சுற்றிசுற்றி வருகிறார்களாம். அதுவும் முழு முதுகில் ஒரு பக்கமாக சாய்ந்து இருக்கும் பிளைவுஸும், பாவாடையும் மட்டும் போட்டு இருக்கிறாரே என்று ஏங்கி போன ரசிகர்கள் நாங்க வேணா புடவை வாங்கி அனுப்பவா என்று வாஞ்சனை பொங்குகிறார்கள்.ஸ்டைலுக்கும் அழகுக்கும் இப்போ மீண்டும் ஷிவானி தான் கலக்கல் என்று சொல்லும் வகையில் கலக்கி வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராமில் இவருடைய போட்டோஸ்கள் தான் பெரும்பாலாக பரவி வருகிறது. அதுவும் ஷிவானியின் கையில் போட்டிருக்கும் டாட்டூ பற்றி அதிக ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இவருடைய இந்த அடக்க ஒடுக்கம் கூட ரொம்பவே பிடிச்சிருக்கு என்று சொல்லும் ரசிகர்களின் கூட்டம் கொஞ்சம் இன்று அதிகமாகத்தான் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+