Web Series: சக்கலக்க பூம் பூம்.. கலக்க வரும் வெப் சீரிஸ்.. பெப் 30 சானலில்.. ரெடியா மக்களே!
சென்னை: தமிழின் முதல் ஃபிக்ஷனல் வெப்சீரிஸ் என்ற அடை மொழியுடன் கலக்க வந்துள்ளது சக்கலக்க பூம் பூம் வெப் சீரிஸ். கொஞ்சம் மிரட்சி.. கொஞ்சம் புரட்சி என்று கலக்க வருகிறது.
இது வெயில் காலம் மட்டுமல்ல.. வெப் சீரிஸ் காலமும் கூட. பிரபலங்கள் எல்லாம் வெப் சீரிஸ் பக்கம் புகுந்து விளையாட ஆரம்பித்துள்ளனர். ஆங்கிலம், இந்தி என்று தொடங்கிய இந்த வெப் சீரிஸ் சீசன் தற்போது தமிழிலும் கூட பிரபலமாகத் தொடங்கியுள்ளது.
பெரிய அளவில் இன்னும் தமிழில் வெப் சீரிஸ்கள் வரவில்லை அல்லது வந்தாலும் கவனிக்கப்படவில்லை என்பதே நிதர்சனம். ஆனாலும் கூட சில குறிப்பிட்ட தொடர்கள் மக்களைக் கவர்வதாக உள்ளன.

பெப்30 யூடியூப் சானல்
இப்படிப்பட்ட ஒரு சீரிஸ்தான் ஷக்கலக்க பூம் பூம். இது பெப்30 என்ற யூடியூப் சானலில் ஒளிபரப்பாகும் வெப் சீரிஸ் ஆகும். அதாவது தமிழின் முதல் ஃபிக்ஷனல் வெப்சீரிஸ் என்ற அடை மொழியுடன் இதை களமிறக்கியுள்ளனர். மாயாஜால கதைதான் இது. இந்த தொடரில் முதலாவதாக அறிமுகமாகியிருக்கும் கதை மாஜிக் பென்சில் என்ற கதையாகும்.

மாஜிக் பென்சில்
மாஜிக் பென்சில் கதை பெரிதாக ஒன்றுமில்லை. மூன்று இளைஞர்கள் கையில் ஒரு மாஜிக் பென்சில் கிடைக்கிறது. ஒரு மர்மமான சூழலில் அது அவர்களது கைக்கு வந்து சேருகிறது. அதை வைத்து அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்.. எதையெல்லாம் சந்திக்கிறார்கள் என்பதுதான் கதை. இந்த மாஜிக் பென்சில் மாபெரும் சக்தியை உள்ளடக்கியதாகும். அதை வைத்து நிறைய செய்ய முடிகிறது.

சூப்பர் ஓப்பனிங்
இந்த மாஜிக் பென்சிலைச் சுற்றி நடைபெறும் கதையை சுவாரஸ்யமாக பின்னியுள்ளனர். முதல் எபிசோட் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொதுவாகவே இந்த 90ஸ் கிட்ஸை வைத்து வரும் எதற்குமே நல்ல வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் இந்த ஷக்கலக்க பூம் பூம் தொடருக்கும் நல்லாவே வரவேற்பு இருக்குங்க.

இன்டெர்வியூ ஃபியர்
இன்றைய படித்த இளைஞர்களுக்கு இன்டெர்வியூ ஃபியர் என்பது எப்போதும் இருக்கிறது. எத்தனை கம்பெனிகளில் வேலை பார்த்துவிட்டு எக்ஸ்பீரியன்ஸுடன் வேறு வேலைக்கு இன்டர்வியூ சென்றாலும் அந்த பயம் போவதில்லை. என்னதான் நீங்கள் பயோ டேட்டாவில் எல்லாவற்றையும் கொடுத்து இருந்தாலும், அதை ஓரமா ஒதுக்கி வச்சுட்டு வாட் அபௌட் யுவர் செல் ஃப் என்று கேட்பார்கள் பாருங்கள்....அப்போதுதான் அந்த ஃபியர் ஆரம்பிக்கும். அந்த காட்சியை இதில் காண்பித்து இருக்கிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications