சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரியாகும் சன் டிவி கதாநாயகி.. அப்போ இனி ஆட்டம் வேகம் எடுக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணியின் தோழி வித்யா கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சன் டிவி நடிகையோடு எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

சிறகடிக்க ஆசை சீரியலில் சத்யா விஜயாவிடம் இருந்து பணத்தை திருடிய விஷயம் இப்போது மொத்த குடும்பத்திற்கும் தெரிய வந்திருக்கிறது. சத்யா வீடியோவை ரோகிணி தான் சிட்டி மூலமாக லீக் செய்திருக்கிறார். ஆனால் இந்த விஷயம் முத்துவிற்கு இன்னும் தெரியவில்லை.

siragadikka aasai serial vijay tv

இதுவரைக்கும் சத்யா மீது அதிக நம்பிக்கையில் இருந்த மீனா குடும்பத்தினரும் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதே நேரத்தில் விஜயா, மீனாவிடம் என் வீட்டுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார். சத்யா செய்த வேலையால் இனி சீதாவின் கல்யாணத்திலும் பெரும் பிரச்சனை வரும். ஏற்கனவே சத்யா பைக்கை திருடிய பிரச்சனையில் தான் மீனாவின் கல்யாணம் முடிந்தது.

இப்போது சீதாவின் கல்யாணத்திலும் சத்யாவால் பிரச்சனை வந்திருக்கிறது. இதனால் அவருடைய அம்மா என்ன செய்யப் போகிறார் என்று எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுபோல முத்து மீது சத்யா நம்பிக்கையாக இருப்பது ஆறுதலான விஷயம்தான். காரணம் முத்து கெட்டவன் என்று சத்யா பேசிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று சத்யா வீடியோ வெளியானது பற்றி சிட்டி பேசியிருந்தார்.

siragadikka aasai serial vijay tv

அப்போது கூட உன்னுடைய மாமா தான் இந்த வீடியோவை லைக் செய்தது என்று சொன்னபோது சத்யா கோபப்பட்டு இருந்தார். எனக்கு எங்க மாமாவை பத்தி தெரியும்‌ அவர் கண்டிப்பா இதை லீக் செஞ்சுருக்கா மாட்டார். அப்படி செய்யணும்னா அவர் எப்போவோ செஞ்சிருப்பார். இப்போ அவரோட செல் போன் தொலைஞ்சு போயிடுச்சு அதிலிருந்து நீதான் இந்த வீடியோவை லீக் செஞ்சிருப்பேனு எனக்கு தெரியும் என்று சொல்லி இருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

இப்படியான நிலையில் இந்த சீரியலில் ரோகிணியின் தோழியாக வித்யா கேரக்டரில் நடிக்கும் ஸ்ருதி நாராயணன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்கள் தான் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. அதாவது ஸ்ருதி நாராயணன் சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் கோமு கேரக்டரில் நடித்த பென்ஸியுடன் புகைப்படங்களை எடுத்து இருக்கிறார்.

siragadikka aasai serial vijay tv

இவர்கள் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்க்கும் ரசிகர்கள் அப்போ பென்சி சிறகடிக்க ஆசை சீரியலில் என்ட்ரியாக போகிறாரா? இவரால்தான் இனி கதை மாறப் போகிறதா? என்ற கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒருவேளை பென்சி இந்த சீரியலில் வந்தால் கூட என்ன கேரக்டராக இருக்கும் என்பதும் யூகிக்க முடியாத வகையில் தான் இருக்கிறது.

ஏற்கனவே முத்துவும் மீனாவும் இனி தனிகுடித்தனம் இருக்கும் போட்டோஸ் வெளியாகியிருக்கிறது. அவர்களுக்கு உதவுவதற்காக கூட இவர் வருகிறாரா அல்லது ஸ்ருதி நாராயணன் வேறு எதுவும் பங்க்ஷனில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறாரா என்றும் குழப்பமாக இருக்கிறது. ரசிகர்கள் இதை பற்றி எழுப்பும் கேள்விகளுக்கு ஸ்ருதி எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+