ஹிந்தி பிக்பாஸில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட ஸ்ருதிகா! எமோஷனலாக பேசிய வீடியோ
சென்னை: ஹிந்தி பிக்பாஸில் 18வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஸ்ருதிகா எவிக்ஷன் செய்யப்பட்டிருக்கிறார். அவர் வெளியே வந்த பிறகு வெளியிட்டதாக ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழை போலவே பல மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஹிந்தியில் 18வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இது தமிழ் பிக் பாஸ் தொடங்கிய அதே அக்டோபர் ஆறாம் தேதி தான் தொடங்கப்பட்டது. தமிழில் அதிகமான விஜய் டிவி பிரபலங்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஹிந்தியில் முதல் முறையாக தமிழ் நடிகை போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார்.

ஸ்ருதிஹா ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பிரபலம் கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஸ்ருதிஹா கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதிரடியாக ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போய்விட்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்து சிறப்பாக விளையாடி வந்தார்.
எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் பேசி வந்தார். அதோடு போட்டியாளர்கள் யாருக்கேனும் பிரச்சனை என்றால் முதல் நாளாக அங்கு குரல் கொடுத்தது ஸ்ருதிகா ஆனாலும் கடந்த வாரத்தில் அவர் எவிக்ஷன் லிஸ்டில் இடம் பிடித்திருந்தார். இதற்கு முன்பு சில முறை ஸ்ருதிகா இடம் பிடித்து இருந்தாலும் ஸ்ருதிகா காப்பாற்றப்பட்டார்.
ஆனால் அடுத்த வாரத்தோடு இந்த நிகழ்ச்சி முடிவடையை இருக்கும் நிலையில் இறுதி கட்டத்தில் ஸ்ருதிகாவை அவரோடு நட்பாக பழகிய ஒரு சில போட்டியாளர்கள் நாமினேஷன் செய்தது ஸ்ருதிகாவிற்கு மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்களுக்குமே அதிர்ச்சியை கொடுத்தது.
ஸ்ருதிகா ஒரு சில போட்டியாளர்களை நட்பு என்று நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார் என்பது பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தெரியும். ஆனால் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனாலேயே தன்னுடைய நண்பர்கள் என்று சும் மற்றும் கிரண் போன்ற போட்டியாளருக்காக ஸ்ருதிகா பல விஷயங்களை செய்திருந்தார்.
ஆனாலும் அவர்கள் எல்லோரும் ஒரே அணியாக சேர்ந்து ஸ்ருதிகாவை ஒதுக்கி வைத்து விட்டார்கள். கடந்த வாரத்தில் ஃபேமிலி ரவுண்டு நடைபெற்றது அப்போது ஸ்ருதிகாவின் கணவர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தார். அவர் ஸ்ருதிகாவிடம் பட்டும் படாமலும் ஸ்ருதிகாவிடம் இந்த விஷயத்தை சொல்லி இருந்தார்.
ஆனால் ஸ்ருதிகா இதை புரிந்து கொள்ளாமல் மீண்டும் தன்னுடைய நட்பு என்று ஏமாற்று குழிக்குள் விழுந்து விட்டார். ஸ்ருதிகாவிற்கு வாக்கு செலுத்த சொல்லி விஜய் டிவி பிரபலங்களான புகழ் குரேஸி, தர்ஷன், ரோஷினி போன்ற பலர் வீடியோ வெளியிட்டுக் கொண்டிருந்தனர். ஆனாலும் வாக்குகளின் அடிப்படையில் ஸ்ருதிகா அதிரடியாக வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அவர் வெளியே வந்த பிறகு பேசியதாக ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதில், எனக்கு சப்போர்ட் பண்ண எல்லாருக்கும் ரொம்ப நன்றி, நம்ம ஊர்ல இருந்து மட்டுமல்ல அமெரிக்கா, நியூஸ்லாந்து என நிறைய இடத்தில் இருந்து மெசேஜ் போட்டு வாழ்த்து சொன்னாங்க. அவ்வளவு சப்போர்ட் கொடுத்து இருக்கீங்க.
எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு. இதற்கு எப்படி நன்றி சொல்றதுன்னு எனக்கு தெரியல. எங்க அப்பா என்னை ரொம்ப கஷ்டப்பட்டு இந்த நிகழ்ச்சிக்காக அனுப்புனாரு. நானும் நல்லா விளையாடனும்னு தான் அங்க எல்லாம் செய்தேன். ஆனால் ஒரு இடத்தில் நான் அழுததை பார்த்து எல்லோரும் அழுததாக சொன்னாங்க.
உங்களை அழ வச்சதுக்கு ரொம்ப சாரி. நீங்க எல்லாரும் என்ன ரொம்ப ஹாப்பியாக்கி இருக்கீங்க. உங்க எல்லாரையும் நான் ஹேப்பி ஆக்குவேன். இதுவரைக்கும் எனக்கு சப்போர்ட் செய்த எல்லோருக்கும் நன்றி என்று அந்த வீடியோவில் எமோஷனலாக ஸ்ருதிகா பேசியிருக்கிறார்.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications