சட்டப்பேரவையில் விஜய் பேச்சு எதிரொலி.. சிபி சத்யராஜ் போட்ட பதிவு! யாருக்கு இந்த பதிலடி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று நடந்த விவாதம் அரசியல் வட்டாரத்தை மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருக்கிறது. குறிப்பாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் பேசிய பதிலுறை, திமுக மீது வைத்த குற்றச்சாட்டுகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது என நேற்று முழுக்க சட்டப்பேரவை நிகழ்வுகள் தான் ஹாட் டாபிக்காக இருந்தது. இந்த நிலையில் நடிகர் சத்யராஜ் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ் சட்டப்பேரவை நடவடிக்கைகளை நேரடி ஒளிபரப்பு குறித்து போட்டுள்ள பதிவு கவனம் பெற்று வருகிறது.

சிபி சத்யராஜ் ஆரம்பத்தில் இருந்தே விஜய்க்கு சப்போர்ட் செய்து வருகிறார். சத்யராஜ் மற்றும் அவருடைய மகள் இருவரும் திமுக ஆதரவாளர்களாக இருக்கும் நிலையில் ஒரே வீட்டில் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து சத்யராஜ் மகன் மட்டும் விஜய்க்கு ஆதரவாக இருந்து வருகிறார். இதுவே பெரிதாக பேசப்படும் சமயத்தில் சில நேரங்களில் தன்னுடைய சகோதரி விஜய்க்கு எதிராக பேசியதற்கு கூட சிபி சத்யராஜ் பதில் கொடுத்து இருக்கிறார்.

Sibiraj

சிபி சத்யராஜ் பதிவு

இந்த நிலையில் அவர் இன்று வெளியிட்ட பதிவில், சட்டப்பேரவை நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மாநிலத்திற்கு உண்மையில் யார் உழைக்கிறார்கள்? சட்டப்பேரவை நடவடிக்கைகளுக்கு யார் இடையூறு செய்கிறார்கள்? என்பதை மக்கள் நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று அந்த பதிவில் அவர் சொல்லி இருக்கிறார்.

இதுதான் இப்போ இணையத்தில் வைரலாகி விவாதத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலர் விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதற்கு சப்போர்ட் கொடுக்கின்றனர். இன்னும் ஒரு சிலர் அப்பாவும் சகோதரியும் திமுகவுக்காக சப்போர்ட் செய்கிறார்கள் ஆனால் இவர் அவர்களையே கலாய்த்து இப்படி போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறாரே என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மூன்று நாட்கள் இடைவெளிக்கு பிறகு நேற்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் சட்டம், ஒழுங்கு தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் விஜய் பதிலளித்தார்.

முதல்வர் விஜய் பேச்சு

அப்போது திமுக ஆட்சி காலம் தொடர்பாக சர்க்காரியா ஆணையம் தொடங்கி பல்வேறு விவகாரங்களையும் முன்வைத்து ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதற்கு திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. சபாநாயகர் அருகே திமுக உறுப்பினர்கள் அமலியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். அதே பேச்சில் அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்கும் விஜய் எதிர்ப்பு தெரிவித்தார்.

அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் தனிப்பட்ட தாக்குதல்கள் தரகுறைவான பேச்சு இருக்கக் கூடாது என்றும் அவர் சொல்லி இருந்தார். ஏற்கனவே சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு இளைஞர்களும், தலைமுறையினர்களும் ஆர்வம் காட்டி வரும் நிலையில் இப்போது சிபியின் பதிவும் கவனம் பெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+