சிம்பு லோக்கல் டாக்டர் இல்லை...ஃபாரின் டாக்டர்...!! அப்பவும் அசிஸ்டன்ட் இவரா..!!??
சென்னை: ஏகப்பட்ட மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தாலும் ஹாலிவுட் சூப்பர் ஹிட் பட போஸ்டர் உடன் எஸ். டி. ஆர் அவர்களின் டாக்டர் பட்டத்தை இமிடேட் செய்து வலம் வருகிற போஸ்டர் ஒன்று செம வைரலாக உள்ளது.
Recommended Video
அதுவும் பின்னாடி கூல் சுரேஷ் கெட்டப் வேற லெவல்...!!!

ஆனந்தக் கண்ணீர்
தன்னுடைய மகன் சிலம்பரசன் டாக்டர் பட்டம் வாங்கியதை பார்த்து டி.ஆர் ஆனந்தக் கண்ணீர் விட.... அவரது ரசிகர்களும் சந்தோசத்தில் இணையத்தில் பாராட்டு மழைகளை பொழிய.... என்று ஒருவழியாக டாக்டர் பட்டம் பெரும் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தாலும், நிகழ்ச்சி குறித்த கருத்துக்களும், கலாய்ப்புகளும் இன்னும் இணையத்தில் ஓய்ந்தபாடில்லை. அதுவும் பின்னாடி கூல் சுரேஷ் கெட்டப் வேற லெவல்...!!!

சர்ச்சைகளும், கருத்துகளும்
கௌதம் மேனன் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவருகிறார் சிம்பு. அந்த வேல்ஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பாக சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா உட்பட பல செலிபிரிட்டிகள் சிம்புவை சமூக வலைதளங்களில் வாழ்த்தி இருந்தாலும், பல்வேறு சர்ச்சை கருத்துகளும் கூடவே வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

வேல்ஸ் நிறுவனத்தின் வாக்குமூலம்
தங்கள் நிறுவன படத்தில் நடிப்பதற்கும், டாக்டர் பட்டம் அளிப்பதற்கும் எந்த சம்பந்தமில்லை என்று வாண்டடாக வந்து வாக்குமூலம் கொடுக்கும் வேல்ஸ் நிறுவனம், சினிமாவில் சிறுவயதிலிருந்தே 39 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்காக மட்டுமே டாக்டர் பட்டம் வழங்குவதாக கூறியுள்ளது.இந்த அறிக்கையைப் பார்த்த நெட்டிசன்கள் சமீபகாலமாக சிம்புவின் நடவடிக்கையை பார்க்கும்பொழுது சிம்புவிற்கு டாக்டர் பட்டம் கொடுப்பதைவிட சிம்புவை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களுக்குதான் உண்மையிலேயே டாக்டர் பட்டம் கொடுக்க வேண்டும் என்று கலாய்த்து வருகின்றனர்.வேல்ஸ் நிறுவன படத்தில் நடித்தால் கதாநாயகர்களுக்கு டாக்டர் பட்டம் இலவசம் என்று சத்தமில்லாமல் விளம்பரமும் செய்து வருகின்றனர்.

நெட்டிசன்கள் கமெண்ட்
கண்டென்டுகளுக்கு கன்னாபின்னாவென்று உருவம் கொடுக்கும் நம்ம மீம்ஸ் கிரியேட்டர்கள்,சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியதை பிரபல ஹாலிவுட் சூப்பர் ஹிட் மூவியான "டாக்டர் ஸ்டிரேன்ச்" படத்தில் டாக்டர் எஸ்.டி.ஆர் என்று எடிட் செய்து உருவாக்கியுள்ள மீம்ஸ்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.அதுவும் சமீப காலமாக சிம்புவின் பி.ஆர்.ஓ போல் செயல்பட்டு வரும் கூல் சுரேஷ் சிம்புவுடன் இணைந்து நடந்து வருவதுபோல் உலாவரும் இந்த மீம்ஸ்கள் சிம்புவுக்கு பொருந்துகிறதோ..!? இல்லையோ..!!? கூல் சுரேஷ்க்கு கரெக்டா இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications