பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு நடிகர் சிம்புவுடன் கல்யாணமா? லீக்கான போட்டோ.. பின்னணி சம்பவம்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவருக்கும் சிம்புவுக்கும் திருமணம் நடந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் தலைவா இது என்ன புது கதை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது பற்றி விரிவாக பார்க்கலாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்க மயிலின் தங்கச்சி சுடர் கேரக்டரில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைக்கும் சிம்புவுக்கும் கல்யாணம் என்பதுபோல சில புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து இந்த சீரியலில் சுடரின் அப்பா அம்மாவாக நடித்திருக்கும் தங்கமயில் பெற்றோர்கள் ஒரு பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர்கள்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயிலின் குடும்பமே ஃபிராடு குடும்பம் என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். வேலைக்கே போகாமல் வெட்டியாக சுற்றி திரியும் அப்பா, அடாவடியாக பேசி திரியும் அம்மாவின் மூத்த மகள் தங்க மயிலை எத்தனையோ பொய்யை சொல்லி பாண்டியன் குடும்பத்தில் கல்யாணம் பண்ணி வைத்தனர். ஆனால் தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் தெரிந்து கொண்ட அவருடைய புருஷன் சரவணன் தங்கமயிலை வீட்டை விட்டு துரத்திவிட்டு இருக்கிறார்.
சீரியல் கதை
அதோடு விவாகரத்து வழக்குக்கும் தொடர்ந்து இருக்கிறார். இந்த நிலையில் தங்கமயில் இப்போது கர்ப்பமாக இருக்கிறார். அதே நேரத்தில் சரவணன் தன்னுடைய முன்னாள் காதலி அஞ்சலியுடன் அடிக்கடி பேசிக் கொண்டிருக்கிறார். இந்த விஷயமும் பாண்டியனுக்கு தெரிய வந்திருக்கிறது. ஆனால் விவாகரத்து முடிகிற வரைக்கும் அந்த பொண்ணுக்கு எந்த வாக்கும் கொடுக்காதே என்று சரவணனுக்கு பாண்டியன் அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.
சிம்பு போட்டோ பின்னணி
இதனால் சரவணன் அஞ்சலி கல்யாணத்திற்கு பாண்டியனுக்கு சம்மதம் தான் என்பது போலத்தான் கதை போய்க்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தங்கமயில் அப்பா அம்மாவாக நடிக்கும் பாக்கியம் மற்றும் நடிகர் சைவம் ரவி இருவரும் ஒரு பேட்டியில் கலந்து கொண்டனர். அப்போது உங்களுடைய மூத்த மகள் தங்க மயிலுக்கு நீங்க ஏமாற்றி செய்து வைத்த கல்யாணம் பெரிய பிரச்சனை ஆனதால் உங்களுடைய சின்ன மகள் அவளாகவே கல்யாணம் பண்ணிக்கிட்டா என்று சொல்ல அதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

சிம்பு தான் ஹைலைட்
மாப்பிள்ளை யாரு என்று பார்க்கும்போது சுடருடன் நடிகர் சிலம்பரசன் திருமண கோலத்தில் இருப்பது போன்ற போட்டோவை காட்டி இருக்கின்றனர். இந்த போட்டோவை பார்த்ததும் சைவம் ரவி அப்போ சிம்பு தான் என்னுடைய சின்ன மாப்பிள்ளையா? டி ராஜேந்தர் எனக்கு சம்பந்தி ஆகிவிட்டாரா? என்று கிண்டலாக கேட்டிருக்கிறார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வர ஒரு சிலர் இதையும் உண்மையாக சிம்புவுக்கு கல்யாணமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏப்ரல் ஃபூல்
நேற்று ஏப்ரல் ஒன்றாம் தேதி அதுவும் ஆக இந்த ஏஐ போட்டோக்கள் இணையத்தில் வைரலாக்கி ஏப்ரல் ஃபூல் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 40 வயதை கடந்து விட்ட சிம்புவுக்கு எப்போது கல்யாணம் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் அவரை பிடிக்கும் என்று சொல்லும் நடிகைகளுடன் சிம்பு இணைத்து பேசப்பட்டு வருவது சில வருடங்களாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் இப்போது ஏஐ மூலமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை உடன் சிம்பு ஃபோட்டோ இணைக்கப்பட்டு வருவதை பார்க்கும் சிம்புவின் ரசிகர்கள் தலைவா இதற்காகவாவது சீக்கிரமா கல்யாணத்தை பண்ணிடுங்க என்று சிம்புவுக்கு வேண்டுகோள் வைக்கின்றனர்.
-
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்













Click it and Unblock the Notifications