எங்க டைரக்டரை என்ன பண்ணி வச்சிருக்கீங்க? உங்களை சும்மா விட மாட்டேன்! கௌதம் மேனனுக்காக நடிகர் சிம்பு பேட்டி
சென்னை: நடிகர் சந்தானம் நடித்த டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. அதில் கௌதம் மேனன், நடிகர் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படத்தில் இடம் பெற்ற பாடலுக்கு டான்ஸ் ஆடி இருக்கிறார். இதை பற்றி நடிகர் சிம்பு சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் "எங்க டைரக்டரை என்ன பண்ணி வச்சிருக்கீங்க? உங்களை சும்மா விடமாட்டேன்" என்று பேசி இருக்கிறார்.
இயக்குனர் கவுதம் மேனனை இயக்குனராகவும், குணச்சித்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். வில்லனாக கூட விடுதலை படம் உட்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இப்போது அவர் நடிகர் சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தில் காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். இதுவரைக்கும் மிரட்டலாக இருந்த இவர் இந்த திரைப்படத்தின் டிரைலரில் காக்க காக்க திரைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த உயிரின் உயிரே பாடலுக்கு கௌதம் வாசுதேவன் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் டான்ஸ் ஆடி கடற்கரையில் ஓடி விளையாடிய காட்சிகள் இருந்தது. அது இணையத்தில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது.

கௌதம் மேனன் பாடல்
எப்படி இருந்த கௌதம் வாசுதேவன் இப்படி மாறிட்டாரே என்று பலர் கமெண்ட் கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இது குறித்து நடிகர் சிம்பு டிடி நெக்ஸ்ட் லெவல் டிரைவர் வெளியீட்டு விழாவில் பேசியிருக்கிறார். அதில் அவர் பேசும்போது நடிகர் சந்தானம் குறித்து என்னுடைய நண்பர்கள் பலரும் என்கிட்ட சொல்லுவாங்க, நீங்க எத்தனையோ பேருக்கு உதவி செஞ்சிருக்கீங்க ஆனா அவங்க எல்லாரையும் விடவும் சந்தானம் மட்டும் எந்த ஒரு பேட்டியில் கலந்து கொண்டாலும் உங்களை மென்ஷன் பண்ணாமல் அவர் பேசியதே கிடையாது.
சிம்புவின் பாராட்டு
உங்களை எப்போதும் பாராட்டி பேசிக் கொண்டிருக்கிறார் அதற்கு என்ன காரணம் என்று கேட்பார்கள். அதற்கு வேறு ஒரு காரணமும் இல்லை, அது சந்தானம் அது தான் காரணம். சந்தானம் கேரக்டர் அப்படி. அதனால் அவர் அப்படி இருக்கிறார். இதில் வேறு எதுவும் இல்லை என்று சொல்லுவேன். நாம எத்தனையோ பேருக்கு ஹெல்ப் பண்ணி இருப்போம் ஆனால் எல்லாரும் அதை மனதில் வைத்து நம்மிடம் நன்றி சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும், நம்மை பாராட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்று யாரும் யோசிக்க கூடாது.
மாறாத குணம்
இப்படி யோசித்து யாருக்கும் உதவி செஞ்சால் அது உதவியே இல்ல. அப்படி ஒரு உதவி செய்யாமலே இருக்கலாம். ஆனால் சந்தானம் என்னை பற்றி பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார் என்றால் அது அவருடைய கேரக்டர். அவர் நாங்கள் வல்லவன் திரைப்படத்தில் பணியாற்றும் போது எப்படி இருந்தாரோ அதேபோலத்தான் இப்போது வரைக்கும் இருக்கிறார். அவருடைய நட்பிலும், பேச்சிலும் எந்த மாற்றமும் கிடையாது.
தொடரும் நட்பு
அவருடைய மாறாத கேரக்டரால் தான் அவருடன் ஆரம்பத்தில் இருந்தவர்கள் இன்னும் அதே நட்புடன் அவர் படத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். அதுபோல இந்த திரைப்படத்திற்கு ஆர்யாவை பற்றியும் சொல்ல வேண்டும் ஆர்யா தன்னுடைய நண்பர் சந்தானத்திற்காக பணத்தை புரொடியூஸ் பண்ணி இருக்கிறார். இந்த படம் வெற்றி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
சிம்பு ஆதங்கம்
அதேபோல என்னுடைய டைரக்டரை என்ன பண்ணி வச்சிருக்கீங்க? உங்களை சும்மா விட மாட்டேன்... என்று ஜாலியாக சிரித்தபடியே கௌதம் வாசுதேவனை காமெடி வில்லனாக்கியது குறித்து பேசியிருக்கிறார். கௌதம் வாசுதேவன் தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களையும் இயக்கி நடித்திருக்கிறார். அதிலும் மின்னலே, வாரணம் ஆயிரம், காக்க காக்க, உன்னை அறிந்தால், விண்ணைத்தாண்டி வருவாயா, தங்க மீன்கள் உட்பட பல திரைப்படங்களை இயக்கி பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். ஆனால் இப்போது அவர் காமெடி கேரக்டரில் நடித்தது தான் பலரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கௌதம் மேனன் காட்சிகள் திரைப்படத்தில் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications