Simbu: விஜய்யின் ஜனநாயகனுக்காக சிம்பு வெளியிட்ட பதிவு.. இதை கவனிச்சீங்களா? ஹைப் ஏறுதே
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் உருவான "ஜனநாயகன்" திரைப்படம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள், சர்ச்சைகள் மற்றும் அழுத்தங்களுக்கு மத்தியில், தமிழ் திரையுலகமே ஒன்றாக விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், நடிகர் சிலம்பரசன் (சிம்பு), தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் நடிகர் விஜய்க்கு மனமார்ந்த ஆதரவை தெரிவித்துள்ளார்.
"Dear @actorvijay anna,
Setbacks have never stopped you.
You've crossed bigger storms than this.
This too shall pass.
Real Thiruvizha begins on the day #Jananayagan releases." என்று பதிவிட்ட சிம்புவின் இந்த வார்த்தைகள், ரசிகர்களிடையே மட்டுமல்லாமல் திரையுலகிலும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
'ஜனநாயகன்' திரைப்படம், விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள ஒரு முக்கிய அரசியல் பின்னணியுடைய படம் என்பதால், இதன் வெளியீடு குறித்து ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமும் ஆவலுடன் காத்திருந்தது. ஆனால் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சென்சார் நடைமுறை தாமதங்கள், கடைசி நேரத்தில் படத்தின் ரிலீஸை பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே முன்பதிவுகள் பல மையங்களில் தொடங்கப்படாமலும், தியேட்டர் ஒதுக்கீடுகளிலும் குழப்பம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனநாயகன் படத்தை சுற்றிய சர்ச்சைகள்
பொங்கல் வெளியீட்டை குறிவைத்து தயாராகி வரும் ஜனநாயகன் திரைப்படம், தணிக்கை தொடர்பான சிக்கல்கள், வெளியீட்டு தேதியைச் சுற்றிய குழப்பங்கள், அரசியல் பின்னணியிலான விமர்சனங்கள் உள்ளிட்ட பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இதனை விஜய்க்கு எதிரான திட்டமிட்ட அழுத்தமாகவே அவரது ரசிகர்களும் ஆதரவாளர்களும் பார்க்கின்றனர்.
திரையுலகமே ஒன்றாக ஆதரவு
சிம்புவைத் தொடர்ந்து, பல இயக்குநர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் சமூக வலைதளங்களில் விஜய்க்கு ஆதரவாக பதிவுகள் வெளியிட்டு வருகின்றனர். "விஜயை தடுக்க முடியாது", "ஜனநாயகன் வெளியாகும் நாள் தான் உண்மையான திருவிழா" போன்ற ஹேஷ்டேக்கள் டிரெண்டாகி வருகின்றன.
அரசியல் வட்டாரங்களிலும் ஆதரவு
திரையுலகத்தைத் தாண்டி, சில அரசியல் பிரபலங்களும் வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்."கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்", "ஒரு கலைஞரை மிரட்டல்களால் அடக்க முடியாது" போன்ற கருத்துகள் அரசியல் தரப்பிலிருந்தும் வெளிப்படுகிறது.
ரசிகர்களின் நம்பிக்கை
இதற்கிடையில், விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒருங்கிணைந்து,
#StandWithVijay
#ReleaseJananayagan
#RealThiruvizhaBegins
போன்ற ஹேஷ்டேக்களுடன் ஆதரவு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ரவி மோகனின் பதிவில், மனம் உடைந்தது விஜய் அண்ணா, ஒரு சகோதரனாக.. உங்களுடன் கோடிக்கணக்கான சகோதரர்களில் ஒருவராக நிற்கிறேன். உங்களுக்கு ஒரு தேதி தேவை இல்லை, நீங்கள் தான் தொடக்கம். அந்த தேதி எப்போது வந்தாலும் பொங்கல் அப்போதுதான் தொடங்கும் என்று விஜய்க்கு சப்போர்ட் கொடுத்திருப்பது ரசிகர்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது.
எத்தனை தடைகள் வந்தாலும், விஜயின் திரைப் பயணத்தில் இது இன்னொரு சோதனை மட்டுமே என்றும், "ஜனநாயகன் வெளியாகும் நாள் தான் உண்மையான கொண்டாட்டம்" என்றும் ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
-
Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்! -
திருப்பூர் வடக்கில் சத்யபாமா.. 234-க்கு 23 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பளித்த விஜய்! -
கலைஞரே 2 தொகுதில போட்டி போட்டு இருக்கார்.. யூடியூபர் பிரசாந்த் சொன்ன புது மேட்டர்.. உண்மை என்ன? -
எம்எல்ஏன்னா சும்மா இல்லை! 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் யார்? விஜய் டிக் அடித்த நிர்வாகிகள் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்! -
தவெகவில் யார் யார் போட்டி? 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்.. விஜய்யின் நண்பர் ஸ்ரீநாத்துக்கும் சீட் -
அஜித்தை உள்ளே இழுத்த சீமான்! பொன்ராஜ் விஷயத்தில்.. விஜய்க்கு ஆதரவளிக்காததற்கு காரணம் இதுதான் -
திருச்சி கிழக்கில் தேர்தல் அலுவலகம் கூட அமைக்காத தவெக.. 25 நாட்களில் விஜய்யால் மாற்றிவிட முடியுமா? -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான் -
விஜய் பற்றிய சர்ச்சைகளுக்கு, வாணி போஜன் சொன்ன அந்த வார்த்தை.. ஓபனா பேசிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ் -
பெண்களுக்காக புகார் கொடுக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கு? உங்களுக்கு போட்டியே நான் தான்! ஜூலியின் புது வீடியோ












Click it and Unblock the Notifications