Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த படத்திற்கு தியேட்டர்ல கூட்டமே இல்ல, வசூல் மட்டும் பல கோடின்னு சொல்றாங்க! ஓபனாக தாக்கி பேசிய சிம்ரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகை சிம்ரன் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது, பெரிய நடிகர்கள் நடித்த படம் வசூல் மட்டும் பல கோடினு சொல்லுறாங்க. ஆனா தியேட்டர்ல போய் பார்த்தா கூட்டமே இல்லை என்று சொல்லி இருக்கிறார். இது சோசியல் மீடியாவில் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறது. சிம்ரன் எந்த நடிகரை பற்றி இப்படி சொன்னார் என்று கேள்விகளும் குவிந்து வருகிறது.

நடிகை சிம்ரன் ஹிந்தி படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானாலும் நடிகர் விஜய் நடித்த ஒன்ஸ்மோர், பிரபுதேவாவுடன் விஐபி போன்ற படங்கள் மூலமாகத்தான் தமிழில் பிரபலமானார். அந்த படங்கள் இரண்டுமே ஒரே நாளில் வெளியாகி சிம்ரனுக்கு வெற்றியை கொடுத்தது. இவர் மீது ஒரு பார்வையும் அனைவருக்கும் வந்தது.

Simran Tamil cinema

அதைத் தொடர்ந்து விஜய், சூர்யா சேர்ந்து நடித்த நேருக்கு நேர் படத்திலும் சிம்ரன் நடித்திருந்தார். அடுத்ததாக இவருக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வர தொடங்கியது. அந்த நேரத்தில் தெலுங்கு படங்களிலும் நடிக்க தொடங்கியிருந்தார். 1997இல் தமிழில் நான்கு படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியானது.

பிறகு கமல்ஹாசன், அஜித், சரத்குமார், பிரசாந்த், விஜயகாந்த், அர்ஜுன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க தொடங்கி விட்டார். அதுபோல அவர் நடித்த கோவில்பட்டி வீரலட்சுமி படமும் சிம்ரனுக்கு பல விருதுகளையும் வாங்கி கொடுத்திருந்தது. சினிமாவில் புகழில் உச்சத்தில் இருக்கும்போது திருமணம் செய்து கல்யாண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

அந்த நேரத்தில் ஒரு சில திரைப்படங்களில் வில்லியாகவும் நடித்திருந்தார். இப்போது சில வருடங்களுக்கு மீண்டும் நடிக்க தொடங்கி இருக்கிறார். அதிலும் சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படம் இவருக்கு 2கே கிட்ஸ்கள் மத்தியிலும் பிரபலத்தை கொடுத்து இருக்கிறது. டூரிஸ்ட் பேமிலி தொடர்ந்து அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும் போது, பெரிய நடிகர்கள் நடித்த படம் 100 கோடி வசூல் என்று சொல்கிறார் ஆனால் தியேட்டர்ல போய் பார்த்தா கூட்டமே இல்லை என்று சிம்ரன் பேசியிருக்கிறார். இந்த பேட்டி வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் அவர் பேசும்போது, இந்த ஆண்டு வெளியானதில் டூரிஸ்ட் பேமிலி, டிராகன், 3 phk போன்ற படங்கள் நல்ல விமர்சனங்களை பெற்றது, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது.

இந்த படங்களை ஒரு வாரம் கழித்து தியேட்டர்ல போய் பார்க்கும்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் மிகப்பெரிய நட்சத்திரங்கள் நடித்த படங்கள் வலைத்தளங்களில் அத்தனை கோடி வசூல்... இத்தனை கோடி வசூல் என்று அறிவிக்கிறார்கள். ஆனால் படம் வெளியான ஒரு வாரத்தில் தியேட்டருக்கு போய் பார்த்தால் திரையரங்குகள் காலியாக தான் கிடைக்கிறது.

மக்கள் கூட்டமே இல்லாமல் வசூலில் மட்டும் பெரிய சாதனை என்று எதை வைத்து இப்படி மிகைப்படுத்தி சொல்கிறார்கள்? என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று சிம்ரன் ஓபனாக பேசி இருக்கிறார். சிம்ரன் எப்படி சொன்னது எந்த நடிகர் படத்தையாக இருக்கும் என்று விவாதம் இணையத்தில் எழுந்து இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+