குட் பேட் அக்லி படத்தின் பிரத்யேக வீடியோ காட்சியை வெளியிட்ட சிம்ரன்..திரிஷாவுக்கே டஃப் போஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தயாரிப்பில் "குட் பேட் அக்லி" திரைப்படம் கடந்த வாரத்தில் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகை சிம்ரன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். அதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அவர் நடித்த பிரத்யேக காட்சிகளை தன்னுடைய சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் அதிகமான லக்குகளை பெற்று வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்த குட் பேட் அக்லி திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் அஜித் குமாருக்கு கம்பேக் கொடுத்திருக்கிறது என்று பலர் அவரை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு இந்த திரைப்படத்தில் நடித்த நடிகர்களும் தங்களுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவை பார்த்து நெகிழ்ந்து போஸ்ட் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Ajith Kumar Arjun Das Good Bad Ugly Movie

விடாமுயற்சி ஏமாற்றம்

அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆன விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. முதல் நாளே இந்த திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் பெற தொடங்கியது. அதன் தாக்கம் வசூலை அதிகமாக பாதித்தது. இரண்டு வாரங்கள் தியேட்டரில் ஓடிய போதும் ஒட்டுமொத்தமாக இந்த திரைப்படம் ரூபாய் 135 கோடி மட்டும்தான் வசூல் செய்தது. இது அஜித்துடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

அசத்திய ட்ரெய்லர்

சில வருடங்கள் காத்திருப்புககு பிறகு வந்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்திருந்ததை தொடர்ந்து குட் பேட் அக்லி திரைப்படம் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த திரைப்படத்திற்கான ட்ரெய்லர் வரும்போது இந்த படம் பட்டையை கிளப்பும் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். அதேபோல ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்தின் ஃபேன் பாய் மொமண்டை சரியாக நிவர்த்தி செய்து இருக்கிறார் என்று ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் திரிஷா

அதே நேரத்தில் இந்த திரைப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பழைய திரைப்படங்களில் ஹிட்டான பாடல்கள் பல இந்த திரைப்படத்தில் இடம் பிடித்திருப்பதை சிலர் பாராட்டி வருகின்றனர். ஒரு சிலர் அதை விமர்சித்து வருகின்றனர். அதுபோல இந்த திரைப்படத்தில் திரிஷா ஆறாவது முறையாக அஜித்துடன் ஜோடியாக நடித்திருக்கிறார்.

முதல் நாள் வசூல்

அதுபோல வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருக்கிறார். இவர்களோடு சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், பிரபு, சிம்ரன் என அதிகமான நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். மைத்ரி மூவி மேக்கர் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் நாள் வசூல் நேற்று மாலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி குட் பேட் அக்லி திரைப்படம் முதல் நாளில் 30.09 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது.

சிம்ரன் போஸ்ட்

இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு திரிஷா திரைப்படத்தில் காட்டப்படாத தன்னுடைய சில காட்சிகளை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருந்தார் அதை தொடர்ந்து நடிகை சிம்ரன் இன்று தன்னுடைய BTS புகைப்படங்கள் மற்றும் வீடியோஸை சோசியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதில் த்ரிஷாவிற்கு எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் லைக்குகள் கொடுத்து இருக்கிறார்களோ அதேபோல சிம்ரனையும் கொண்டாடி வருகிறார்கள். சிம்ரன் இந்த வயதிலும் இளம் நடிகைக்கு டஃப் கொடுக்கிறாரே, அவருடைய ஒரே காட்சி படத்திற்கு பெரும் பலத்தை கொடுத்தது என்று ஆகா ஓகோ என சிம்ரனை பாராட்டி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+