விஜய் டிவி மகாநதி சீரியலில் திவ்யா கணேஷுக்கு பதிலாக சன் டிவி கதாநாயகி.. முதல் நாளே இப்படியா ஆகணும்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியலில் கங்கா கேரக்டரில் நடித்து வந்த நடிகை திவ்யா கணேஷ் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதால் மகாநதி சீரியலில் இருந்து விலகியதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக சன் டிவியில் சிங்க பெண்ணே சீரியலில் நடித்துக் கொண்டிருந்த நடிகை அறிமுகமாகி இருக்கிறார்.
விஜய் டிவியில் கடந்த ஆண்டு முதல் மகாநதி சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலை இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் தந்தையை இழந்த நான்கு சகோதரிகளின் உணர்வுபூர்வமான கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் கதாநாயகியாக லட்சுமி பிரியா நடித்து வருகிறார், அவரோடு திவ்யா கணேஷ் மற்றும் ஆதிரை, காவியா ஆகியோர் சகோதரிகளாக நடித்து வருகிறார்.

இவர்களின் அப்பாவாக சரவணன் நடித்திருந்தார். அவர் சீரியலில் இறந்து போவது போன்று கதை வைத்திருக்கின்றனர். அம்மாவாக சுஜாதா சிவகுமாரும் நடிக்கிறார். ஏற்கனவே கங்கா கேரக்டரில் ஆரம்பத்தில் ஒரு நடிகை நடித்திருந்தார். அவர் திடீரென்று விலகியதும் அவருக்கு பதிலாக தான் திவ்யா கணேஷ் நடித்திருந்தார். ஆனால் அவர் நேற்று தான் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திவ்யா கணேஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரால் மகாநதி சூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதால் அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததால் வேறு வழியின்றி திவ்யா கணேசுக்கு பதில் வேறு நடிகையை தேர்வு செய்து உள்ளனர் என்றும் இதனால் இனி மகாநதி சீரியலில் நான் கங்காவாக வரமாட்டேன், புதியதாக கங்காவாக வரும் நடிகைக்கு ரசிகர்கள் சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று திவ்யா கணேஷ் கேட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
அதோடு அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு இரண்டு நிலையில் இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி அவருடைய உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தி வந்தனர். இது ஒரு பக்கம் இருக்க மகாநதி சீரியலில் நடித்து கங்கா கேரக்டரில் யார் நடிப்பார்கள் என்று எதிர்பார்ப்பும் இருந்தது.
இந்த நிலையில் திவ்யா கணேஷுக்கு பதிலாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் நடித்து வந்த நடிகை தாரணி இன்று முதல் இந்த சீரியலில் கங்காவாக அறிமுகம் ஆகி இருக்கிறார். அவருடைய முதல் காட்சியே அவருடைய தங்கையை போட்டு அடிப்பது போன்று தான் இருக்கிறது. இனி இவருடைய நடிப்பு எதார்த்தமாக கங்கா கேரக்டரில் இருக்குமா? இல்லையா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications